பாண்டியனை அடக்கி அதிகாரத்தை மீட்டெடுத்த மனைவி.. தங்கமயிலின் ஆட்டத்திற்கு முடிவு கட்டிய மீனா ராஜி

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் கோமதி, மாமியாரின் கெத்து எப்படி இருக்கும் என்பதை நிரூபித்துக் காட்டி விட்டார். கோமதி பேச்சை கேட்காமல் தங்கமயிலுக்கு பாண்டியன் ஓவராக இடம் கொடுத்ததால் தலைகால் புரியாமல் ஆடினார். மாமாவே சொல்லிட்டாங்க சாப்பாடு எடுத்துட்டு போறதுல எந்தவித பிரச்சனையும் இல்லை என்று சொன்னார்.

அப்புறம் உங்களுக்கு என்ன பிரச்சனை என்று கோமதியை மதிக்காமல் பாண்டியனுக்காக தினமும் கடைக்கு சாப்பாடு எடுத்துட்டு போனார். ஆனால் இது பிடிக்காத கோமதி எப்படியாவது இதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று புலம்ப ஆரம்பித்து விட்டார். பின்பு மாமியாரின் புலம்பலுக்கு செவிசாய்க்கும் விதமாக ராஜி மற்றும் மீனா கூட்டணி சேர்ந்து கோமதிக்கு தைரியத்தை கொடுத்து முதலில் மாமாவை உங்க கண்ட்ரோலுக்கு கொண்டுட்டு வாங்க என்று ஐடியா கொடுக்கிறார்கள்.

வெற்றி கூட்டணியாக மாறிய ராஜி மீனா கோமதி

அதன்படி கோமதி, பாண்டியனிடம் இந்த தங்கமயிலிடம் சாப்பாடு கேட்பது, கடைக்கு கொண்டு வா என்று சொல்வதெல்லாம் இதோடு நிறுத்திக் கொள்ளுங்கள். இத்தனை நாள் எப்படி பழகினீர்களோ அதே மாதிரியே இனிமேலும் இருங்கள் இன்று பாண்டியனிடம் கண்டிசனாக சொல்லிவிட்டார். உடனே இந்த பாண்டியன் ஏன் இப்படி சொல்லுகிறாய்? அந்த பிள்ளை சாப்பாடு கொண்டு வந்தா உனக்கென்ன. இதனால எனக்கு எவ்வளவு நேரம் மிச்சம் ஆகுது தெரியுமா என்று சொல்கிறார்.

அப்படி உங்களுக்கு அது சரி என்றால் நான் கொண்டு வருகிறேன் ஓகேவா என்று கோமதி கேட்கிறார். உடனே பாண்டியன் அதெல்லாம் வேண்டாம் அந்த பிள்ளை சும்மா தானே இருக்கிறது. அந்த பிள்ளையை கொண்டு வரட்டும் என்று பாண்டியன் சொல்ல, அதற்கு கோமதி அதெல்லாம் முடியாது ஒழுங்கா வீட்டுக்கு வந்து சாப்பிடுங்க என்று பாண்டியனை அடக்கி விட்டார்.

இதன் பிறகு கோமதியிடம் எதிர்த்து பேசாமல் பாண்டியனும் வாயை மூடிக்கொண்டு ஓகே என்று தலையாட்டி விட்டு கடைக்கு போய் விட்டார். பிறகு வழக்கம் போல தங்கமயில் புருஷனுக்கு ஒரு சாப்பாடு கேரியர் கடைக்கு ஒரு சாப்பாடு என்று எடுத்து வைக்க ஆரம்பித்து விட்டார். இந்த பக்கம் கோமதியிடம், மீனாவும் ராஜியும் அத்தை உங்க கை ஓங்க வேண்டும் பார்த்து சூதானமாக இருந்து கொள்ளுங்கள் என்று சொல்லுகிறார்கள்.

உடனே தங்கமயில் சாப்பாடு எடுத்துட்டு போகும் பொழுது கோமதி அதட்டி நிப்பாட்டி கடைக்கு ஒன்னும் சாப்பாடு கொண்டு போக வேண்டாம் என்று சொல்லி விட்டார். இதனால் தங்கமயில், பாண்டியனுக்கு எடுத்து வைத்த சாப்பாட்டை வீட்டில் வைத்துவிட்டு அழுதுகிட்டே புருஷனுக்கு சாப்பாடு கொடுக்க போய்விட்டார். போற வழியில் அம்மாவுக்கு போன் பண்ணி நடந்த விஷயத்தை சொல்லி அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி விட்டார்.

இதைக் கேட்ட தங்கமயிலின் அம்மா பாக்கியம், நீ எதுவுமே கண்டுக்காம சாப்பாடு புருஷன் கிட்ட போய் கொடுத்துட்டு வா. மற்றதெல்லாம் நான் பார்த்துக்கிறேன் என்று சொல்லி தங்கமயிலின் அம்மாவும் அப்பாவும் பாண்டியன் வீட்டிற்கு வந்து விட்டார்கள். வந்ததும் கல்யாணமான புது தம்பதிகள் எங்கேயும் வெளியே போகாமல் இருக்கிறார்கள். நாங்கள் வேண்டுமென்றால் ஹனிமூன் அனுப்பி வைக்கவா என்று ஓவர் பில்டப் கொடுத்தார்கள்.

உடனே பாண்டியன் அதெல்லாம் வேண்டாம் சம்மந்தி, நாங்களே அனுப்பி வைத்துக்கொள்கிறோம் என்று பெருமையாக சொல்லிவிட்டார். பிறகு பாக்கியம் தினமும் இந்த வெயிலில் அலைந்து சாப்பிட வருகிறீர்கள். அதான் என் மகள் சும்மா தானே இருக்கிறாள். அவளே தினமும் சாப்பாடு கொண்டு வந்து தருவாள் என்று சொல்லி கிளம்பி விட்டார்கள்.

அவர்கள் கிளம்பிய அந்தத் தருணத்தில் கோமதி, பாண்டியனிடம் மறுபடியும் இந்த பழக்கத்தை வைத்துக் கொண்டீர்கள் அவ்வளவுதான் என்று புருசனை அடக்கி தங்கமயில் சாப்பாடு கொண்டு போவதற்கு பாண்டியன் மூலம் முற்றுப்புள்ளி வைத்து விட்டார். ஆக மொத்தத்தில் மீனா, ராஜி மற்றும் கோமதியின் கூட்டணி வெற்றி கூட்டணியாக இருக்கிறது. இப்படியே போனால் தங்கமயில் மற்றும் பாண்டியன் ஆட்டத்திற்கு ஒட்டுமொத்தமாக முடிவு கட்டிவிடலாம்.

பாண்டியன் ஸ்டோர்ஸில் நடந்த சம்பவங்கள்

Next Story

- Advertisement -