ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

அவன் கோடீஸ்வரன் என காசுக்காக மட்டும் புருசனை வளைத்து போட்ட 5 நடிகைகள்.. ஜெயில் வரை சென்ற மகாலட்சுமியின் ராசி

5 Actresses Married Rich Husbands: சினிமாவில் ஆச்சரியப்படுத்தும் அழகுடைய நடிகைகள் சிலர், சம்பந்தமே இல்லாமல் பணப்பசை அதிகம் இருப்பவர்களை வயது வித்தியாசம் பார்க்காமல் திருமணம் செய்து கொள்கின்றனர். அதிலும் குறிப்பிட்டு சொல்லக்கூடிய இந்த ஐந்து நடிகைகள், காசு தான் முக்கியம் என தங்கத் தட்டு கணவர்களை வளைத்து போட்டிருக்கின்றனர்.

குட்டி ராதிகா: இயற்கை படத்தில் செம க்யூட்டாக நடித்த குட்டி ராதிகாவை அவ்வளவு சீக்கிரம் யாராலும் மறக்க முடியாது. இவர் 2000 ஆம் ஆண்டில் ரத்னகுமார் என்பவரை திருமணம் செய்து கொண்டு அதன் பின் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார். பின்பு சில வருடத்திலேயே தன்னைவிட 20 வயது மூத்தவரான கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமியை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது.

ஷில்பா ஷெட்டி: பாலிவுட் நடிகையான ஷில்பா ஷெட்டி, குஷி படத்தில் ‘மெக்கோரினா மெர்கோரினா’ பாடலுக்கு விஜய்யுடன் நடனமாடி தமிழ் ரசிகர்களுக்கு பரீட்சியமானார். அதன் பிறகு தொடர்ந்து பாலிவுட்டில் மட்டுமே கவனம் செலுத்தி நடித்து வருகிறார். முன்னணி நடிகையான இவர், கடந்த 2009 ஆம் ஆண்டு தொழிலதிபர் ராஜ் குந்த்ராவை கரம் பிடித்தார். திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட தொழில் செய்வதில் அதிகம் கவனம் செலுத்தினார். இந்த தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். சமீபத்தில் ஷெல்பாவின் கணவர், பெண்களை ஏமாற்றி பலான வீடியோ எடுத்த விவகாரத்தில் சிக்கி  கைது செய்யப்பட்டார்.

அசின்: 2000 ஆம் ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக ரவுண்டு கட்டிய அசின், 2016 ஆம் ஆண்டு மைக்ரோமேக்ஸ் நிறுவனர் ராகுல் சர்மாவை திருமணம் செய்து கொண்டார். திருமணமான கையோடு கணவருடன் செட்டில் ஆன அசின், சினிமாவிற்கு முழுக்கு போட்டு விட்டார். கணவர் கோடீஸ்வரனாக இருக்கும் போது எதற்கு  நடிக்க வேண்டும் என குடும்பம், குழந்தை குட்டிகளுடன்  வசதியாக வாழ்ந்து வருகிறார்.

Also Read: மொத்தமாக பட்ட நாமம் போட பார்த்த ரவீந்தர்.. மன உளைச்சலில் போன் நம்பரை மாற்றிய மகாலட்சுமி

பணக்கார கணவர்களை திருமணம் செய்து கொண்ட 5 நடிகைகள்

மகாலட்சுமி: இவருக்கு இப்படி ஒரு அழகான பொண்டாட்டியா! என எல்லாரும் பொறாமைப்படும் அளவுக்கு தயாரிப்பாளர் ரவீந்தர், சீரியல் நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்து கொண்டார். மகாலட்சுமி ஏற்கனவே திருமணம் ஆகி 2வது முறையாக லிப்ரா ப்ரொடியூசர் ரவீந்தரை திருமணம் செய்து கொண்டார். தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் கப்புலாக இருக்கக்கூடிய இவர்கள், அடிக்கடி நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வயிறெரிய வைக்கின்றனர்.

நெட்டிசன்களால் எவ்வளவோ ட்ரோல் செய்தாலும் அதை எல்லாம் கொஞ்சம் கூட கண்டுக்காமல் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.  புருஷன் கோடீஸ்வரன் என்பதால் தான் ரவீந்தரை மகாலட்சுமி திருமணம் செய்து கொண்டார். ஆனா இவருடைய ராசி ரவீந்தரை பண மோசடி வழக்கில் ஜெயில் வரை செல்ல வைத்து விட்டது.

மஞ்சிமா மோகன்: நவரச நாயகன் கார்த்திக்கின் மகனான கௌதம் கார்த்திக் சமீபத்தில் நடிகை மஞ்சுமா மோகனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் முத்தையா இயக்கத்தில் வெளியான தேவராட்டம் படத்தில் சேர்ந்து நடித்ததில் இருந்து காதலிக்க துவங்கினர். கொழுக்கு முழுக்குன்னு இருக்கும் மஞ்சுமா மோகன், சினிமாவில் படிப்படியாக வளர்ந்து கொண்டிருக்கும் கௌதம் கார்த்திக்கை திருமணம் செய்து கொண்டதற்கு ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்தது.

Also Read: ரெண்டே மாதத்தில் மகாலட்சுமி கர்ப்பமா? நெகட்டிவ் விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த புகைப்படம்

- Advertisement -

Trending News