ராம் சரண் மனைவியின் சொத்து மதிப்பு மட்டும் இத்தனை கோடிகளா.? அம்மாடியோவ்! அவரையே மிஞ்சிய பிசினஸ்

Upasana Ramcharan net worth: புடிச்சாலும் புளியங்கொம்பா புடிக்கணும்னு சொல்லுவாங்க. அது ராம்சரண் கல்யாணத்தில் சரியாக இருக்கிறது. தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் அப்பா பெயரை காப்பாற்றும் அளவுக்கு பெரிய ஹீரோவாக இருக்கிறார்.

RRR படம் அவரை உலக அளவில் ட்ரெண்ட் ஆக்கியது. தற்போது இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் படத்தில் நடித்து வருகிறார். ராம்சரனை தெரிந்த அளவுக்கு அவருடைய மனைவி உபாசனாவை தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

அம்மாடியோவ் புளியங்கொம்பா தான் புடிச்சு இருக்காரு

இதற்கு காரணம் பெரும்பாலும் அவர் மீடியாவில் தன்னை காட்டிக் கொள்வதில்லை. சமீபத்தில் அவருடைய சொத்து மதிப்பு வெளியாகி எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது. அப்பல்லோ ஹாஸ்பிடல் குழுமத்தின் தலைவர் பிரதாப் ரெட்டியின் பேத்தியைத்தான் ராம்சரண் திருமணம் செய்திருக்கிறார் என்பது ஓரளவுக்கு நாம் எல்லோருக்கும் தெரியும்.

ராம்சரண் சொத்து மதிப்பை தாண்டி உபாசனாவுக்கு இருக்கும் தனியான சொத்து மதிப்பை பற்றி தற்போது பார்க்கலாம். இந்த தம்பதிகளின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 2500 கோடி ஆகும். இதில் ராம்சரனின் சொத்து மதிப்பு 1370 கோடி.

உபாசனாவின் சொத்து மதிப்பு 1130 கோடி. உபாசனா அப்பல்லோ ஹாஸ்பிடல் டிரஸ்ட் குழுவின் வைஸ் பிரசிடெண்ட் ஆக இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் பி பாஸிட்டிவ் என்னும் பத்திரிகையின் தலைமை எடிட்டராக இருக்கிறார்.

மேலும் உபாசனாவுக்கு நிறைய பிசினஸ்களில் பங்குகளும் இருக்கிறது. இந்த தம்பதி 25,000 ஸ்கொயர் ஃபீட் கொண்ட, 30 கோடி மதிப்பிலான வீட்டில் வசித்து வருகிறார்கள். கடந்த வருடம் ராம்சரண் உபாசனா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது. ராம்சரண் மற்றும் உபாசனா இருவரும் இந்தியாவிலேயே பணக்கார நட்சத்திர தம்பதிகளில் ஒருவர்.

Next Story

- Advertisement -