சினேகன் கிட்ட இருக்கிற 1% நன்றி கூட இல்லாத ஜென்மங்கள்.. செல்பி குடும்பத்தை செஞ்சுவிட்ட கவிஞன்

Snehan: கவிஞர் சினேகன் சிறந்த பாடலாசிரியராக பல படங்களில் பாடல்களை எழுதி தமிழ் சினிமாவில் இவருக்கான அங்கீகாரத்தை பெற்றிருக்கிறார். அப்படிப்பட்ட இவர் தற்போது அமீர் விஷயத்திற்காக குரலை எழுப்பி இருக்கிறார். அதாவது சோசியல் மீடியாவில் சமீபத்தில் அமீரை பற்றி ஞானவேல் ராஜா வைத்த குற்றச்சாட்டு தான் பூகம்பமாக வெடித்திருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல பிரபலங்கள் அமீர்க்கு சப்போர்ட் செய்து வருகிறார்கள்.

அதில் ஒருவர் தான் சினேகன். அதாவது பருத்திவீரன் படத்தில் உள்ள அனைத்து பாடல்களின் வரிகளை இவர் தான் செதுக்கியிருக்கிறார். அந்த வகையில் படப்பிடிப்பின் போது எந்த மாதிரியான விஷயங்கள் நடந்திருக்கிறது என்று கண்கொண்டு பார்த்திருக்கிறார். அதனால் தற்போது இவர் அளித்த பேட்டியில் கூறியது என்னவென்றால் பருத்திவீரன் படப்பிடிப்பின் போது அமீர் எந்த அளவிற்கு கஷ்டத்தில் இருந்தார் என்று நான் உணர்ந்திருக்கிறேன்.

ஒரு படத்தை எடுத்துக் கொண்டிருக்கும் பொழுது இதை எப்படி வெளியிடப் போகிறோம் என்ற பதட்டம் அவரிடம் நிறையவே இருந்தது. காரணம் அப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பெயருக்குத்தான் தயாரிப்பாளராக இருந்தாரே தவிர மற்றபடி படம் முழுவதும் அவர் கை கொடுக்கவில்லை. அதனால் அதில் வேலை பார்த்தவர்களுக்கு கூட சரியாக பணத்தை கொடுக்க முடியாமல் அமீர் ரொம்பவே சங்கடப்பட்டு இருந்திருக்கிறார்.

Also read: அமீருக்கு அடிமேல் அடி கொடுத்த சிவக்குமார் குடும்பம்.. ஊரைவிட்டு ஓடிய இயக்குனர்

அதில் நானும் ஒருவராக இருந்திருக்கிறேன். அதாவது எனக்கு பணம் கொடுக்க முடியாத சூழலில் இருந்ததால் அமீர் கவிஞருக்கு என்னால் இப்பொழுது கொடுக்க முடியாது. ஆனால் அவருக்கு கூடிய விரைவில் என்னால் முடிந்த அனைத்தையும் நான் செய்வேன் என்று கூறியிருக்கிறார். அதனால் அவருடைய இக்கட்டான சூழ்நிலையில் என்னால் முடிந்தவரை உதவ வேண்டும் என்று ஒரு தொகை கூட நான் அவரிடம் பணமாக பெறாமல் தான் வேலை பார்த்திருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

அதற்கு காரணம் ஒரு நல்ல திறமையான படைப்பாளி முன்னுக்கு வர வேண்டும். அதற்கு தன்னால் முடிந்த ஒரு உதவி செய்ய வேண்டும் என்பதற்காக அந்த நேரத்தில் ஒரு தொந்தரவையும் நான் அவருக்கு கொடுக்கவில்லை. அதன் பின் படத்தை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து தெரிந்தவர்களிடம் படத்தை வாங்கி ஒரு வழியாக ரிலீஸ் செய்தார்.

அப்படி இருக்கும் பொழுது கொஞ்சம் கூட நன்றியே இல்லாமல் அமீரை பற்றி அவதூறாக பேசுவது என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று கூறி இருக்கிறார். பருத்திவீரன் படத்தின் மூலமாகத்தான் தயாரிப்பாளராகவே ஞானவேல் ராஜா உருவாகினார். அதே மாதிரி ஹீரோவாகவும் கார்த்திக்கு ஒரு அந்தஸ்து கிடைத்தது. இப்படி அமீர் செய்த நன்றி எல்லாம் மறந்துவிட்டு ஜென்மங்களாக இருக்கிறார்கள்
சிவக்குமார் குடும்பத்தில் உள்ளவர்கள். சினேகனுக்கு இருக்கிற நன்றியில் 1% கூட இல்லாதது வருத்தமாக இருக்கிறது என்று சினிமா பிரபலங்கள் தொடர்ந்து விமர்சனத்தை வைத்து வருகிறார்கள்.

Also read: அமீரிடம் கதை கேட்டு விட்டு தளபதி சொன்ன விஷயம்.. பல வருடம் கழித்து வெளிவந்த சீக்ரெட்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்