அட்லி போல நயன்தாரா இமேஜை டேமேஜ் செய்த இயக்குனர்.. இறைவனால் வேஸ்ட் பீஸ்ஸான லேடி ஸ்டார்

Nayanthara: திருமணத்திற்குப் பிறகு நயன்தாராவின் மார்க்கெட் சினிமாவில் சரிய ஆரம்பித்து விட்டது. ஆனாலும் பட வாய்ப்புகள் நயன்தாராவுக்கு குவிந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் படத்தில் கருவேப்பிலை போல தான் நயன்தாராவை இயக்குனர்கள் பயன்படுத்தி வருகிறார்கள் என்பது மிகவும் வேதனை அளிக்கும் விஷயமாக இருக்கிறது.

அதாவது சமீபத்தில் பாலிவுட்டில் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் படத்தில் நயன்தாரா நடித்திருந்தார். இந்த படத்தில் நயன்தாரா நடித்திருந்தாலும் குறைந்த காட்சிகளில் வந்த தீபிகா படுகோன் தான் ஸ்கோர் செய்து சென்றார். நயன்தாராவை பொருத்தவரையில் தனக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்ந்தெடுத்து மட்டும் தான் நடிக்க கூடியவர்.

Also Read : சிம்புவை நம்பி நடுத்தெருவுக்கு வந்த 5 பிரபலங்கள்.. நயன்தாராவால் கோர்ட் வரை போன சம்பவம்

அதுவும் பில்லா படத்தில் நயன்தாராவுக்கு மிகவும் வலுவான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருந்தது. அதன் பிறகும் அறம் போன்ற கதாநாயகி கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். ஆனால் இப்போது லேடி சூப்பர் ஸ்டார் நடிக்கும் படங்களை எடுத்துப் பார்த்தால் அதில் அவருக்கு சொல்லிக் கொள்ளும் அளவுக்கு கேரக்டர் எதுவும் கொடுக்கப்படவில்லை.

அப்படிதான் இன்று அகமது இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் இறைவன் படம் வெளியாகி இருக்கிறது. தனி ஒருவன் படத்திற்கு பிறகு நயன்தாரா, ஜெயம் ரவியுடன் இந்த படத்தில் ஜோடி போட்டு நடித்திருந்தார். சைக்கோ திரில்லர் கதைக்களத்தை கொண்டுள்ள இறைவன் படத்தில் நயன்தாராவுக்கு பெரிய அளவில் காட்சிகள் எதுவும் கொடுக்கப்படவில்லை.

Also Read : அட்லிக்கு ஒரு டார்லிங்னா, நெல்சனுக்கு ஒரு செல்லாகுட்டி.. கடுப்பில் இருக்கும் சிவகார்த்திகேயன்

அதோடு மட்டுமல்லாமல் அவரது கதாபாத்திரமும் பெரிய அளவில் கவரப்படவில்லை. நயன்தாரா இந்த படத்தில் நடிக்க எப்படி சம்மதித்தார் என்ற கேள்வி தான் எழுந்திருக்கிறது. ஜவான், இறைவன் என அடுத்தடுத்த படங்களில் நயன்தாராவின் இமேஜை இயக்குனர்கள் டேமேஜ் ஆக்கிவிட்டார்கள். புதுமுக நடிகைகளே தங்களுக்கு அங்கீகாரம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்கள்.

ஆனால் நயன்தாரா திடீரென இவ்வாறு தனக்கு சுத்தமாக செட்டாகாத கதாபாத்திரங்களில் நடிப்பதற்கான காரணம் என்ன என்று ரசிகர்கள் கேட்கத் தொடங்கி விட்டனர். மேலும் இப்போது பிசினஸில் நன்கு கல்லா கட்டி வரும் நயன்தாரா கிடைக்கும் கதாபாத்திரங்களில் நடிக்கலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டார் போல.

Also Read : 100 கோடிக்கு வீடு, ஜெட் விமானம்.. கிறுகிறுக்க வைக்கும் செல்வ சீமாட்டி நயன்தாராவின் சொத்து மதிப்பு

- Advertisement -