விளையாட்டை மையமாக வைத்து வெளியான டாப் 10 படங்கள்.. தேசிய விருதை அள்ளி குவித்த வெற்றிமாறனின் ஆடுகளம்

விளையாட்டை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்ததுடன் உத்வேகத்தையும் ஏற்படுத்தும் படமாக அமைந்துள்ளது. அதிலும் இயக்குனர் வெற்றிமாறனின் ஆடுகளம் திரைப்படம் தேசிய விருதுகளை வாங்கி குவித்தது குறிப்பிடத்தக்கது.

ஆகையால் விளையாட்டை மையமாகக் கொண்டு வெளியான சூப்பர் ஹிட் படங்களின் வரிசையில் ஜீவா 10-வது இடத்தையும், வெண்ணிலா கபடி குழு 9-வது இடத்தையும், எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி 8-வது இடத்தையும், பத்ரி 7-வது இடத்தையும் பிடித்துள்ளது.

கனா: 2018 ஆம் ஆண்டு இயக்குனர் அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் விவசாயம் மற்றும் கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் ஆகும். இதில் சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், தர்ஷன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார். ஆண்களுக்கு நிகராக பெண்களும் கிரிக்கெட்டை விளையாடுவதை மையப்படுத்தி வெளிவந்த இந்த படம் விமர்சர்களால் பெரிதும் பாராட்டப் பெற்ற படமாக அமைந்தது.

ஸ்போர்ட்ஸ் படங்களுக்கு உரிய டெம்ப்ளேட்டுகளை உடைத்து அனைவரையும் கவனத்தை ஈர்த்த படமாகவும் உள்ளது. அது மட்டும் இல்லாமல் இன்றைய விவசாயிகளின் நிலைமையையும் அவர்களுக்கு ஏற்படும் சிக்கல்களையும் வெளிப்படுத்துவதால் கனா படம் மக்களுக்கு ஒரு செய்தி திரைப்படம் ஆக அமைந்துள்ளது. இப்படம் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றது. கனா திரைப்படம் விளையாட்டை மையமாகக் கொண்டு வெளியான திரைப்படங்களின் வரிசையில் 6-வது இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆடுகளம்: 2011 ஆம் ஆண்டு இயக்குனர் வெற்றிமாறனின் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் குமார் இசையில் வெளிவந்த திரைப்படம் ஆகும். இதில் தனுஷ் உடன் அறிமுக கதாநாயகியாக டாப்ஸி நடித்துள்ளார். சேவல் சண்டையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் . படத்திற்கு தேசிய திரைப்பட விருதுகளில் ஆடுகளத்தின் நாயகன் தனுஷிற்கு சிறந்த நடிகர் விருதும் வெற்றிமாறனுக்கு சிறந்த இயக்குனர் விருதும் கிடைத்தது. படம் மாபெரும் வெற்றி பெற்றதுடன் வசூல் சாதனை படைத்துள்ளது. விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படங்களின் வரிசையில் இந்தப் படத்திற்கு 5-வது இடத்தில் உள்ளது.

சென்னை 600028: 2007 ஆம் ஆண்டு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு வெளியான திரைப்படம் ஆகும். இதில் சிவா, ஜெய், நித்தின் சத்யா, அரவிந்த் ஆகாஷ், பிரேம்ஜி அமரன், அஜய் ராஜ், விஜய் வசந்த், பிரசன்னா, ரஞ்சித், கார்த்திக், அருண், விஜயலட்சுமி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இதன் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு சென்னை 600028 2 வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றது.

முதல் பாகமான சென்னை 600028 படத்தில் கதாபாத்திரங்களையும் படத்தின் தொடக்கத்தில் நினைவூட்டி பின் காலத்திற்கு ஏற்றார் போல மாற்றத்தை ஏற்படுத்தி ஒவ்வொன்றாக விவரிக்கப்படுகிறது. இதில் அவர்களின் திருமண வாழ்க்கை, தொழில், குடும்பம் மற்றும் தற்போதைய நிலை ஆகியவற்றை மிக அழகாக எடுத்துக்காட்டியுள்ளனர். சென்னை 28 படம் விளையாட்டை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படங்களின் வரிசையில் 4-வது இடத்தை பிடித்துள்ளது.

கில்லி: 2004 ஆம் ஆண்டு இயக்குனர் தரணி இயக்கத்தில் வெளியான ஆக்சன் மற்றும் காதல் கலந்த திரைப்படம் ஆகும். இதில் கபடி விளையாட்டை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இதில் விஜய் உடன் த்ரிஷா, பிரகாஷ்ராஜ். விஜய் கபடி விளையாடுவது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்துகிறது. இதில் விஜய்க்கு டப் கொடுக்கும் வகையில் பிரகாஷ் ராஜ் தனது வில்லத்தனத்தில் மிரட்டி இருப்பார். இப்படம் பிளாக் பாஸ்டர் வெற்றி பெற்றதோடு மாபெரும் வசூல் சாதனை படைத்துள்ளது. கில்லி படம் விளையாட்டை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படங்களின் வரிசையில் 3-வது இடத்தில் உள்ளது.

வல்லினம்: 2014 ஆம் ஆண்டு இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் வெளிவந்த இந்த படத்தில் நகுல், மிருதுல்லா, சஹன் போன்றோர் நடித்துள்ளனர் . கூடைப்பந்து விளையாட்டை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் ஆகும். எப்பொழுதும் கிரிக்கெட் அணிக்கு மட்டுமே அங்கீகாரம் கிடைக்கும் இடத்தில் குடைப்பந்து விளையாட்டுக்கும் அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சவாலை ஏற்று நிறைவேற்றும் திரைப்படமாக அமைந்துள்ளது. வல்லினம் படம் விளையாட்டை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படங்களின் வரிசையில் 2-வது இடத்தை பிடித்துள்ளது.

இறுதிச்சுற்று: 2016 ஆம் ஆண்டு இயக்குனர் சுதா கொங்காரா இயக்கத்தில் வெளிவந்த இந்த படத்தில் குத்துச்சண்டை விளையாட்டை மையமாக வைத்து வெளிவந்த திரைப்படத்தில் மாதவன் குத்துச்சண்டை பயிற்சியாளராக முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் குத்துச்சண்டை வீரருமான ரித்திகா சிங் குத்துச்சண்டை வீராங்கனை ஆக நடித்துள்ளார்.இப்படம் மாபெரும் வெற்றி பெற்றதுடன் சூப்பர் ஹிட் ஆனது. விளையாட்டை மையமாகக் கொண்ட வெளிவந்த திரைப்படங்களின் வரிசையில் இறுதிச்சுற்று முதலாவது இடத்தில் உள்ளது.

இவ்வாறு விளையாட்டினை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படங்களில் சிறந்த 10 திரைப்படங்கள் ஆகும். அதிலும் விஇயக்குனர் வெற்றிமாறனின் ஆடுகளம் திரைப்படம் தேசிய விருதுகளை வாங்கி குவித்தது கெத்து காட்டியது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்