புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

கெட்ட வார்த்தையில் லியோ விஜய்க்கு டஃப் கொடுத்த 6 நடிகைகள்.. நாராசமாய் பேசிய ஜோதிகா, நயன்தாரா

Leo Vijay: நடிகர் விஜய் நடித்த லியோ படத்தின் டீசரில் அவர் ஒரு காட்சியில் கெட்ட வார்த்தை பேசி இருப்பார். அது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது. தற்போது அந்த வார்த்தை மியூட் செய்யப்பட்டு இருக்கிறது. விஜய் பேசிய அந்த வார்த்தையே வெறும் டீசர் தான். இதற்கு முன்பாக ஆறு நடிகைகள் இதுபோன்று முகம் சுளிக்கும் அளவிற்கான கெட்ட வார்த்தையை தாங்கள் நடித்த படங்களில் பேசியிருக்கிறார்கள்.

ஐஸ்வர்யா: வில்லி, காமெடி கதாபாத்திரம், குணசித்திர கேரக்டர் என எல்லாவற்றிலும் கலக்கிக் கொண்டிருக்கும் நடிகை ஐஸ்வர்யா, சூர்யா நடித்த ஆறு படத்தில் சப்போர்ட்டிங் ரோலில் நடித்திருப்பார். இதில் சவுண்டு சரோஜா என்னும் கேரக்டரில் வரும் இவர் நிறைய இடங்களில் கெட்ட வார்த்தை பேசி இருப்பார். சென்னை வட்டார மொழி கலந்த கெட்ட வார்த்தைகள் கொண்ட வசனங்கள் இவருக்கு கொடுக்கப்பட்டு இருக்கும்.

ஐஸ்வர்யா ராஜேஷ்: வெற்றிமாறன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த வடசென்னை படம் பெரிய அளவில் ஹிட்டடித்தது. இந்த படத்தில் அவர் வாய்ப்பு வாங்கியது கெட்ட வார்த்தை பேசி தான் என பல பேட்டிகளில் சொல்லியிருக்கிறார். இதுவரை எந்த படங்களிலும் இல்லாத அளவிற்கு இந்த படத்தில் ரொம்பவும் முகம் சுளிக்கும் அளவிற்கு இவர் நிறைய கெட்ட வார்த்தை நிறைந்த வசனங்களை பேசி இருப்பார்.

ரீமாசென்: நடிகை ரீமா சென்னுக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அடையாளம் கொடுத்த படம் ஆயிரத்தில் ஒருவன். இந்த படத்தில் ரொம்பவும் தைரியமான வில்லி கேரக்டரில் இவர் நடித்திருப்பார். இதில் நிறைய இடங்களில் ரீமாசென் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கெட்ட வார்த்தை பேசி இருப்பார். இந்த படத்தில் ரீமா சென்னுக்கு பின்னணி குரல் கொடுத்தது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜோதிகா: இயக்குனர் பாலா இயக்கத்தில் ஜோதிகா நடித்த படம் நாச்சியார். இந்த படத்தில் அவர் போலீஸ் கெட்டப்பில் நடித்திருப்பார். இதில் ஒரு காட்சியில் ஜோதிகா கெட்ட வார்த்தை பேசி இருப்பார். இதன் ட்ரெய்லர் வெளியான பொழுதே நிறைய விமர்சனங்கள் எழ ஆரம்பித்து விட்டன. சிவக்குமார் வீட்டின் மருமகளாக இருந்து கொண்ட ஜோதிகா இப்படி பேசியது அப்போது பெரிய அளவில் வைரல் ஆகியது.

கீர்த்தி சுரேஷ்: இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் இணைந்த நடித்த படம் தான் சாணி காகிதம். இந்த படம் பழிவாங்கும் திரை கதையை மையமாகக் கொண்டது. இதில் செல்வா மற்றும் கீர்த்தி இருவரும் அண்ணன் தங்கையாக நடித்திருப்பார்கள். இந்த படத்தின் ஒரு காட்சியில் கீர்த்தி சுரேஷ் கெட்ட வார்த்தை பேசி இருப்பார்.

நயன்தாரா: ரௌடி பிக்சர்ஸ் தயாரிப்பில் நயன்தாரா நடித்த நெற்றிக்கண் படத்தை இயக்குனர் மிலிந்த் ராவ் இயக்கியிருந்தார். இந்த படம் பார்வையற்ற பெண் ஒரு சைக்கோ கில்லரை தேடும் கதையை மையமாகக் கொண்டது. நெற்றிக்கண் படத்தில்தான் முதன் முதலில் நயன்தாரா முகம் சுளிக்கும் அளவிற்கு கெட்ட வார்த்தையை பேசி நடித்திருந்தார்.

- Advertisement -

Trending News