விஜய்க்கு எதிராக காய் நகர்த்திய லோகேஷ்.. தளபதியை காப்பாற்றி தூக்கி நிறுத்திய சூப்பர் ஸ்டார்

Actor Vijay : விஜய் மற்றும் லோகேஷ் இடையே இருக்கும் உறவு எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். அதாவது மாஸ்டர் என்ற பிளாக்பஸ்டர் ஹிட் படம் இவர்கள் கூட்டணியில் அமைந்தது. இதைதொடர்ந்து உருவானது தான் லியோ படம்.

இந்த படம் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை. இதனால் விஜய் மற்றும் லோகேஷ் இருவருமே சின்ன அப்செட்டில் இருந்தனர். அதோடு லியோ படத்திலும் தயாரிப்பாளர் உடன் பிரச்சனையால் பாதி படத்தை லோகேஷ் எடுக்கவில்லை என்ற சர்ச்சையும் எழுந்தது.

தளபதி 171 டைட்டில் டீசர்

இந்த சூழலில் லோகேஷ் அடுத்ததாக ரஜினியின் தலைவர் 171 படத்தை எடுக்க உள்ளார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் நிலையில் அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தில் டைட்டில் டீசர் வருகின்ற ஏப்ரல் 22 ஆம் தேதி வெளியாக உள்ளது.

ஆரம்பத்தில் லோகேஷ் இந்த படத்தின் டீசர் வெளியிட்ட ஏப்ரல் 14 புக் பண்ணி வைத்துள்ளார். ஆனால் அதே நாளில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் கோட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகிறது.

இரண்டு பெரிய நடிகர்களின் படங்கள் அப்டேட் வந்தால் கண்டிப்பாக சிறு சலசலப்பு ஏற்படும். இதை கருத்தில் கொண்டு லோகேஷ் இடம் ரஜினி ஏப்ரல் 14 வேண்டாம் 22 க்கு வைத்துக் கொள்ளலாம் என்று சொல்லி உள்ளாராம்.

சூப்பர் ஸ்டார் சொன்னதால் வேறு வழியில்லாமல் லோகேஷ் சம்மதித்துள்ளார். லியோ படத்தில் சற்களை சந்தித்த விஜய்யை தூக்கி உயர்த்த சூப்பர் ஸ்டார் ஒரு வகையில் உதவி செய்துள்ளார். சக நடிகராக இருந்தாலும் போட்டியாக கருதாமல் சூப்பர் ஸ்டார் செய்தது அவருடைய சினிமா அனுபவத்தை காட்டுகிறது.

Sharing Is Caring:

Leave a Comment

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்