ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 3, 2024

இனியா விஷயத்திலும் தோற்றுப்போன கோபி அங்கிள்.. யாருமே மனுஷனா கூட மதிக்கிறது இல்ல, என்ன கொடுமை சார் இது

Baakiyalakshmi Serial: விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் பாக்கியலட்சுமி. இத்தொடரில் இனியா அதிக மதிப்பெண் பெற்று பள்ளியிலேயே முதல் இடத்தை பிடித்திருக்கிறார். அடுத்ததாக கல்லூரி படிப்பை தொடங்க உள்ள இனியாவுக்கு விஸ்காம் மீது மிகுந்த ஆர்வம் இருக்கிறது.

ஆகையால் அதை படிக்க வேண்டும் என்று தனது குடும்பத்திடம் ஆலோசனை கேட்டு வருகிறார். அந்த சமயத்தில் தான் இனியாவின் அப்பா கோபி நீ பிபிஎம் தான் படிக்க வேண்டும் என்று கூறுகிறார். இல்லை தனக்கு விஸ்காம் படிக்க தான் ஆசை என்று இனியா கூறியும் கோபி விடாப்பிடியாக இருக்கிறார்.

Also Read : சைடு கேப்பில் கோபி அங்கிள் செய்த மட்டமான வேலை.. இது என்னடா இனியாவுக்கு வந்த புது சோதனை

ஆனால் இனியாவுக்கு பாக்கியலட்சுமி குடும்பம் மொத்தமும் சப்போர்ட் செய்கிறது. உன்னுடைய விருப்பம் எதுவோ அதை செய் நான் உறுதுணையாக இருக்கிறேன் என பாக்யா கூறுகிறார். மறுநாள் பிபிஎம் அப்ளிகேஷன் வாங்கிக்கொண்டு கோபி வருகிறார். ஆனால் இனியாவுக்காக ஒட்டுமொத்த குடும்பமும் சப்போர்ட் செய்கிறது.

மேலும் பாக்கியலட்சுமி குடும்பத்தில் கோபியை மனுசனாகவே மதிக்காத நிலையில் இனியா படிப்பு விஷயத்திலும் தோற்றுப் போகிறார். அதோடு மட்டுமல்லாமல் வீட்டுக்கு வந்து கோபி அங்கிள் ராதிகாவிடம் இதை சொல்லி புலம்புகிறார். அதன் பிறகு சரி இனியாவின் சந்தோஷத்திற்கு இதை விட்டு விடலாம் என்று கோபி முடிவுக்கு வருகிறார்.

Also Read : வில்லத்தனத்தையும் தாண்டி அழுது சிரிக்க வைத்த குணசேகரன்.. கொஞ்சம் கூட அசராமல் அடிக்கும் ஜீவானந்தம்

ஆனால் மறுநாள் காலேஜில் இனியாவை சேர்ப்பதற்கு 50,000 பீஸ் தேவைப்படுகிறது. இதை ஏற்பாடு செய்ய கோபி ஒவ்வொருவருக்கும் போன் செய்து பார்க்கிறார். கடைசியில் ராதிகாவிடமே கேட்டு விடலாம் என்று முயற்சி செய்யும்போது, உங்க பொண்ணுக்கு நீங்க ஃபீஸ் கட்டுங்க இதற்கு நான் எந்த தடையும் சொல்ல மாட்டேன் என்று பிளேட்டை திருப்பி போட்டு விட்டார்.

மறுபுறம் இனியாவை பாக்கியா கல்லூரிக்கு அழைத்து செல்கிறார். மிகப்பெரிய காலேஜ் என்பதால் பார்த்து அசந்து நிற்கிறார் இனியா. மேலும் கோபி தனது குடும்ப விஷயத்தில் ஒவ்வொன்றிலும் தோற்றுப் போகும்போது என்ன கொடுமை சார் இது என்ற டயலாக் தான் நினைவுக்கு வருகிறது. இப்போது பாக்கியலட்சுமி குடும்பத்தில் செல்லாக் காசாக மாறிவிட்டார் கோபி.

Also Read : குடும்பப் பிரச்சினையை வைத்து குளிர் காய நினைக்கும் விஜய் டிவி.. பிக் பாஸை நாரடிக்கப் போகும் 3 சர்ச்சையான ஜோடிகள்

- Advertisement -spot_img

Trending News