விஜய், அஜித்-க்கு கெட்ட நேரம் ஆரம்பிச்சிருச்சு.. கோபத்தில் கொந்தளித்த இயக்குனர்

Vijay- Ajith Controversy: குணச்சித்திர நடிகர் போஸ் வெங்கட் சன் டிவியின் மெட்டிஒலி மூலம் அறிமுகமானார். இவரது நடிப்பு மிகவும் எதார்த்தமாக இருந்ததால் விரைவில் அவர் சினிமாவுக்கு அழைத்தவரப்பட்டார். ஒவ்வொரு படங்களையும் தனது நடிப்பை தனித்துவமாக காட்டி தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராக இருந்து வருகிறார்.

இவர் ஒரு முற்போக்கு சிந்தனையாளர் இவரது பேச்சு தனித்துவமாக இருக்கும். திடீரென இயக்குனராகவும் அறிமுகமானார் கன்னி மாடம் என்ற ஒரு படத்தை இயக்கினார். பெரிதாக பேசப்படவில்லை என்றாலும் நல்ல பெயரை எடுத்தால். அடுத்தடுத்து படங்களை இயக்க ஆர்வமாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் இவர் படம் இயக்கியதிலிருந்து படங்களில் இவரை அதிகமாக காண முடியவில்லை. காரணம் இவர் அடுத்து எப்போது படத்தை இயக்கலாம் என்ற யோசனையில் இருந்து வருகிறார். ஆனால் அதற்கான வாய்ப்புகளும் இல்லை. அப்படியே வாய்ப்புகள் கொடுத்தாலும் இந்த படங்கள் தியேட்டரில் வெளியாவது கண்டிப்பாக நடக்காது.

Also Read : வலிமை போல் விடாமுயற்சிக்கும் ஏற்பட்ட நிலைமை.. அஜித் எடுத்த அதிரடி முடிவு

இதனால் தற்பொழுது ஒரு பேட்டியில் தனது மனக்குமுறலை கோபமாக கொட்டி தீர்த்து உள்ளார் போஸ் வெங்கட். தமிழ் சினிமா தற்பொழுது மிக மோசமான நிலைமையில் இருந்து வருகிறது ஆயிரம் கோடி வசூலித்தால் சினிமா பெரிய சாதித்து விட்டதாக நினைத்து வருகிறார்கள் ஆனால் அது அழிந்து வருகிறது. தமிழ் சினிமா தற்பொழுது நம் கையில் இல்லை வெளியில் இருந்து வந்தவர்கள் கையில் தான் இருக்கிறது.

விஜய், அஜித்  இவர்களை வைத்து பணம் சம்பாதிக்க பணத்தை கொட்ட பல கம்பெனிகள் தயாராக உள்ளன. இவர்கள் படம் வரும் சமயத்தில் ஆயிரம் திரையரங்கில் நான்கு காட்சிகள் இவர்கள் படம் மட்டுமே ஓடுகின்றன. அப்போ வேற எந்த படங்களும் வெளிவரக் கூடாதா வெளிவந்தால் யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள். இதனால் தமிழ் சினிமாவில் இவர்களை தாண்டி எந்த படமும் ஓடாததால் தமிழ் சினிமாவின் அடையாளத்தை இழந்து வருகிறது. வேறு எந்த மாநிலத்திலும் இது மாதிரி நடப்பதில்லை.

இனிமேல் வரும் காலங்களில் ஓ டி டி யார் சூப்பர் ஸ்டார் என்று அவன் சொல்லுவான் இப்படி திமிராக கூறும் காலம் வரும். மும்பை மற்றும் டெல்லியில் இருந்து ஒரு நடிகர் வருவார் அவர் கூட சாதாரணமாக நடிக்கும் நிலைமைக்கு விஜய், அஜித் தள்ளப்படுவார்கள். அவர்கள் வருத்தப்பட்டு அழும் நேரம் கூடிய விரைவில் வரும். இவர்கள் திருந்த வேண்டும் தமிழ் சினிமாவை வாழ விட வேண்டும் அனைத்து சினிமாக்களும் வெளிவந்தால் மட்டுமே ஆரோக்கியமான சூழ்நிலை உருவாகும்.

Also Read : 2 முறை ரிஜெக்ட் பண்ணியும் விஜய்க்காக காத்திருக்கும் இயக்குனர்.. தளபதி69 வது படத்தில் கைகூடுமா?