வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

கழுத்து சுத்துன பாம்பாக பாக்கியாவை சுற்றி வரும் கோபி.. மாமியாரை எதிர்த்து பேசிய சிங்கப்பெண்

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், பழைய குருடி கதவைத் திறடி என்பதற்கு ஏற்ப எதற்கெடுத்தாலும் பாக்யாவை குற்றம் சொல்லி வருகிறார் கோபியின் அம்மா. இடையில் பாக்யாவை தலையில் தூக்கி வைத்து ஆடிய இவர் தற்போது கோபி கூட சேர்ந்துக்கிட்டு பாக்கியவை வறுத்தெடுக்கிறார்.

அதாவது பொருட்காட்சியில் எப்படியாவது சமையல் ஆர்டரை கைப்பற்றி விட வேண்டும் என்று பாக்கியா படாத பாடு பட்டு வருகிறார். அதற்காக முன் பணமாக ஒரு லட்ச ரூபாய் தொகையை கட்டி இருக்கிறார். அந்த வகையில் எப்படியும் இந்த ஆர்டர் நம் கைக்கு வந்து விடும் என்ற நம்பிக்கையுடன் பாக்கியா இருந்தார்.

ஆனால் அது தற்போது குழுக்கள் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு வேறொரு நபருக்கு அந்த ஆர்டர் போய்விட்டது. இதைக் கேள்விப்பட்ட பாக்யாவின் மாமியார் இனி நீ எந்த வேலையும் பார்க்க வேண்டாம். வீட்டு வேலையும் குழந்தையும் மட்டும் பார்த்துட்டு இருந்தால் போதும் என்று கூறுகிறார். அத்துடன் கோபியும் இதுதான் சான்ஸ் என்று பாக்கியா தோற்றுப் போய்விட்டார் என்று வஞ்சகமாக பேசுகிறார்.

Also read: அப்பத்தா இறந்ததால் எதிர்நீச்சல் போட போகும் மருமகள்கள்.. சீக்ரட்டாக காய் நகர்த்தும் ஜீவானந்தம்

இதையெல்லாம் பார்த்த பாக்கியா வழக்கம்போல் அமைதியாக இல்லாமல் மாமியாரிடம், இது என்னுடைய காசு நான் கஷ்டப்பட்டு சம்பாதித்தது. இதை எப்படி வாங்க வேண்டும் என்று எனக்கு தெரியும் இதில் நீங்க தலையிட வேண்டாம். அத்துடன் மற்றவர்களை அண்டி பொழைக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. எப்படி இந்த குடும்பத்தை வழிநடத்த வேண்டும் என்று எனக்குத் தெரியும் நீங்கள் தலையிட வேண்டாம் என்று மாமியாரை எதிர்த்து துணிச்சலாக பேசி விட்டார்.

அத்துடன் கோபியையும் சும்மா வந்து என்னை கடுப்பேற்றி பார்க்க வேண்டாம். உங்க வேலைய மட்டும் பார்த்துகிட்டு இருங்க. என்ன பண்ணனும் எப்படி முன்னேற வேண்டும் என்று எனக்கு தெரியும். உங்க அட்வைஸ் எனக்கு தேவை இல்லை என்று கோபியை லெப்ட் அண்ட் ரைட் வாங்கி விடுகிறார்.

இதனைத் தொடர்ந்து எழிலிடம் எப்படியும் என்னிடம் இருந்து கைநழுவி போன அதே ஆர்டர் எனக்கு திரும்பி கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதை வைத்து நான் ஜெயித்து காட்டுவேன் என்று தன்னம்பிக்கையுடன் பேசுகிறார். அந்த வகையில் பழனிச்சாமி மூலமாக பாக்கியாவிடமிருந்து போன பொருட்காட்சி சமையல் ஆர்டர் மறுபடியும் பாக்கியாவிற்கு வந்து சேரும். அப்பொழுது பாக்யா ஜெயித்து எல்லாருடைய மூஞ்சிலும் கரியை பூசப் போகிறார்.

Also read: மாமியாருக்கு சரியான சவுக்கடி கொடுத்த மருமகள்.. அரண்டு போன பாக்யா

- Advertisement -

Trending News