ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

நம்ம மனசுல நச்சுனு இடத்தை பிடித்த 5 டாப் சீரியல் பிரபலங்கள்.. சின்னத்திரை ஹீரோவாக முத்திரை பதித்த கார்த்திக்

Top 5 Serial Artist: எந்த அளவிற்கு பெரிய திரையில் நடிகர் நடிகைகளுக்கு ரசிகர்கள் இருக்கிறார்களோ, அதே மாதிரி சின்னத்திரை சீரியல் நடிகர் நடிகைகளுக்கும் ஏகப்பட்ட வரவேற்பு மக்கள் மத்தியில் இருக்கிறது. அந்த வகையில் சின்னத்திரை ரசிகர்களிடமிருந்து எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில் மக்கள் மனதில் நச்சென்று இடத்தை பிடித்த டாப் 5 சீரியல் பிரபலங்கள் லிஸ்ட் வெளியாகி இருக்கிறது.

இதில் முதலிடத்தில் இருப்பது சைத்ரா ரெட்டி. இவர் ஆரம்பத்தில் நெகட்டிவ் கேரக்டரில் வில்லியாக நடித்தாலும் போகப் போக இவருடைய நடிப்பால் மக்கள் மனதை ஈர்த்துவிட்டார். அதனால் சன் டிவியில் ஹீரோயினாக கயல் என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். அப்படிப்பட்ட இவர் குடும்பத்திற்காக எந்த கஷ்டங்கள் வந்தாலும் தன் தலையில் தூக்கிக்கொண்டு போராடும் சிங்க பெண்ணாக மக்கள் மனதில் இடம் பிடித்து இருக்கிறார்.

அடுத்ததாக இரண்டாவது இடத்தில் இருப்பது குடும்ப இல்லத்தரசிகளின் மனதை கொள்ளையடித்து போராடும் தன்னம்பிக்கையுடன் நீச்சல் அடித்துக் கொண்டு வரும் சுசித்ரா செட்டி. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதுவும் பெண்கள் படிப்பறிவு இல்லாவிட்டாலும் அவர்கள் நினைத்தால் யாரையும் எதிர்பார்க்காமல் சொந்த காலில் நின்னு குடும்பத்தை வழிநடத்தலாம் என்பதற்கேற்ப உதாரணமாக நடித்துக் காட்டி வருகிறார்.

Also read: எதிர்நீச்சல் சீரியலை ஒன்னும் இல்லாமல் ஆக்கிய சிங்கப்பெண்.. ஒத்த ஆளாக நின்னு சிக்ஸர் அடிக்கும் ஆனந்தி

அடுத்ததாக வில்லன் கேரக்டரையும் தூக்கி வைத்துக் கொண்டாடும் அளவிற்கு எதார்த்தமான நடிப்பை கொடுத்து சமீபத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் மாரிமுத்து. இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அனைவரிடமும் அதிக வரவேற்பை பெற்றார். அப்படிப்பட்ட இவர் தற்போது இல்லாததால் இந்த நாடகத்தையே பார்க்க விருப்பமில்லை என்று சொல்லும் அளவிற்கு தத்துரூபமான நடிப்பை கொடுத்திருக்கிறார். அப்படிப்பட்ட இவர் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறார்.

இதனை அடுத்து சின்னத்திரை ஹீரோ என்று சொல்லும் அளவிற்கு முத்திரையைப் பெற்று தொடர்ந்து ஜீ தமிழில் ஹீரோவாக நடித்து வரும் கார்த்திக் நான்காவது இடத்தை பிடித்திருக்கிறார். இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் என்ற நாடகத்தில் ஹீரோவாக நடித்த வருகிறார். இவரை தூக்கிக் கொண்டாடும் அளவிற்கு ரசிகர்கள் ஏகப்பட்ட வரவேற்பை கொடுத்து வருகிறார்கள்.

அடுத்ததாக அடிமைப் பெண்களாக இருந்து வரும் மருமகள்களுக்கு நடுவே புத்தம் புது புரட்சியை ஏற்படுத்தி ஒரு மாற்றத்தை கொடுத்தவர் மதுமிதா. இவர் எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி என்ற கேரக்டரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அப்படிப்பட்ட இவர் ஐந்தாவது இடத்தில் இருக்கிறார். அந்த வகையில் இவர்கள் ஐந்து பேரும் மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்திருக்கிறார்கள்.

Also read: கழுத்து சுத்துன பாம்பாக பாக்கியாவை சுற்றி வரும் கோபி.. மாமியாரை எதிர்த்து பேசிய சிங்கப்பெண்

- Advertisement -

Trending News