வந்த சுவடே தெரியாமல் ஊத்தி மூட போகும் விஜய் டிவி சீரியல்.. டிஆர்பி இல்லாததால் எடுத்த அதிரடி முடிவு

Vijay Tv Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வந்தது. ஆனால் சன் டிவியில் நம்பர் ஒன் சீரியலான எதிர்நீச்சலால் விஜய் டிவியின் டிஆர்பி பெரிதும் பாதிக்கப்பட்டது. என்னதான் புதுவிதமான சீரியல்களை இறக்கினாலும் எதிர்நீச்சல் முன்னிலையில் எதுவும் செல்லுபடி ஆகவில்லை.

மேலும் ஒரே கதையை தான் எல்லா சீரியல்களிலும் விஜய் டிவி உருட்டி வருகிறார்கள். இதனால் வந்த சுவடே தெரியாமல் விரைவில் ஒரு தொடர் முடிவுக்கு வர இருக்கிறது. இதற்கு பதிலாக விஜயின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் ரேஷ்மா, தினேஷ், வெங்கட், ராதிகா போன்ற பிரபலங்கள் நடிப்பில் உருவாகி வரும் கிழக்கு வாசல் தொடர் ஒளிபரப்பாக இருக்கிறது.

Also Read : பிக்பாஸ் எல்லாம் எனக்கு முக்கியம் இல்ல.. விஜய் பட நடிகை பின்னால் போன விஜய் டிவி ரக்சன்

அதாவது ஒரு காலகட்டத்தில் விஜய் டிவியில் டிஆர்பியில் முதலிடத்தில் இருந்த தொடர்பு தான் பாரதி கண்ணம்மா. ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் இந்த தொடர் எப்போது முடியும் என்று ரசிகர்களுக்கு அலுப்பு வரும் வகையில் இயக்குனர் ஒரே கதையை உருட்டி வந்தார். ஒரு கட்டத்திற்கு பாரதிகண்ணம்மா தொடருக்கு எண்டு கார்டு போட்டனர்.

ஆனால் பாரதி கண்ணம்மா இரண்டாம் பாகம் என்று உடனடியாகவே தொடங்கப்பட்டது. இதில் பாரதி கதாபாத்திரத்தில் சிபு சூரியன் மற்றும் கண்ணம்மா கதாபாத்திரத்தில் வினுஷா ஆகியோர் நடித்து வந்தனர். இந்த தொடர் தொடக்கத்தில் இருந்தே டிஆர்பி இல்லாமல் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.

Also Read : ஜனனிக்கு வார்னிங் கொடுக்கும் கௌதம்.. பகல் கனவு காணும் குணசேகரன்

இப்போது பாரதி கண்ணம்மா 2 இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதன் காரணமாக இன்னும் சில வாரங்களில் இந்த தொடர் முடிவு பெற இருக்கிறது. பாரதி கண்ணம்மா தொடரை பல வருடங்களாக உருட்டி வந்த நிலையில் இதற்கு சீக்கிரமே விடிவு காலம் கொடுத்ததற்கு மிக நன்றி என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

மேலும் அடுத்ததாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தொடராவது எதிர்நீச்சல் சீரியலுக்கு டஃப் கொடுக்குமா என்று ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகிறார்கள். மேலும் கிழக்கு வாசல் ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில் இந்த படம் மக்களுக்கு பிடிக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

Also Read : அழுகாட்சியாக உருட்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ்.. விரைவில் போட உள்ள எண்டு கார்டு

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்