ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

50 வினாடி விளம்பரத்திற்கு நயன்தாரா வாங்கும் பல கோடி சம்பளம்.. அழகு இருக்கிற வரை கல்லா கட்டிக்க வேண்டியது தான்

Nayanthara: லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா சினிமாவில் ஒருபுறம் கல்லா கட்டி வந்தாலும் மற்ற தொழில்களிலும் நல்ல வருமானம் பார்த்து வருகிறார். அதுவும் தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து பல தொழில்களில் முதலீடு செய்து வருமானம் ஈட்டி வருகிறார். அந்த வகையில் அழகு சாதன பொருட்களை வைத்து நயன்தாரா பிராண்டில் தொழில் செய்து வருகிறார்கள்.

மேலும் சமீபத்தில் பாரம்பரிய ஹோட்டல் ஒன்றின் மீது முதலீடு செய்திருந்தார்கள். இது தவிர துபாய் போன்ற இடங்களில் நிறைய தொழில் மற்றும் ரியல் எஸ்டேட் ஆகியவையில் முதலீடு செய்து வருமானத்தை பார்த்து வருகிறார்கள். இந்நிலையில் சமீபத்தில் நயன்தாரா இன்ஸ்டாகிராமில் கணக்கு தொடங்கினார்.

Also Read : அட்லி போல நயன்தாரா இமேஜை டேமேஜ் செய்த இயக்குனர்.. இறைவனால் வேஸ்ட் பீஸ்ஸான லேடி ஸ்டார்

இதுவும் இப்போது வருமான நோக்கில் தான் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. அதாவது நயன்தாரா தனது அழகு சாதன பொருட்கள் விற்கும் நிறுவனத்திற்கு விளம்பரங்களில் நடித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அதுவும் இந்த விளம்பரங்களில் நடிக்க அவர் வாங்கும் சம்பளம் தான் தலையை சுற்ற வைக்கிறது.

தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் முதலிடத்தில் நயன்தாரா தான் இருந்து வருகிறார். இப்படி சினிமாவில் கோடி கோடியாய் கொட்ட விளம்பரத்தில் 50 வினாடிக்கு நடிக்க 5 கோடி சம்பளம் பெறுகிறார். அப்படி பார்த்தால் சினிமாவை விட விளம்பரத்தில் தான் நயன்தாராவுக்கு சம்பளம் அதிகமாக கொடுக்கப்படுகிறது.

Also Read : சிம்புவை நம்பி நடுத்தெருவுக்கு வந்த 5 பிரபலங்கள்.. நயன்தாராவால் கோர்ட் வரை போன சம்பவம்

இதனால் தொடர்ந்து விளம்பரங்களில் நடித்து வரும் நயன்தாரா இப்போது தாராள கவர்ச்சியும் காட்ட ஆரம்பித்து விட்டார். மேலும் புடவை, நகை என பல விளம்பரங்களில் நயன்தாரா நடித்து வருகிறார். காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டும் என்பது போல வயசு உள்ள போதே கல்லாக் கட்டிக்க வேண்டியது தான் என எல்லாவற்றிலும் சம்பாதித்து வருகிறார் நயன்தாரா.

போதாக்குறைக்கு சினிமாவில் ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் படங்களையும் தயாரித்து வருகிறார்கள். மேலும் இன்னும் நிறைய தொழில்களில் முதலீடு செய்யும் யோசனையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருப்பதாக தெரிகிறது. அதோடு மட்டுமல்லாமல் இப்போதே நயன்தாராவின் சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 200 கோடிக்கும் அதிகமாக இருக்கிறதாம்.

Also Read : 100 கோடிக்கு வீடு, ஜெட் விமானம்.. கிறுகிறுக்க வைக்கும் செல்வ சீமாட்டி நயன்தாராவின் சொத்து மதிப்பு

- Advertisement -

Trending News