வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

அர்ஜுனுக்கு சம்பந்தியாகும் பிரபல காமெடி நடிகர்.. விரைவில் ஐஸ்வர்யாவுக்கு திருமணம்

Actress Aishwarya Arjun Marriage: நடிகர் அர்ஜுன் ஒரு காலகட்டத்தில் கதாநாயகனாக கலக்கி வந்த நிலையில் இப்போது வில்லன் அவதாரம் எடுத்து படங்களில் பட்டையை கிளப்பி வருகிறார். அந்த வகையில் லோகேஷ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். சமீபத்தில் லியோ படத்தில் அவரது கெட்டப் புகைப்படம் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டானது.

அர்ஜுனனின் மூத்த மகளான ஐஸ்வர்யா விஷால் நடிப்பில் வெளியான பட்டத்து யானை படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பின்பு ஒரு சில படங்களில் நடித்த அவருக்கு எந்த படமும் பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. இந்நிலையில் ஐஸ்வர்யாவுக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ள செய்தி வெளியாகி இருக்கிறது.

Also Read : தமிழில் ஆட்டிப் படைக்கும் 5 அக்கட தேசத்து நடிகர்கள்.. சென்னை காரன்னு காலரை தூக்கும் அல்லு அர்ஜுன்

அதுவும் அர்ஜுனுக்கு சம்பந்தியாக உள்ளார் பிரபல காமெடி நடிகர். அதாவது காமெடி, குணச்சித்திரம் என எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் பின்னி பெடல் எடுக்கக்கூடியவர் தம்பி ராமையா. மைனா படத்தில் இவரது கதாபாத்திரம் இவர்களை பெரிய அளவில் கவர்ந்தது.

இவருடைய மகன் உமாபதி சில படங்களில் கதாநாயகனாக நடித்து வந்தார். இந்நிலையில் ஆக்சன் கிங் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யாவை விரைவில் உமாபதி திருமணம் செய்து கொள்ள இருக்கிறாராம். இந்த செய்தி தான் இப்போது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதாவது உமாபதி ஜீ தமிழில் ஒளிபரப்பான சர்வைவர் என்ற நிகழ்ச்சியில் பங்கு பெற்றார்.

Also Read : விஜய்க்கு டஃப் கொடுக்கும் அர்ஜுனின் லியோ கெட்டப்.. ட்ரெண்டாகி கொண்டிருக்கும் புகைப்படம்

இந்த நிகழ்ச்சியை அர்ஜுன் தான் தொகுத்து வழங்கி இருந்தார். இந்த பழக்கத்தின் காரணமாக அர்ஜுன் மற்றும் அவரது குடும்பத்துடன் நெருங்கி பழகி வந்துள்ளார் உமாபதி. ஒரு கட்டத்திற்கு மேல் ஐஸ்வர்யா மற்றும் உமாபதி இருவரும் நட்பை தாண்டி காதலர்களாக மாறி உள்ளனர். இப்போது இரு குடும்பத்தினரும் இவர்களுக்கு திருமணத்திற்கு பச்சைக்கொடி காட்டியுள்ளனர்.

ஆகையால் விரைவில் உமாபதி மற்றும் ஐஸ்வர்யா திருமணம் நடக்க உள்ளதாம். இவர்களது திருமண செய்தியை அதிகாரப்பூர்வ அறிவிப்பாக அர்ஜுன் மற்றும் தம்பி ராமையா இருவரும் விரைவில் அறிவிக்க உள்ளனர். மேலும் உமாபதியும் கதாநாயகனாக நல்ல கதைக்காக இயக்குனர்களை அணுகி வருகிறாராம்.

Also Read : எல்லா கெட்டப்பிலும் முத்திரை பதிக்கும் 5 நடிகர்கள்.. கொத்தளியாக மிரள வைத்த தம்பி ராமையா

- Advertisement -

Trending News