லியோ படத்தின் மொத்த கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா.? நம்பர் ஒன் யாருன்னு நிரூபித்த முத்துவேல் பாண்டியன்

Vijay Leo Movie Collection: விஜய்யின் லியோ படம் வெளியாகி 13 நாட்களை தாண்டி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனாலும் கலவையான விமர்சனங்களை பெற்று வருவதால் எதிர்பார்த்த அளவு வசூலை பெற முடியவில்லை. அந்த வகையில் இதற்கு முன்னதாக ரஜினியின் ஜெயிலர் படம் வெளியாகி கிட்டத்தட்ட 650 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருந்தது.

லியோ படமும் ஆயிரம் கோடி தாண்டி வசூல் செய்யும் என்று எதிர்பார்ப்பில் தயாரிப்பாளர் லலித் இருந்தார். ஆனால் அவரது கணக்கு பொய்த்து போக இப்போது வசூலில் லியோ படம் திணறி வருகிறது. ஏனென்றால் முதல் பாதி நன்றாக இருந்தும் இரண்டாம் பாதி எதிர்பார்த்த அளவு லியோ படம் சுவாரசியமாக இல்லை. இதனால் விஜய் ரசிகர்களையே லியோ படம் கவர தவறிவிட்டது.

ஆனாலும் படம் வெளியாகி 12 நாட்களில் லியோ படத்தின் வெற்றி விழா கொண்டாடப்பட்டிருந்தது. இந்த சூழலில் லியோ படம் தற்போது வரை வெளியாகி உள்ள மொத்த வசூல் விவரத்தை இப்போது பார்க்கலாம். அதாவது லியோ படம் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 553.7 கோடி வசூல் செய்து உள்ளது. மேலும் இன்னும் சில நாட்களில் 600 கோடி வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read : லியோ மேடையில் தெரிந்த அப்பட்டமான அரசியல்.. கப்பு முக்கியம் பிகிலு, 5 தவறுகளால் சிக்கிய விஜய்

இதற்கு முன்னதாக தமிழ் சினிமாவில் 500 கோடியை தாண்டி வசூல் செய்த படமாக ரஜினியின் 2.0, ஜெயிலர் மற்றும் மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் படங்கள் இருந்தது. இப்போது இந்த லிஸ்டில் விஜய்யின் லியோ படமும் இணைந்து இருக்கிறது. ஆனாலும் ஜெயிலர் வசூலை தற்போது வரை லியோவால் முறியடிக்க முடியவில்லை.

அதோடு மட்டுமல்லாமல் அடுத்த வாரம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நிறைய படங்கள் ரிலீஸாக இருக்கிறது. இதனால் இப்போதே லியோ படம் பாதி திரையரங்குகளில் இருந்து தூக்கப்பட்டுவிட்டது. ஆகையால் இனி வரும் நாட்களில் லியோ படத்தின் வசூல் அதிரடியாக குறையும் என சினிமா விமர்சகர்கள் கூறியுள்ளனர்.

மேலும் இந்த வசூல் குறைவுக்கு காரணம் படம் உருவாகும்போது எதிர்பார்ப்பை அதிகமாகியது தான். இந்நிலையில் லியோ வசூலை பார்த்துவிட்டு நம்பர் ஒன் இடம் எப்போதுமே ஜெயிலர் முத்துவேல் பாண்டியன் தான் என ரஜினி ரசிகர்கள் ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் வரும் ஜெயிலர் வசூலை லியோ முறியடிக்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Also Read : விஜய்யை சந்தோஷப்படுத்த பேசிய ஆர்வக்கோளாறு.. லியோ சக்சஸ் மீட்டால் சந்திக்க போகும் 5 பிரச்சனைகள்