டாப் 5 தெலுங்கு ஹீரோக்களின் சொத்து மதிப்பு.. அடேங்கப்பா ராம்சரண் இத்தனை கோடிக்கு அதிபதியா

5 Tollywood heroes net worth: பெரும்பாலும் மலையாள ஹீரோக்களுக்கு இருக்கும் வரவேற்பு தெலுங்கு ஹீரோக்களுக்கு தமிழ் சினிமா ரசிகர்களிடையே இருக்காது. ஆனால் பால் இந்தியா திரைப்படங்கள் வெளிவர ஆரம்பித்த பிறகு தெலுங்கு சினிமா ஹீரோக்களையும் ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்திருக்கிறார்கள். அப்படி இப்போதைக்கு தெலுங்கு சினிமாவில் டாப்பை இடத்தில் இருக்கும் ஹீரோக்களின் சொத்து விவரங்களை பார்க்கலாம்.

ராம் சரண்: தெலுங்கு சினிமா ஹீரோக்களில் சொத்து மதிப்பின்படி ராம்சரண் முதலிடத்தில் இருக்கிறார். இவருடைய ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 1370 கோடியாகும். படத்திற்கு 90 முதல் 100 கோடி வரை சம்பளமாக பெறுகிறார். மேலும் விளம்பரங்களுக்கு 1.8 கோடி சம்பளமாக பெறுகிறார். கோனிடெல்லா தயாரிப்பு நிறுவனம், போலோ ரைடிங் கிளப் மேலும் ட்ரு ஜெட் விமான சேவை போன்ற பிசினஸ்களையும் நடத்தி வருகிறார்.

ஜூனியர் என்டிஆர்: இந்திய அளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஜூனியர் என்டிஆர் முதலிடத்தில் இருப்பதாக 2012 ஆம் ஆண்டு வெளியான சர்வே ஒன்று தெரிவித்திருந்தது. இவருடைய சொத்து மதிப்பு 800 முதல் 1000 கோடியாகும். மேலும் இவர் சொந்த தயாரிப்பு நிறுவனமும் நடத்தி வருகிறார்.

அல்லு அர்ஜுன்: நடிகர் அல்லு அர்ஜுனின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 360 கோடி. மேலும் அவர் நிறைய பிசினஸ்களில் முதலீடு செய்து வருகிறார். கீதா ஆர்ட்ஸ் என்னும் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். AAA சினிமாஸ் என்னும் பெரிய மல்டிபிளக்ஸ் திரையரங்கம் இவருக்கு சொந்தமானது.

மகேஷ் பாபு: மகேஷ் பாபுவின் சொத்து மதிப்பு 273 கோடி ஆகும். இவருடைய மாத வருமானம் 2 கோடி மற்றும் ஆண்டு வருமானம் 120 கோடி ஆகும். மகேஷ்பாபு ஒரு படத்திற்கு 78 கோடி சம்பளமாக பெறுகிறார். மேலும் விளம்பரங்களுக்கு 10 கோடி சம்பளமாக பெறுகிறார்.

பிரபாஸ்: நடிகர் பிரபாஸின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 241 கோடியாகும். இவருடைய சம்பளம் தற்போது 100 கோடி. மேலும் 60 கோடியில் சொந்தமாக பங்களா ஒன்று இவருக்கு இருக்கிறது. ஆடி, பிஎம்டபிள்யூ என பல சொகுசு கார்களையும் இவர் வைத்திருக்கிறார்.

Next Story

- Advertisement -