ஜனனியை பழிவாங்க போட்ட மாஸ்டர் பிளான்.. குணசேகரன் கூடவே இருந்து குழி பறிக்க போகும் துரோகி

Ethirneechal: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் தன் மகள் காணவில்லை என்கிற பயம் கொஞ்சம் கூட இல்லாமல் மெத்தனத்தில் இருக்கிறார். இவருடன் சேர்ந்து விசாலாட்சியும் பேத்தி என்ன ஆனார் என்ற பதட்டமும் இல்லாமல் மருமகளை குறை சொல்லி புலம்புகிறார். இதில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் போலீஸ் சொன்ன அந்த ஒரு வார்த்தை கதிர் மனதை முற்றிலுமாக மாற்றி இருக்கிறது.

ஏற்கனவே கதிருக்கு அடிபட்ட பொழுது நந்தினி மற்றும் தாரா பாப்பா கூடவே இருந்து பார்த்ததால் அவருடைய மனதில் பாசம் என்கிற ஒரு பிணைப்பு ஏற்பட்டு விட்டது. தற்போது தர்ஷினியை காணும் என்கிற பொழுது நாட்டு நடப்பு எந்த நிலைமையில் இருக்கிறது என்பதனால் பயத்தில் நந்தினிக்கு ஆதரவாக நிற்கிறார்.

அதனால் தான் நந்தினிக்கு போன் பண்ணி பேசுகிறார் கதிர். ஆனால் நந்தினி வழக்கம்போல் கதிர் ஏதோ உறண்டை இழுக்க தான் கூப்பிடுகிறார் என்று நினைத்து நீங்கள் என்ன கூப்பிட்டாலும் நாங்கள் வரமாட்டோம். அந்த வீட்டுக்கு நாங்கள் வந்தால் தர்ஷினியோடு தான் வருவோம் என்று சொல்கிறார். அதற்கு கதிர் உங்களை யார் இங்கு கூப்பிட்டா, எப்படியாவது தர்ஷனையே கூட்டிட்டு வாருங்கள் என்று சொல்ல தான் போன் பண்ணேன்.

Also read: தளபதி கூட்டணியில் இணைந்துள்ள எதிர்நீச்சல் மருமகள்.. வெங்கட் பிரபு வெளியிட்ட புகைப்படம்

அது மட்டும் இல்லாமல் என்னை இங்கே நன்றாக கவனிப்பதற்கு என் பொண்ணு தாரா இருக்கிறார் என்று சொல்லி உணர்வுபூர்வமாக நந்தனிடம் கதிர் பேசுகிறார். இந்த ஒரு வார்த்தைக்கு தானே இத்தனை வருடமாக போராடினேன் என்பதற்கு ஏற்ப நந்தினி சந்தோஷத்தில் ஆனந்த கண்ணீர் வடிக்கிறார்.

அடுத்தபடியாக தர்ஷினி வாயையும் கையும் கட்டி போட்டு ரூமுக்குள் யாரோ அடைத்து போட்டு இருக்கிறார்கள். இந்த வேலையை பார்த்தது ராமசாமி குடும்பத்தில் உள்ளவர்கள் தான். அதாவது ஜனனியை பழிவாங்குவதற்காக அவர்கள் போட்ட மாஸ்டர் பிளான். கதிரை அடித்ததாக இருக்கட்டும் தற்போது தர்ஷினியை கடத்திட்டு போய் அடச்சி வைத்திருப்பதும் அவர்கள் தான்.

அதற்கு காரணம் பிள்ளையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்ட வேண்டும் என்பதற்காக பின்னாடி இந்த சூழ்ச்சி எல்லாம் பண்ணிக்கொண்டு குணசேகரனிடம் நல்ல பெயர் வாங்குவதற்காக கண்டுபிடிப்பது மாதிரி பிளான் பண்ணி இருக்கிறார்கள். அப்பொழுதுதான் அந்த வீட்டில் ஒரு நபராக உள்ளேன் நுழைய முடியும். அத்துடன் கூடவே இருந்து உறவாடி ஒவ்வொருவரையும் குழிப்பறிக்கவும் முடியும் என்பதற்காக போட்ட பிளான்.

Also read: மாரிமுத்து கேரக்டரை ஈடுகெட்ட போகும் நந்தினியின் கணவர்.. செல்லா காசாக விழி பிதுங்கி நிற்கும் குணசேகரன்