ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

தமிழில் ஆட்டிப் படைக்கும் 5 அக்கட தேசத்து நடிகர்கள்.. சென்னை காரன்னு காலரை தூக்கும் அல்லு அர்ஜுன்

Tamil Actor: தற்சமயம் தமிழ் நடிகர்களை காட்டிலும் அக்கட தேசத்து நடிகர்கள்தான் கோலிவுட்டை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றனர். அதிலும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய இந்த 5 நடிகர்களும் தமிழ் ஹீரோக்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் கோலிவுட்டில் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கின்றனர்.

துல்கர் சல்மான்: பழம்பெரும் மலையாள நடிகர் மம்முட்டியின் இளைய மகனான துல்கர் சல்மான் தற்சமயம் மோலிவுட்டில் மட்டுமல்ல கோலிவுட்டிலும் சாக்லேட் பாயாக ரசிகைகளின் மனதைக் கொள்ளை அடித்துக் கொண்டிருக்கிறார். இவர் இடைநிலைக் கல்வியை சென்னையில் தான் படித்திருக்கிறார். இதனால் மலையாளத்தை போலவே தமிழையும் பரிச்சயமாக பேசக்கூடிய துல்கர் சல்மான் நடிகராக என்ட்ரி கொடுத்தபின் தமிழில் வரக்கூடிய வாய்ப்புகளை தவறவிடாமல் நடித்துக் கொண்டிருக்கிறார்.

அதிலும் இவர் நடிப்பில் வெளியான வாயை மூடி பேசவும், பெங்களூர் டேஸ், ஓ காதல் கண்மணி போன்ற படங்கள் அனைத்தும் இளசுகளின் பேவரைட் படங்கள் ஆகும். சுமார் 11 வருடங்களாக சினிமாவில் ஆதிக்கம் செலுத்தி கொண்டிருக்கும் துல்கர் சல்மானின் ‘கிங் ஆப் கோதா’ என்ற படம் வரும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கிறது. இதற்கான போஸ்டர் தற்போது இணையத்தில் வெளியாகி ட்ரெண்டாகி கொண்டிருக்கிறது.

Also Read: புஷ்பா 2-க்கு பிறகு தமிழ் பட ரீமேக்கில் நடிக்க போகும் அல்லு அர்ஜுன்.. சர்ப்ரைஸ் தாங்காமல் வளைத்துப் போட்ட சம்பவம்

பகத் பாசில்: முன்பு நஸ்ரியாவின் கணவராக மட்டுமே தெரிந்த பகத் பாசில், இப்போது தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக மாறிவிட்டார். ஏனென்றால் விக்ரம் படத்தில் அமர் ஏஜென்ட் என்ற கதாபாத்திரத்தில் பகத் பாசில் கச்சிதமாக பொருந்தி அட்டகாசமாக நடித்தார். இதற்கு முன்பே வேலைக்காரன் படத்தில் சிவகார்த்திகேயனுடன் எதிர்மறை கேரக்டரில் கனகச்சிதமாக நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்தார். அதுமட்டுமல்ல வரும் ஜூலை 14ஆம் தேதி ரிலீசாக இருக்கும் மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு மீண்டும் வில்லனாக நடித்துள்ளார். இதன் ட்ரைலரில் பகத் பாசில் கம்பீரமாக குதிரையின் மேல் அமர்ந்து கெத்து காட்டி இருப்பது மாவீரன் படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் எகிற வைத்திருக்கிறது.

அல்லு அர்ஜுன்: நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என தெலுங்கில் ரவுண்டு கட்டிக் கொண்டிருந்த அல்லு அர்ஜுனுக்கு புஷ்பா படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களும் கிடைத்துவிட்டனர். இப்போது புஷ்பா 2 படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இப்படி தமிழ் ஆடியன்சை டார்கெட் வைத்துக்கொண்டு, அடுத்தடுத்த படங்களை தேர்வு செய்து நடித்துக் கொண்டிருக்கும் அல்லு அர்ஜுன் சமீபத்தில் வெளியான போர் தொழில் என்ற படத்தின் வசூலை பார்த்த பிறகு, அந்த படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை பெற்றிருக்கிறார்.

போர் தொழில் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் அல்லு அர்ஜுன் ஹீரோவாகவும், தமிழில் சரத்குமார் நடித்த அதே கதாபாத்திரத்தில் தெலுங்கிலும் அவரையே நடிக்க வைக்கவும் திட்டமிட்டிருக்கிறார். இவர் தமிழ் சினிமாவில் இவ்வளவு நாட்டம் கொள்வதற்கு என்ன காரணம் என்றால், அல்லு அர்ஜுனின் குடும்பம் ஹைதராபாத்திற்கு செல்வதற்கு முன்பு சென்னையில் தான் இருந்திருக்கிறார்கள். அதிலும் இவர் வளர்ந்ததெல்லாம் சென்னை தான். ‘நான் ஒரு சென்னைக்காரன்’ என்று ஒவ்வொரு தமிழ் பட ப்ரோமோஷனிலும் கெத்து காட்டுகிறார்.

Also Read: நம்ம நடிகர்களை ஓரம் கட்ட வரும் 5 அக்கட தேசத்து ஹீரோக்கள்.. ரசிகர்களைக் கவர்ந்த அல்லு அர்ஜுன்

பிரபாஸ்: தெலுங்கு நடிகரான பிரபாஸ், கோலிவுட்டிற்கு பாகுபலி படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்து தமிழ் ரசிகர்களின் ஃபேவரிட் ஹீரோவாகவே மாறிவிட்டார். பாகுபலி படத்திற்கு பிறகு இப்போது பிரபாஸின் ஆதி புருஷ் திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என ஒரே நேரத்தில் கடந்த 16 ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றாலும் வசூல்ரீதியாக அடித்து நொறுக்கி கொண்டிருக்கிறது. மூன்றே நாளில் இந்த படம் 340 கோடியை வசூலித்திருக்கிறது. 600 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் ஐந்து நாட்களில் உலகெங்கும் 400 கோடியை வசூலித்து சாதனை படைத்திருக்கிறது. இவர் அடுத்தடுத்து தமிழ் ரசிகர்களுக்காக கோலிவுட்டின் டாப் இயக்குனர்களின் படங்களில் நடிக்க வேண்டும் என ஸ்கெட்ச் போட்டுக் கொண்டிருக்கிறார்.

மோகன்லால்: மலையாள சூப்பர் ஸ்டார் ஆன மோகன்லால் நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், பின்னனி பாடகர், இயக்குனர் என ஆல் ரவுண்டராக கலக்கிக் கொண்டிருக்கிறார். இவர் மலையாளத்தில் மட்டுமல்லாமல் தமிழ் மற்றும் கன்னட படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் முதல் முதலாக இருவர் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்த மோகன்லால், அதன் பிறகு நிறைய தமிழ் படங்களில் நடித்திருக்கிறார். அதிலும் விஜய் காம்போவில் ஜில்லா என்ற படத்தில் நடித்து அசத்தியிருப்பார்.

Also Read: லோகேஷுக்கு ஸ்கெட்ச் போட்டிருக்கும் 5 அக்கட தேசத்து டாப் ஹீரோக்கள்.. விடாமல் இழுத்துபிடித்திருக்கும் சூப்பர் ஸ்டார்

இவ்வாறு இந்த 5 அக்கட தேசத்து நடிகர்கள்தான் தற்சமயம் தமிழ் சினிமாவை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் தமிழ் நடிகர்களுக்கு எல்லாம் டஃப் கொடுக்கும் வகையில் தொடர்ந்து கோலிவுட்டில் ரவுண்டு கட்டி நடித்துக் கொண்டிருக்கின்றனர்.

- Advertisement -

Trending News