அந்த ரெண்டு படத்தையும் தூக்கி போடுங்க, அதிரடி முடிவெடுத்த சிம்பு.. தலையை பிச்சுக்கிட்டு திரியும் இயக்குனர்

நடிகர் சிம்பு பல ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது ரீ என்ட்ரி கொடுத்து தனது நடிப்பை ரசிகர்களுக்கு பிடித்தார் போல் வெளிப்படுத்தி வருகிறார். பழைய சிம்புவின் எந்த ஒரு நடவடிக்கையும் தற்போதுள்ள புது சிம்புவிடம் இல்லை என்ற நற்பெயரையும் அவர் வாங்கியுள்ளார். மேலும் சிம்புவால் பல தயாரிப்பாளர்கள் கல்லா கட்டி வரும் அளவிற்கு இவரது வளர்ச்சி கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

இதனிடையே சிம்புவின் மார்க்கெட் மற்றும் சம்பளம் பல மடங்கு உயர்ந்துள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி நடிகர் சிம்பு தற்போது பத்து தல, வெந்து தணிந்தது காடு 2 உள்ளிட்ட பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அண்மையில் விஜய்யின் வாரிசு படத்தில் இடம்பெற்ற தீ தளபதி பாடலில், சிம்பு சிறப்பு தோற்றத்தில் இடம்பெற்றார். அவர் அப்பாடலில் தோன்றியதற்கு காரணமாக விஜய் தனக்கு செய்த உதவிக்கு, நன்றி கடன் என தெரிவித்தார்.

Also Read: சொந்த வாழ்க்கையில் நடந்ததை படமாக்கிய 3 இயக்குனர்கள்.. கைதட்டலை அள்ளிய கெளதம் வாசுதேவ மேனன்

இப்படி சிம்பு தனது ஒவ்வொரு செயலிலும் மேம்படுத்தி வரும் நிலையில், தற்போது பழைய சிம்பு போல் நடந்துகொள்வதாக செய்திகள் வெளியாகி உள்ளது. சிம்புவின் கேரியரில் ஆரம்பத்தில் அவரது தந்தையும் நடிகர் மற்றும் இயக்குனரான டி.ராஜேந்தர் உறுதுணையாக இருந்தார். அவருக்கு பின் சிம்பு கேரியரை நிமிர்த்தியவர் என்றால் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் தான்.

இவர் இயக்கத்தில் வெளியான விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா உள்ளிட்ட திரைப்படங்கள் சிம்புவின் கேரியரில் முக்கிய படங்களாக அமைந்தது. மேலும் கெளதம் வாசுதேவ் மேனன் மற்றும் சிம்பு இருவரும் நல்ல நண்பர்களாக உலா வந்தன. அதைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக இவர்கள் இணைந்த படமான கடந்தாண்டு ரிலீசான வெந்து தணிந்தது காடு திரைப்படமும் சக்கைப்போடு போட்டது. இந்நிலையில் ,சிம்புவுக்கும், கெளதம் வாசுதேவ் மேனனுக்கும் சில கருத்து வேறுபாடுகள் நிலவி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Also Read: ஜாதியை வைத்து குட்டையை குழப்பிய ப்ளூ சட்டை மாறன்.. சாட்டையடி பதிலை கொடுத்த கெளதம் மேனன்

கெளதம் வாசுதேவ் மேனன் தற்போது படங்களில் இயக்குவதை காட்டிலும் நடிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார். தற்போது கூட விஜய்யின் லியோ படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இதன் காரணமாக படங்களை இயக்குவதை சற்று தாமதப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக சிம்பு, கௌதம் வாசுதேவ் மேனன் காம்போவில் வெந்து தணிந்தது காடு 2, விண்ணைத்தாண்டி வருவாயா உள்ளிட்ட படங்களை உருவாக்கும் பணி சற்று தாமதமாகி வருகிறது.

இப்படங்களின் கதை எழுதும் வேலை கூட தற்போது வரை முடியவில்லை என்ற பேச்சு எழுந்துள்ளது. இதனால் சிம்பு, கெளதம் வாசுதேவ் மேனன் இடையே மனஸ்தாபங்கள் ஏற்பட்டு இந்த இரண்டு படங்கள் மட்டுமில்லாமல் வேறு எந்த படங்களிலும், கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கமாட்டார் என தெரிவித்துள்ளாராம். இதன் காரணமாகத்தான் இந்த இரண்டு படங்களின் அப்டேட் வராமல் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Also Read: 

- Advertisement -spot_img

Trending News