அமீரிடம் கதை கேட்டு விட்டு தளபதி சொன்ன விஷயம்.. பல வருடம் கழித்து வெளிவந்த சீக்ரெட்

Ameer – Actor Vijay: சினிமாவில் விஜய் வைத்து ஒரு படம் இயக்கி விட வேண்டும் என இயக்குனர்கள் பலரும் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர். அப்படிதான் விஜய்யிடம் இயக்குனர் அமீர் கதை சொன்ன விஷயம் தற்போது வெளிவந்துள்ளது. பாலாவின் உதவி இயக்குனராக இருந்த அமீர், சூர்யாவை வைத்து எடுத்த மௌனம் பேசியதே படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

அதன் பின் பருத்திவீரன் படத்தை இயக்கி ஹிட் கொடுத்த இயக்குனர் அமீர், அடுத்ததாக தளபதி விஜய் வைத்து ஒரு படம் பண்ண நினைத்தார். அதற்கான ஸ்கிரிப்ட் எல்லாம் தயார் செய்து கொண்டு, விஜய்யை சந்தித்து அவரிடம் கதை சொன்னார்.

அந்த படத்தின் பெயர் கண்ணபிரான். விஜய் கதையை கேட்டதும் ஷாக் ஆனார். ஏனென்றால் அந்த படத்தில் விஜய் 10 வயது குழந்தைக்கு அப்பாவாக நடிக்க வேண்டியதாக இருந்தது. இதனால் இந்த படத்தில் நடிக்கலாமா வேண்டாமா என மிகவும் தயங்கினார்.

Also read: விஜய் பட இயக்குனரா வேண்டவே வேண்டாம்.. அஜித் ரிஜெக்ட் செய்து, சூப்பர் ஹிட் அடித்த படம்

அமீரிடம் கதை கேட்ட தளபதி

இருப்பினும் படத்தின் கதை நன்றாக இருந்ததால் அதில் நடிக்க விஜய் ஓகே சொல்லிவிட்டார். ஆனால் இந்த படத்திற்கு பெரிய பட்ஜெட் தயாரிப்பாளர்கள் தான் கிடைக்கவில்லை. அப்படியே வருடங்களும் கடந்தது, விஜய்யை அமீர் ஃபாலோ பண்ணாம விட்டதால் அந்த படம் ட்ராப் ஆனது.

அமீருக்கு எந்த ஒரு ஹீரோ பின்னாடியும் போக பிடிக்காது. அதனால் இந்த படம் கைவிடப்பட்டது. மேலும் கண்ணபிரான் கதையில் சூர்யாவை வைத்து எடுக்கவும் அமீர் நினைத்தார். ஆனால் அதுவும் நிறைவேறாமல் போனது.

Also read: கை கொடுத்து தூக்கி விட்டவருக்கு நீங்க காட்டுற நன்றி கடனா.? 5 வருஷமாக எட்டி கூட பார்க்காத விஜய்