வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

இந்த வார டிஆர்பி-யில் ரணகளம் செய்த டாப் 10 சீரியல்கள்.. மோதிக் கொள்ளும் சன் மற்றும் விஜய் டிவி

This Week TRP Rating  List: சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் எந்த சீரியலுக்கு ரசிகர்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்து பார்க்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளும் விதமாக ஒவ்வொரு வாரமும் டிஆர்பி ரேட்டிங் லிஸ்ட் வெளியாகும். அந்த வகையில் இந்த வாரத்திற்கான ரேட்டிங் லிஸ்ட் தற்போது இணையத்தில் வெளியாகி கலக்கிக் கொண்டிருக்கிறது.

இதில் வழக்கம் போல் சன் டிவியின் ஆதிக்கம் தான் அதிகமாக இருக்கிறது. இதில் 10-வது இடம் சன் டிவியின் அன்பே வா சீரியலுக்கு கிடைத்திருக்கிறது. அதன் தொடர்ச்சியாக முன்பெல்லாம் டாப் 5 இடத்தில் இருக்கும் விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இப்போது 9-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

8-வது இடம் புத்தம் புது சீரியலான சிறகடிக்க ஆசை என்ற சீரியலுக்கு கிடைத்துள்ளது. இதில் பிடிக்காமல் திருமணம் செய்து கொண்டு, இப்போது கணவன் மனைவியாக வாழப் போராடிக் கொண்டிருக்கும் முத்து-மீனா தம்பதியரின் சுவாரசியமான காதல் கதையையும், மாமியார் கொடுமையையும் பார்க்க முடிகிறது.

7-வது இடம் அதிரடியும் சுவாரசியமும் குறையாத சுந்தரி சீரியலுக்கும், 6-வது இடம் புத்தம் புது சீரியலான மிஸ்டர் மனைவி என்ற சீரியலுக்கும் கிடைத்திருக்கிறது. 4-வது மற்றும் 5-வது இடம் சன் டிவியின் இனியா மற்றும் விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியலுக்கு கிடைத்துள்ளது.

3-வது இடம் அண்ணன் தங்கையின் பாச போராட்டத்தில் அழகாக காண்பிக்கும் வானத்தை போல சீரியலுக்கும் கிடைத்துள்ளது. 2-வது இடம் குணசேகரின் நக்கல் நையாண்டிக்கு குறைச்சல் இல்லாத எதிர்நீச்சல் சீரியலுக்கு கிடைத்திருக்கிறது. இந்த சீரியலில் இருக்கும் நான்கு மருமகள்கள் தங்களது சுயமரியாதையை தற்காத்துக் கொள்ள போராடுகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக, தோழியையே உருக உருக காதலித்து அவரை திருமணம் செய்து கொள்ள போராடும் காதலைனையும், தோழன் காதலிக்கிறான் என்ன தெரிந்தும் குடும்பத்திற்காக ஏற்றுக்கொள்ள தயங்கும் தோழியையும் குறித்த கதை களத்தைக் கொண்ட கயல் சீரியல் முதல் இடத்தை பிடித்து மாஸ் கட்டுகிறது. இவ்வாறு இந்த வார டிஆர்பி ரேட்டிங் லிஸ்டில் சன் மற்றும் விஜய் டிவிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியுள்ளது.

- Advertisement -

Trending News