மொத்தமா நம்பிக்கை சிதச்சிட்டாங்க.! அதுக்காகத்தான் வீடியோ வெளியிட்டோம், சுரேஷ் சந்திரா விளக்கம்

Ajith : இன்று அஜித் ரசிகர்களுக்கு பயத்தை ஏற்படுத்தும் விதமாக அவரது மேனேஜர் சுரேஷ் சந்திரா வீடியோ வெளியிட்டு இருந்தார். அதாவது கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அஜர்பைஜானில் விடாமுயற்சி படப்பிடிப்பில் அஜித் மற்றும் ஆரவ் இருவருக்கும் எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டு இருந்தது.

அதிர்ஷ்டவசமாக நூலிழையில் இருவரும் உயிர்தப்பி இருந்தனர். இந்நிலையில் திடீரென சுரேஷ் சந்திரா இந்த வீடியோவை வெளியிடுவதற்கான காரணம் மற்றும் விபத்து எவ்வாறு நடந்தது என்பதை கூறியிருக்கிறார்.

அதாவது அஜித் இந்த சீன் எடுக்கும் போது காரை வேகமாக ஓட்டி சென்றுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் அடிபள்ளத்தில் கவிழ்ந்து உள்ளது. இதைப் பார்த்து பதறிப் போய் மொத்த யூனிட்டும் காரை நோக்கி ஓடி உள்ளனர்.

அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய அஜித்

மேலும் அந்த கார் ஹம்மர் கார் என்பதால் பெரிய அளவில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. மேலும் இந்த வீடியோவை வெளியிடவும் ஒரு காரணம் இருக்கிறது. அதாவது நிதி நெருக்கடியால் விடாமுயற்சி படம் டிராப்பானதாக இணையத்தில் செய்தி வெளியாகி வருகிறது.

விடாமுயற்சி படத்திற்காக ரிஸ்க் எடுத்து நடித்து உள்ளனர். ஆனால் படம் டிராப் ஆயிடுச்சுன்னு சொல்லும்போது அதில் உழைத்த அத்தனை பேரின் மனதும் கஷ்டப்படுகிறது. மேலும் அஜித் ரசிகர்கள் மற்றும் விடாமுயற்சி டீமுக்கு உத்வேகம் மற்றும் தெம்பை இந்த வீடியோ கொடுக்கும் என்பதால் வெளியிடப்பட்டது என சுரேஷ் சந்திரா கூறியுள்ளார்.

பொதுவாக இதுபோன்ற ரிஸ்க்கான காட்சிகளில் டாப் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள். டூப் வைத்து படமாக்கப்படும். ஆனால் எவ்வளவு ரிஸ்க்கான காட்சிகள் இருந்தாலும் அவரே இறங்கி நடிக்க கூடியவர். மேலும் விடாமுயற்சியில் அவர் போட்ட கடின உழைப்புக்கு கண்டிப்பாக இப்படம் கை மேல் பலனை கொடுக்கும்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்