வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

எதிர்நீச்சல் சீரியலை ஒன்னும் இல்லாமல் ஆக்கிய சிங்கப்பெண்.. ஒத்த ஆளாக நின்னு சிக்ஸர் அடிக்கும் ஆனந்தி

Singapenne: எத்தனையோ சேனல்கள் பல சீரியல்களை ஒளிபரப்பாக்கி வந்தாலும், எப்போதுமே நாடகம் என்றால் அது சன் டிவி தான் என்று சொல்லும் அளவிற்கு டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தை பிடித்திருக்கிறது. அதிலும் கடந்த பல மாதங்களாக எதிர்நீச்சல் சீரியல்தான் முதல் இடத்தை பிடித்திருந்தது. அதற்கு காரணம் பெண்கள் முன்னேற்றத்தை மையமாகக் கொண்டு வந்திருந்தாலும் குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்த மாரிமுத்துவின் எதார்த்தமான நடிப்பு தான்.

ஆனால் தற்போது இவர் இல்லாததால் நாடகமே தலைகீழாக மாறிக் கொண்டு வருகிறது. அதுவும் மக்களை எரிச்சல் படுத்தும் அளவிற்கு வசனங்கள் மற்றும் எப்ப பார்த்தாலும் அழுகாட்சி சீனை வைத்து டென்ஷன் படுத்துகிறது. அதனாலையே இந்த நாடகத்தை பார்ப்பதற்கு விருப்பம் இல்லாமல் பலரும் வெறுத்துப் போய்விட்டார்கள். இந்த காரணத்திற்காக டிஆர்பி ரேட்டிங்கில் ரொம்பவே பின்னோக்கிப் போய்விட்டது.

அதனால் தற்போது எதிர்நீச்சல் சீரியலை ஒன்னும் இல்லாமல் ஆக்கும் அளவிற்கு சிங்கப்பெண்ணே நாடகம் மக்கள் மனதில் ஒய்யாரத்திற்கு போய்விட்டது. இதில் கிராமத்து பெண்ணாகவும் துணிச்சலோடு தவறுகளை தட்டிக் கேட்கும் விதமாக ஒத்த ஆளாக ஆனந்தி ஸ்கோர் பண்ணிக் கொண்டு வருகிறார். அத்துடன் இதில் ஹீரோவாக அன்பு கேரக்டர் அனைவரது மனதிலும் இடம் பிடித்திருக்கிறது.

Also read: கழுத்து சுத்துன பாம்பாக பாக்கியாவை சுற்றி வரும் கோபி.. மாமியாரை எதிர்த்து பேசிய சிங்கப்பெண்

பொதுவாக ஒரு பழமொழி உண்டு ஒருவரை பார்த்ததும் பிடிக்காது பார்க்க பார்க்க தான் பிடிக்கும் என்று சொல்வார்கள். அதைப்போல ஆனந்திக்கு ஆரம்பத்தில் இருந்து என்னமோ அன்புவை கண்டாலே பிடிக்காமல் போய்விட்டது. அதனால் தொட்டதற்கெல்லாம் இவர்தான் தப்பானவர் என்று தவறாக நினைத்துக் கொண்டு அன்புவை வெறுத்துக்கொண்டு வருகிறார்.

அதனால் தற்போது கார்மெண்ட்ஸ் இல் நடந்த ஒரு அசம்பாவிதத்தால் அன்பு தான் தவறானவர் என்று போலீஸிடம் ஆனந்தி சொல்லிவிடுகிறார். இதனால் போலீசும் அன்புவை ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போகிறார்கள். ஆனந்தியின் அடி மனதில் அன்பு கெட்டவர் என்று நினைத்து விட்டார். ஆனால் இதன் பிறகு கார்மெண்ட்ஸ்சில் உண்மையாக என்ன சம்பவம் நடந்தது என்ற விஷயம் ஆனந்திக்கு தெரிய வந்ததும் அன்பு மேல் தவறு இல்லை என்று புரிந்து கொள்ள வாய்ப்பு இருக்கிறது.

அதன் பிறகு வழக்கம் போல் மோதலில் ஆரம்பித்த இவர்களுக்குள் சண்டை காதலாக மாறப் போகிறது. இதற்கிடையில் மகேஷ் ஆனந்தி காதல் ஜெயிக்குமா அல்லது அன்பு ஆனந்தி காதல் கை கொடும்மா என்பது தான் மீதமுள்ள கதையை வைத்து நகர போகிறது.

Also read: அப்பத்தா இறந்ததால் எதிர்நீச்சல் போட போகும் மருமகள்கள்.. சீக்ரட்டாக காய் நகர்த்தும் ஜீவானந்தம்

- Advertisement -

Trending News