பொண்டாட்டி விட மருமகளுக்கு ஜால்ரா போடும் பாண்டியன்.. நிர்வாகத்தின் பொறுப்பை கையில் எடுக்கும் தங்கமயில்

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், பாண்டியன் தான் மட்டும் பொறுப்பாகவும், சரியாகவும் இருக்கிறேன் என்ற நினைப்பில் மற்றவர்களை மட்டம் தட்டி பேசுகிறார். அதிலும் செந்தில் மற்றும் கதிரை அடிக்கடி குறை சொல்லிக் கொண்டு அவமானப்படுத்தி பேசுவதே வழக்கமாக வைத்திருக்கிறார்.

ஆனால் இதுவரை பேசியது வேற, தற்போது புதுசாக மருமகளாக வந்திருக்கும் தங்கமயில் முன்னாடியும் கதிர் மற்றும் செந்திலை எதுக்கும் லாயக்கு இல்லை, நீங்கெல்லாம் வேஸ்ட் என்கிற மாதிரி பேசி அவமானப்படுத்துகிறார். அதிலும் சரவணனை எப்பொழுதுமே ஒரு படி மேலே வைத்து இவன்தான் எனக்கு அடுத்து ரொம்பவே பொறுப்பாக இருப்பான் என்று பாராட்டி பேசுகிறார்.

மகன்களை அவமானப்படுத்தி பேசிய பாண்டியன்

இதை பார்த்து தங்கமயில் தானும் தன் புருசனும் தான் இந்த வீட்டில் சரி என்கிற மாதிரி நினைக்க ஆரம்பித்து விட்டார். அந்த வகையில் தங்கமயில் என்ன பண்ணினாலும் பாண்டியன் சரி சூப்பர் என்று பாராட்டுகிறார். இதனால் பாண்டியன் கொடுக்கும் தைரியத்தில் தங்கமயில் மற்றவர்களை மதிக்காமல் இஷ்டத்துக்கு பல விஷயங்களை பண்ணி வருகிறார்.

இதையெல்லாம் கவனித்த கோமதி, பாண்டியனிடம் முன்னாடி மாதிரி நீங்கள் மனசுல பட்டதை எல்லாம் பேச முடியாது. தற்போது மூன்று மகன்களுக்கும் கல்யாணம் ஆகி மருமகள்கள் வந்துவிட்டார்கள். அதனால் என்ன பேச வேண்டும் எப்படி யார் முன்னாடி சொல்ல வேண்டும் என்பதை யோசித்து பேசுங்கள் என்று கூறுகிறார். ஆனால் கோமதி என்ன சொல்ல வருகிறார் என்று புரிந்து கொள்ளாமல் கோமதியிடம் தங்கமயிலை மட்டும் பாராட்டி ஜால்ரா அடித்து பேசுகிறார்.

இதனால் பாண்டியன் திருந்த மாட்டார் என்ற முடிவுக்கு கோமதி வந்துவிட்டார். இருந்தாலும் இந்த தங்கமயிலை இப்படியே விட்டு விட்டால் குடும்பத்தில் பிரச்சினைகள் வந்துவிடும் என்று கோமதி பயப்படுகிறார். அந்த வகையில் முதலில் தங்கமயில், பாண்டியன் கடைக்கு சாப்பாடு கொண்டு போவதை தடுத்தாக வேண்டும் என்று நினைக்கிறார். அதன்படி மீனா மற்றும் ராஜி இருவரும் சேர்ந்து கோமதிக்கு தைரியத்தை கொடுத்து துணிச்சலுடன் உங்கள் மருமகளிடம் பேசுங்கள் என்று சொல்கிறார்கள்.

இதனைத் தொடர்ந்து வழக்கம்போல் தங்கமயில் சாப்பாடு எடுத்துக்கொண்டு கிளம்பும்போது கோமதி உன் புருஷன் சரவணனுக்கு மட்டும் சாப்பாடு கொண்டுட்டு போ. கடைக்கு சாப்பாடு கொண்டு போக வேண்டாம் என்று தங்கமயில் இடம் சொல்லிட்டார். உடனே தங்கமயில் பாண்டியனுக்கு போன் பண்ணி நான் சாப்பாடு கொண்டு வருவதில் உங்களுக்கு ஏதாவது பிரச்சனையா மாமா என்று கேட்கிறார்.

அதற்கு பாண்டியன், எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை உனக்கு கஷ்டம் இல்லை என்றால் நீ தாராளமாக கொண்டுட்டு வரலாம் என்று சொல்கிறார். பிறகு கோமதி இடம், தேவையில்லாமல் நீங்கள் தான் யோசிக்கிறீங்க மாமா என்ன போட்டு வர சொல்லிட்டாங்க என சொல்லி சாப்பாடை எடுத்துட்டு போகிறார். அந்த வகையில் இன்னும் கொஞ்ச நாளில் வீட்டு நிர்வாகப் பொறுப்பை தங்கமயில் கைக்கு வந்து விடும்.

அடுத்து தங்கமயில் மற்றும் பாக்கியம் ஓவராக ஆட்டம் போட தொடங்கிய நிலையில் அதன் பிறகு தான் பாண்டியன் புத்திக்கு பல விஷயங்கள் உரைக்க ஆரம்பிக்கும். இதனால் பாண்டியன் மகன்களுக்கு இடையே பிரச்சனைகளும் சச்சரவுகளும் வருவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸில் நடந்த முந்தைய சம்பவங்கள்

Next Story

- Advertisement -