அப்பத்தா இறந்ததால் எதிர்நீச்சல் போட போகும் மருமகள்கள்.. சீக்ரட்டாக காய் நகர்த்தும் ஜீவானந்தம்

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில் தற்போது கண்ணீர் கம்பளமுமாய் எப்ப பார்த்தாலும் அழுகாட்சி சீனை வைத்து இழுத்தடிக்கிறார்கள். அந்த வகையில் இந்த நாடகத்தின் முக்கிய கதாநாயகியாக இருந்து அனைவரும் மனதிலும் தற்போது நீங்காத இடத்தை பிடித்தது அப்பத்தா மட்டுமே. அப்படிப்பட்ட அப்பத்தாவின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு இருக்கிறது.

ஆனால் இது அனைத்தும் குணசேகரனின் பிளான் மட்டுமே. அதாவது மயக்க மாத்திரையை கொடுத்து அப்பத்தாவை ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு வர்ற மாதிரி வந்து, வரும் வழியில் பாம் வெடித்து அப்பத்தா இறந்து போகிற மாதிரி ஜோடித்திருக்கிறார். ஆனால் இதற்கிடையில் தான் ஜீவானந்தத்தின் சீக்ரெட் பிளான் இருக்கிறது.

அதாவது இந்த விஷயம் ஜீவானந்தத்திற்கு தெரிந்ததால் பாம் வெடிக்கப் போகும் கொஞ்ச நேரத்திற்கு முன் தோழர்களை வைத்து அப்பத்தாவை குண்டுகட்டாக தூக்கி அவர் கஸ்டடிக்கு கொண்டு போய்விட்டார். ஆனால் இது தெரியாமல் பாம் வெடித்ததால் அப்பத்தா இறந்து போய்விட்டார் என்று குணசேகரன் மற்றும் அனைவரும் நம்பி விட்டார்கள்.

Also read: அப்பத்தாவின் சோலியை முடிக்க திட்டமிட்ட குணசேகரன்.. ஜீவானந்தம் கொடுத்த எச்சரிக்கை, வெல்லப்போவது யார்?

ஜீவானந்தம் இந்த உண்மையை ஈஸ்வரி மற்றும் மற்ற பெண்களிடம் மறைப்பதற்கான ஒரு காரணம் இருக்கிறது. அதாவது அப்பத்தா இறப்பிற்கு குணசேகரன் தான் முழுக்க முழுக்க காரணம் என்று தெரிந்தால் மருமகள்கள் ஒவ்வொருவரும் வெறியுடன் துணிச்சலுடன் குணசேகரனை எதிர்த்து போராட ஆரம்பிப்பார்கள்.

அத்துடன் இதுவே அவர்கள் சொந்தக் காலில் நின்னு ஜெயிப்பதற்கு முதல் படிக்கட்டாக அமையும் என்பதற்காக அப்பத்தா மற்றும் ஜீவானந்தம் சேர்ந்து போட்ட பிளான். அது மட்டுமில்லாமல் அப்பத்தாவிற்கு எதுவும் ஆகவில்லை என்று தெரிந்தால் மறுபடியும் குணசேகரனால் ஏதாவது பிரச்சனை அப்பத்தாவிற்கு வந்துவிடும் என்பதனாலயும் ஜீவானந்தம் யார்கிட்டயும் உண்மையை சொல்லவில்லை.

ஆக மொத்தத்தில் அப்பத்தாவின் உயிருக்கு எந்தவித ஆபத்தும் இல்லை. அவர் பத்திரமாக ஜீவானந்தம் கஸ்டடியில் இருக்கிறார். அதே நேரத்தில் குணசேகரன் வீட்டில் உள்ள பெண்கள் இனி துணிச்சலுடன் குணசேகரனுக்கு சவால் விடும் விதமாக ஜெயித்து முன்னேறப் போகிறார்கள். அந்த வகையில் டைட்டிலுக்கு ஏற்ற மாதிரி ஒவ்வொருவரும் வாடி வாசலை தாண்டி எதிர்நீச்சல் போடப் போகிறார்கள்.

Also read: குணசேகரன் திட்டத்தை தவடு பொடியாக்கிய தோழர்.. இனி மருமகள்களின் ஆட்டம் ஆரம்பம்