வெங்கட் பிரபுவால் மன உளைச்சலுக்கு ஆளான பிரபலம்.. ரொம்ப ஓவரா தான் போறீங்க!

வெங்கட்பிரபுவின் படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. வெங்கட் பிரபு ஒரு குறிப்பிட்ட நட்பு வட்டாரத்தை வைத்து தொடர்ந்து பல வெற்றிப் படங்களை கொடுத்து இருந்தார். மேலும் சிம்புவை வைத்து வெங்கட் பிரபு இயக்கிய மாநாடு படத்திற்கு பெரும் அளவில் வரவேற்பு கிடைத்தது. அதுமட்டுமல்லாமல் வசூலிலும் சக்கை போடு போட்டது.

இந்நிலையில் வெங்கட்பிரபுவின் நெருங்கிய நண்பர்தான் நிதின் சத்யா. இவர் வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியான சென்னை 600028, சரோஜா, பிரியாணி போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் உலக நாயகன் கமலஹாசன் நடிப்பில் வெளியான வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்திலும் நிதின் சத்யா நடித்திருந்தார்.

ஜெய், சிவா, வைபவ், அரவிந்த் ஆகாஷ், பிரேம்ஜி, நிதின் சத்யா என்று இவர்கள் எல்லோருமே ஒரு நெருங்கிய நட்பு வட்டாரங்கள் ஆக உள்ளனர். இவர்கள் எல்லோரும் சேர்ந்து வெங்கட் பிரபுக்கு இரண்டு, மூன்று வெற்றி படங்களை நடித்து கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் சினிமா வாய்ப்பு கிடைக்காததால் நிதின் சத்யா தயாரிப்பில் இறங்கியுள்ளார். முதலில் வெங்கட்பிரபுவின் படத்தை தயாரிப்பதற்காக அவரிடம் ஒரு கோடி ரூபாய் அட்வான்ஸ் கொடுத்துள்ளார். அந்தப் படத்தில் நாகர்ஜுனா மற்றும் அரவிந்த்சாமி இருவரையும் ஹீரோவாக நடிக்க வைக்க பேசியுள்ளனர்.

இந்நிலையில் இதை நம்பி நிதின் சத்யா படத்திற்கான வேலை எல்லாம் இறங்கி செய்யத் தொடங்கியுள்ளார். மேலும் இப்படத்திற்காக நிறைய செலவழித்தும் உள்ளாராம். ஆனால் மாநாடு படத்தின் வெற்றிக்கு பிறகு வெங்கட் பிரபுவை கையில் பிடிக்கமுடியவில்லை.

அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கிறது. தெலுங்கில் நாக சைதன்யாவை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். இதனால் நிதின் சத்யாவை வெங்கட்பிரபு கண்டுகொள்ளவே இல்லையாம். நிதின் சத்யா போன் செய்தாலும் வெங்கட் பிரபு எடுப்பதே இல்லையாம். இதனால் நிதின் சத்யா என்ன செய்வதென்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளாராம்.

Next Story

- Advertisement -