குணசேகரன் மாட்டிக் கொண்டு முழிக்கும் தருணம்.. ஜான்சிராணி இடம் சிக்குவாரா?

எதிர்நீச்சல் சீரியல் எப்பொழுதுமே விறுவிறுப்பாக போய்க்கொண்டிருந்த நிலையில் ஆதரையின் காதல் பிரச்சினை தெரிந்ததிலிருந்து கொஞ்ச நாட்களாகவே இழுத்துக் கொண்டே இருக்கிறது. சீக்கிரம் இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்து அடுத்த கட்டமாக அந்த வீட்டுப் பெண்கள் குணசேகரனை எதிர்த்து போராடும் காட்சிக்காக ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் ஆதிரையின் நிச்சயதார்த்தத்திற்காக எல்லோரும் சேர்ந்து புடவை எடுத்து முடித்த பிறகு சந்தோஷமாக இருக்கிறார்கள். பின்பு குணசேகரன் இவர்களை காரில் வெயிட் பண்ணுங்கள். நான் இந்த கடையில் ஓனரை பார்த்துட்டு வருகிறேன் என்று கூறிவிட்டு கடைக்குள் செல்கிறார். பின்பு ஜான்சி ராணிக்கு போன் பண்ணி கடைக்குள் வாங்க என்று கூட்டுப் போகிறார்.

Also read: குணசேகரனை நாக்க புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட நந்தினி.. பதிலடி கொடுத்த ஜனனி

அங்கே இவர்கள், கரிகாலன் மற்றும் ஆதிரைக்கு நிச்சயதார்த்தம் நடக்கப் போவதாக டிரஸ் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்பொழுது குணசேகரன் சீக்கிரமாக எடுங்கள் என்று கூறுகிறார். அதற்கு ஜான்சி ராணி எங்க வீட்டு மகாராணிக்கு புடவை எடுக்கிறேன் பக்குவமாக தான் எடுக்க முடியும் என்று சொல்கிறார். அதற்கு குணசேகரன் உன் வீட்டுக்கு மகாலட்சுமி வரதுக்குள்ள ஏன் மானம் ரோட்டுக்கு வந்துரும் என்று சொல்றாரு.

பிறகு இவரை கூட்டு போவதற்காக தாரா பாப்பா கடைக்குள் வந்து இவர்கள் எல்லாரும் யார் என்று கேட்கிறார். குணசேகரன் ஏதோ சொல்லி சமாளித்து கடையிலிருந்து தாராவை கூப்பிட்டு போகிறார். ஆக மொத்தத்தில் நிச்சயதார்த்தத்துக்கு இரண்டு தரப்பிலும் டிரஸ் எடுத்தாச்சு. ஆனால் ஆதிரையின் திருமணம் யார் கூட எப்படி நடக்கப் போகிறது என்பதுதான் பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது.

Also read: கன்னத்தை பழுக்க வைத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் மூர்த்தி.. தம்பி செஞ்ச வேலைக்கு இது பத்தாது

இதற்கிடையில் ஒரு பக்கம் அருண், ஆதிரை ரொமான்ஸ் போய்க்கொண்டிருக்கிறது. மறுபக்கம் ஜான்சி ராணி பெரிய சபதத்தோடு கரிகாலனுக்கும் ஆதிரைக்கும் தான் திருமணம் நடக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு அலைகிறார். இதெல்லாம் பார்க்கும்போது ஜனனி, இவங்களுக்கு ஒரு ரிஜிஸ்டர் பண்ணி வச்சிட்டா பாதி பிரச்சனை தீர்ந்துவிட்டது. அதை விட்டு போட்டு ஏன் இப்படி ஜவ்வு மாதிரி இழுத்துகிட்டு இருக்காங்க என்று தெரியவில்லை.

அடுத்ததாக புரட்சி பெண்ணாக அவதாரம் எடுத்து வரும் ஈஸ்வரி. இவர் தன்னம்பிக்கையுடன் எப்படி இருக்க வேண்டும், எதிர்காலத்தை எந்த மாதிரி எதிர்கொள்ள வேண்டும் என்று கல்லூரியில் பேசும் விதமாக மாஸ் ஸ்பீச் ஒன்றை கொடுத்து வருகிறார். இதுவே இவர் எடுத்து வைக்கும் முதல் படியாக இருக்கும். இதனைத் தொடர்ந்து நந்தினி, ரேணுகாவும் அடுத்தடுத்து சுயமாக இருப்பதற்கு தூண்டுகோலாக இருக்கப் போகிறது.

Also read: ஸ்டிங் ஆபரேஷனல் நடை பிணமாய் மாறிட்டேன்.. கண்ணீர் விட்டு கதறி மன்னிப்பு கேட்ட மாதேஷ்

Next Story

- Advertisement -