அதிக லாபத்தை பெற்றுத் தந்த 12 படங்கள்.. பாதிக்கு பாதி சம்பவம் செய்த தளபதி

தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபீஸ் வெற்றி பெற்ற படங்களின் எண்ணிக்கை அதிகம். ரஜினி, விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் பாக்ஸ் ஆபிஸில் வசூலை வாரி குவித்தது. இந்தப் படங்கள் அதிக வசூல் செய்ததோடு, விநியோகஸ்தர்களின் பங்கின் அடிப்படையிலும் பல புதிய சாதனைகள் படைத்துள்ளது. அவ்வாறு தமிழ்நாட்டில் அதிக விநியோகஸ்தர் பங்கினை பெற்ற 10 படங்களை பார்க்கலாம்.

மாஸ்டர் : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தின் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகன் மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் மாஸ்டர். இப்படம் வசூலில் வேட்டையாடியது. மேலும் படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகி முதல் இடத்தை பிடித்துள்ளது. இப்படம் 83 கோடி விநியோகஸ்தர் பங்கை பெற்று தந்துள்ளது.

பிகில் : அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் பிகில். பெண்களின் முன்னேற்றத்தை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டு இருந்தது. மேலும் ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. இப்படம் 81.2 கோடி வினியோகஸ்தர் பங்கினை ஈட்டித் தந்தது.

பாகுபலி 2 : ராஜமௌலி இயக்கத்தில் பிரமாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் பாகுபலி 2. இப்படத்தில் பிரபாஸ், ராணா டகுபதி, நாசர், ரம்யா கிருஷ்ணன், அனுஷ்கா, தமன்னா மற்றும் பலர் நடித்திருந்தனர். பாகுபலி முதல் பாகம் இப்படத்தின் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது. மேலும் இப்படம் வெளியான அனைத்து மொழிகளிலும் 81 கோடி விநியோகஸ்தர் பங்கைப் பெற்றுள்ளது.

சர்கார் : ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய், வரலட்சுமி சரத்குமார், கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடிப்பில் 2018 இல் வெளியான திரைப்படம் சர்கார். இப்படம் ரிலீசுக்கு முன்பே பல சர்ச்சைகளை சந்தித்தது. ஆனால் படம் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் நல்ல லாபம் பெற்றது. இப்படம் விநியோகஸ்தர்களுக்கு 75 கோடியை பெற்று தந்தது.

மெர்சல் : அட்லி இயக்கத்தில் விஜய், நித்யா மேனன், சமந்தா, எஸ் ஜே சூர்யா மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் மெர்சல். இப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்ப்பை பெற்றிருந்தது. மேலும் இப்படம் 72 கோடி விநியோகஸ்தர் பங்கை ஈட்டியுள்ளது.

விஸ்வாசம் : சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் விசுவாசம். குடும்ப சென்டிமென்ட் ஆன இப்படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. மேலும் விசுவாசம் படம் தியேட்டர்களில் வெற்றிகரமாக பல நாட்கள் ஓடியது. இப்படம் 70 கோடியை பெற்றுத்தந்தது.

பீஸ்ட் : நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன் மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் பீஸ்ட். இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஆனால் பாக்ஸ் ஆஃபிஸில் ஓரளவு நல்ல லாபத்தை ஈட்டியது. அதாவது பீஸ்ட் படம் விநியோகஸ்தர் பங்கினை 67 கோடி பெற்றுத்தந்தது.

எந்திரன் : இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்ட பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட படம் எந்திரன். இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் மற்றும் பலர் நடித்திருந்தனர். தமிழ்நாட்டில் எந்திரன் படம் 63 கோடி விநியோகஸ்தரின் பங்கை ஈட்டித் தந்துள்ளது.

2.o : எந்திரனுக்குப் பிறகு ஷங்கர் ரஜினிகாந்த் கூட்டணியில் உருவான 2.0 படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல லாபத்தைப் பெற்றுத் தந்தது. உலகம் முழுவதும் வெளியான இப்படத்திற்கு பாராட்டுக்கள் கிடைத்தது. இப்படம் 61.5 விநியோகஸ்தர் பங்கை ஈட்டித் தந்தது.

பேட்ட : கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 2019 இல் வெளியான திரைப்படம் பேட்ட. இப்படத்தில் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, சிம்ரன், திரிஷா, சசிக்குமார் மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல லாபத்தை பெற்றது. மேலும் விநியோகஸ்தர் பங்கில் 55 கோடி வசூலை பெற்றுத்தந்தது.

தெறி : அட்லி இயக்கத்தில் விஜய், எமி ஜாக்சன், சமந்தா, ராதிகா மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் தெறி. இப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். ரசிகர்கள் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. இப்படம் 52 கோடி வசூல் செய்த பதினோராவது இடத்தில் உள்ளது.

வலிமை : ஹெச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் வலிமை. இப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஆனால் வசூலில் ஓரளவு நல்ல லாபத்தை பெற்றுள்ளது. வலிமை படம் 50 கோடி விநியோகஸ்தர் பங்கை பெற்று தந்துள்ளது.

Next Story

- Advertisement -