வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

டாப் 10 நடிகைகளின் சொத்து மதிப்பு.. சமந்தாவை பின்னுக்கு தள்ளிய தமன்னா

Top 10 Tamil Actress Net Worth: ஹீரோக்கள் 100 கோடியை தாண்டி சம்பளம் வாங்கி வரும் நிலையில் இப்போது கோடி கோடியாய் சம்பாதித்து வருகிறார்கள். அந்த வகையில் டாப் 10 இடங்களை பிடித்த நடிகைகளின் சொத்து மதிப்பை பார்க்கலாம். இதில் பத்தாவது இடத்தில் ஸ்ரேயா சரண் இருக்கிறார். அவருடைய சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 10 கோடிக்கு மேல் உள்ளதாம்.

அடுத்ததாக சமீப காலமாக ரசிகர்களின் ஃபேவரிட் நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் நித்யா மேனனுக்கு 15 கோடி சொத்து மதிப்பு உள்ளதால் ஒன்பதாவது இடத்தை பிடித்திருக்கிறார். இவருக்கு முன்னதாக காஜல் அகர்வால் 20 கோடி சொத்து மதிப்புடன் எட்டாவது இடத்தை பிடித்திருக்கிறார்.

Also Read : 5 மடங்கு லேடி சூப்பர் ஸ்டாரை விட மேல் என காட்டிய சமந்தா.. இந்த விஷயத்தில் பின்னுக்கு தள்ளப்பட்ட திரிஷா

இப்போது பெரிய நடிகர்களின் படங்களை கைவசம் வைத்திருப்பவர் நடிகை திரிஷா. சினிமாவில் இவர் பல வருடமாக இருந்து வந்தாலும் அவரின் முழு சொத்து 25 கோடி தான் என்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் சினிமாவில் வந்த குறுகிய காலத்திலேயே 28 கோடிக்கும் அதிகமாக சொத்து சேர்த்துள்ளார் ராஷ்மிகா மந்தனா.

மேலும் ஐந்தாவது இடத்தை பூஜா ஹெக்டே பிடித்திருக்கிறார். இவருடைய நிகர சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 50 கோடி ஆகும். நான்காவது இடத்தில் சமந்தா இருக்கிறார். ஒரு காலத்தில் பிசியான நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த சமந்தாவுக்கு பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்துவிட்டது.

Also Read : அட்லி போல நயன்தாரா இமேஜை டேமேஜ் செய்த இயக்குனர்.. இறைவனால் வேஸ்ட் பீஸ்ஸான லேடி ஸ்டார்

ஆனாலும் கிடைக்கும் படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். அந்த வகையில் சமந்தாவின் சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 89 கோடியாகும். மேலும் இரண்டாவது இடத்தில் சமந்தா இருந்த நிலையில் அவரை நான்காவது நிலைக்கு தள்ளிவிட்டு இரண்டு நடிகைகள் முன்வந்துள்ளனர்.

அந்த வகையில் அனுஷ்காவின் சொத்து மதிப்பு 100 கோடி, இதைத்தொடர்ந்து தமன்னாவின் சொத்து மதிப்பு 110 கோடி என கூறப்படுகிறது. அதுவும் தமன்னா இப்போது வெப் சீரிஸ் மற்றும் படங்களில் அதிக கவர்ச்சி காட்டி பட்டையை கிளப்பி வருகிறார். மேலும் எப்போதும் போல முதல் இடத்தை லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தான் தக்க வைத்திருக்கிறார். அவரின் சொத்து மதிப்பு கிட்டதட்ட 200 கோடி ஆகும்.

Also Read : 50 வினாடி விளம்பரத்திற்கு நயன்தாரா வாங்கும் பல கோடி சம்பளம்.. அழகு இருக்கிற வரை கல்லா கட்டிக்க வேண்டியது தான்

- Advertisement -

Trending News