பெத்த கையை வளைத்துப் போட்ட ஆர்யாவின் சொத்து மதிப்பு.. ஹோட்டலிலும் கல்லாக கட்டும் ரங்க வாத்தியார் செல்லப்பிள்ளை

Actor Arya have successful hotel business and his net worth: தமிழ் திரை உலகில்  முன்னணி நடிகராக காதல், காமெடி, ஆக்சன் பல வகையிலும் கட்டம் கட்டி பெண் ரசிகர்களை அதிகம் கொண்டுள்ள நடிகர், ஆர்யா ஆவார்.

கேரளத்தை பூர்வீகமாக கொண்ட ஆர்யா 2005 ஆம் ஆண்டு விஷ்ணுவர்தன் இயக்கத்தில் வெளியான அறிந்தும் அறியாமலும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில்  அறிமுகமானார்.

தொடர்ந்து ஓரம்போ, பாஸ் என்கிற பாஸ்கரன், மதராசபட்டினம், நான் கடவுள்,ராஜா ராணி போன்ற படங்களின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்துக் கொண்டார்.

கஜினிகாந்த் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் நடிகை சாயிஷா உடன் காதல் வயப்பட்ட ஆர்யா இருவீட்டாரின் சம்மதத்துடன் 2019 ஆண்டு மணவாழ்க்கையில் இணைந்தார். 

சாயிஷா பாலிவுட் நட்சத்திரங்களான சுமேத் சைக்கால் மற்றும் சாகின்பானு ஆகியோரின் மகள் ஆவார் அதுமட்டுமின்றி பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஆன திலீப் குமாரின் பேத்தி முறை ஆவார்.

தற்போது ஆர்யா மற்றும் சாயிஷா தம்பதியருக்கு அர்யானா என்ற மகள் உள்ளார்.

ஆர்யா நடித்த சார்பட்டா பரம்பரை விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பெற்றது. இதன்பின் இவரது படங்கள் எனிமி, காதர் பாட்சா போன்ற இவரது படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாவிட்டாலும் சம்பளத்தில் மட்டும் சமரசம் செய்வதே இல்லையாம்.

ஒரு படத்திற்கு குறைந்தது ஏழு முதல்  14 வரை கோடி வரை சம்பளம் கேட்கும் ஆர்யா தயாரிப்பாளராகவும் உள்ளார். 

ஹோட்டல் பிசினஸில் கல்லா கட்டும் ஆர்யா

தற்போது சினிமாவை சைடு பிசினஸ் ஆக்கி அவரது ஹோட்டல் தொழிலை பிரதானப்படுத்தி உள்ளார். Zaitoon  மற்றும் சென்னை அடையாறில் Sea shell , பெயரில் அரேபியன் வகை உணவுகளை முன்னிலைப்படுத்தி ஹோட்டல் பிசினஸில் கல்லாகட்டி வருகிறார் ஆர்யா. 

சாமானியன் நினைத்து பார்க்காத விலையில் மேல் தட்டு வர்க்கத்தினருக்கு என மட்டுமே உருவாக்கப்படும் உணவுகளாக உள்ளது. அரபியன் வகை உணவுகள் தான் இந்த உணவகத்தின் ஸ்பெஷாலிட்டி.

ஆர்யாவிற்கு அண்ணா நகரில் நீச்சல் குளத்துடன் கூடிய பிரம்மாண்டமான சொகுசு வீடு ஒன்று உள்ளது.

கார் பிரியரான ஆர்யா பல லட்சங்கள் மதிப்பிலான மினி கூப்பர், ஆடி, பென்ஸ் என பலவகையிலும்  சொகுசு கார்களை வாங்கி அடுக்கி வைத்துள்ளாராம்.  தனது நண்பர்  நடிகர் சந்தானத்திற்கு கார் வாங்க போய் அந்த காரை இவர் வாங்கி வந்த கதையும் அரங்கேறி உள்ளது.

இவை தவிர தனது நண்பர் சந்தானம் நடிக்கும் டிடி ரிட்டன்ஸ் படத்தின் அடுத்த பாகத்தையும் நடிகர் ஆர்யா தான் தயாரிக்க உள்ளார் என்பது கூடுதல் தகவல்

இவ்வாறு  நடிகர், தயாரிப்பாளர் மற்றும் பிசினஸ் மேன் என பல துறைகளிலும் தடம் பதிக்கும் நடிகர் ஆர்யாவின் மொத்த சொத்து மதிப்பு மட்டுமே கிட்டத்தட்ட 80 கோடிக்கும் மேல். 

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்