அப்பா, பிள்ளை காம்போ.. இசையில் மூழ்கடிக்க உள்ள வெங்கட் பிரபு

தமிழ் சினிமாவில் தற்போது வெற்றி இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் வெங்கட்பிரபு. கடைசியாக இவர் இயக்கத்தில் வெளியான மாநாடு படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதனால் வெங்கட் பிரபு, சிம்பு, எஸ்ஜே சூர்யா மார்க்கெட் தற்போது பல மடங்கு உயர்ந்துள்ளது.

இந்நிலையில் தெலுங்கில் முன்னணி ஹீரோவாக இருக்கும் நாக சைதன்யாவின் படத்தை வெங்கட் பிரபு இயக்கயுள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாக உள்ளது. இப்படத்தில் நாக சைதன்யாவுக்கு வில்லனாக அருண் விஜய் நடிக்கவுள்ளார் என்ற தகவல் சமீபத்தில் வெளியாகியிருந்தது.

இப்படத்தின் படப்பிடிப்பு வருகின்ற 23 ஆம் தேதி தொடங்கயுள்ளது. வெங்கட்பிரபுவின் பெரும்பாலான படங்களில் அவரின் பெரியப்பா இளையராஜாவின் மகனான யுவன் சங்கர் ராஜாதான் இசையமைப்பார். அவ்வாறு வெங்கட்பிரபு, யுவன் கூட்டணியில் உருவாகும் எல்லா படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட் தான்.

மேலும் வெங்கட்பிரபுவின் ஒரு சில படங்களில் அவரது தம்பி பிரேம்ஜியும் இசையமைத்துள்ளார். இந்நிலையில் நாக சைதன்யா ஹீரோவாக நடிக்கும் படத்தில் யார் இசையமைக்க போகிறார்கள் என்ற பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது. தற்போது இளையராஜா மற்றும் யுவன் கூட்டணியில் இந்த படம் உருவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள மாமனிதன் படத்தில் இளையராஜா மற்றும் யுவன் இணைந்து பணியாற்றியுள்ளனர். இப்படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக அப்பா, மகன் என இருவருமே சேர்ந்து வெங்கட் பிரபுவின் படத்தில் பணியாற்ற உள்ளனர்.

மேலும், முதல் முறையாக வெங்கட் பிரபுவின் படத்தில் இளையராஜா இசையமைக்கயுள்ளார். வெங்கட்பிரபுவின் தந்தையும் மற்றும் இயக்குனருமான கங்கை அமரனும், அவரது அண்ணன் இளையராஜாவும் பல வருடமாக பேசிக்கொள்ளாமல் இருந்தன. சமீபத்தில் இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

- Advertisement -