வெங்கட்பிரபு தாராள மனசுக்கு வந்த தலைவலி.. இயக்குனர்கள் வயிற்றில் அடித்த பரிதாபம்

கோலிவுட்டில் எதார்த்மாகவும் ஜாலியாகவும் இருக்கக்கூடிய படங்களை எடுத்து தற்போது வெற்றி இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கும் இயக்குனர் வெங்கட் பிரபுவின், உதவி இயக்குனர்களின் வயிற்றில் அடித்த பரிதாபமான சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.

வெங்கட்பிரபு பொதுவாகவே தாராள குணம் படைத்தவர். பல இயக்குனர்கள், தன்னிடம் இருக்கும் உதவி இயக்குனர்களுக்கு தயாரிப்பாளர்களின் கையிலிருந்து பணத்தைப் பெற்று சம்பளம் கொடுப்பார்கள். ஆனால் வெங்கட்பிரபு அதில் கொஞ்சம் தாராள மனசுக்காரர்.

Also Read: அப்பா, பிள்ளை காம்போ.. இசையில் மூழ்கடிக்க உள்ள வெங்கட் பிரபு

மற்ற இயக்குனர்களை போல் உதவி இயக்குனர்களிடம் ஸ்ட்ரிக்டாக இருக்காமல், ரொம்ப ஜாலியாகவே பழகக்கூடிய மனிதர். தன்னிடமிருக்கும் அசிஸ்டன்ட் டைரக்டர் எல்லோரிடமும் நட்பாக நெருங்கிப் பழகுவாராம்.

அவர்களுக்கு எப்போதும் சம்பளத்தை இழுத்தடிக்காமல் சரியாக கரெக்டாக கொடுப்பார். அதிலும் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, நடிப்பில் வெளியான மாபெரும் வெற்றிப்படமான மாநாடு படத்திற்கு, வெங்கட் பிரபுவிடம் பணிபுரிந்த உதவி இயக்குனர்களுக்கு 40 ஆயிரம் சம்பளம் கொடுத்திருக்கிறார்.

Also Read: வெங்கட் பிரபுவால் மன உளைச்சலுக்கு ஆளான பிரபலம்.. ரொம்ப ஓவரா தான் போறீங்க!

அதன் பிறகு இப்போது நாக சைதன்யாவை வைத்து எடுக்கும் தெலுங்கு படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாக உள்ளது. இப்படத்தில் நாக சைதன்யாவுக்கு வில்லனாக அருண் விஜய் நடிக்கவுள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு வருகின்ற 23 ஆம் தேதி துவங்கப்பட இருந்த நிலையில், வெங்கட் பிரபு தன்னிடமுள்ள அசிஸ்டன்ட் டைரக்டர்களுக்கு 65 ஆயிரம் சம்பளம் கொடுக்கலாம் என்று நினைத்து இருந்தாராம். ஆனால் இப்பொழுது தெலுங்கு இண்டஸ்ட்ரியில் சம்பள பிரச்சனை அதனால் கொடுக்க முடியவில்லை.

Also Read: நான் அவரை இயக்குவது யாருக்கும் பிடிக்கல.. பலநாள் உண்மையை உடைத்த வெங்கட் பிரபு

Next Story

- Advertisement -