வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

இறுதிக்கட்டத்தை நெருங்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ்.. முல்லையால் ஏற்பட போகும் விடிவுகாலம்

Pandian Stores: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. ஒரே நேரத்தில் வாந்தி எடுத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் மருமகள்கள் அடுத்தடுத்த குழந்தையை பெற்றெடுத்து உள்ளனர். முல்லைக்கு குழந்தை பிறந்த நிலையில் சமீபத்தில் ஐஸ்வர்யாவுக்கும் குழந்தை பிறந்து விட்டது.

இப்போது தனத்திற்கு மட்டும் குழந்தை இன்னும் பிறக்காத நிலையில் அவருக்கு புற்றுநோய் இருப்பது தெரிய வருகிறது. ஆனால் மீனா மற்றும் தனத்திற்கு தெரிந்த உண்மையை குடும்பத்திடம் இருந்து மறைக்கிறார்கள். ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் முல்லைக்கு இந்த விஷயம் தெரிந்து விடுகிறது.

Also Read : இந்த வார டிஆர்பி-யில் ரணகளம் செய்த டாப் 10 சீரியல்கள்.. மோதிக் கொள்ளும் சன் மற்றும் விஜய் டிவி

ஆகையால் வலுக்கட்டாயமாக தனத்தை மருத்துவரிடம் மீனா மற்றும் முல்லை இருவரும் அழைத்து செல்கிறார்கள். அப்போது இன்னும் ஒரு மாத காலம் குழந்தை பிறக்க அவகாசம் இருக்கும் நிலையில் உடனடியாகவே ஆபரேஷன் செய்து குழந்தையை எடுக்க வேண்டும். அதன் பிறகு சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும் என டாக்டர் அறிவுறுத்துகிறார்.

இல்லையென்றால் அந்த நோயின் தாக்கம் அதிகமாக பரவி விடும். ஆகையால் இன்னும் சிக்கல் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக டாக்டர் கூறிவிடுகிறார். ஒரு புறம் கண்ணனுடன் பேச மூர்த்தி மறுக்கிறார். இதனால் மிகுந்த வருத்தத்தில் இருக்கும் கண்ணனுக்கு கதிர் ஆறுதல் சொல்கிறார். மேலும் மூர்த்தி மற்றும் தனம் தங்களுக்கு பிறக்கும் குழந்தை பெண் பிள்ளையாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று பேசி வருகிறார்கள்.

Also Read : பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் இப்படி ஒரு களவாணியா? குறுக்கு புத்தியால் சுக்கு நூறாகும் மானம் மரியாதை

அதோடு மட்டுமல்லாமல் என் கடைசி வரை நீ இருக்க வேண்டும் என மூர்த்தி தனத்திடம் சொல்கிறார். இந்நிலையில் குடும்பத்துக்கு தெரியாமல் தனத்திற்கு சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்கிறார்கள். இதற்காக முல்லை மற்றும் தனம் மருத்துவமனைக்கு கிளம்பும் போது முல்லையின் அம்மா வந்து விடுகிறார். எப்படியோ இவரை சமாளித்து மருத்துவமனைக்கு செல்ல உள்ளனர்.

அடுத்ததாக தனத்திற்கு ஆப்ரேஷன் செய்து குழந்தையை வெளியில் எடுக்க உள்ளனர். பிறகு பாண்டியன் ஸ்டோர்ஸ் மொத்த குடும்பத்திற்கும் தனத்திற்கு உள்ள பிரச்சனை தெரிய வர அதற்கான சிகிச்சையையும் செய்ய உள்ளனர். இதன் மூலம் முல்லையால் ஒரு விடிவு காலம் ஏற்பட்டு பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் முடிவுக்கு வர இருக்கிறது.

Also Read : வந்த சுவடே தெரியாமல் ஊத்தி மூட போகும் விஜய் டிவி சீரியல்.. டிஆர்பி இல்லாததால் எடுத்த அதிரடி முடிவு

- Advertisement -

Trending News