ஆண்டவன் இருக்காண்டா குமாரு.. பாக்யாவின் அருமையை புரிய வைத்த ராதிகா, கோபிக்கு வச்ச வேட்டு

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் வர வர பயங்கர போரடிக்கிறது என ரசிகர்கள் கருதுவதால் சீரியலில் சுவாரசியம் காட்ட வேண்டும் என இயக்குனர் முயற்சிக்கிறார். அதிலும் இப்போது ராதிகாவின் செயல் கோபியை தலைசுற்ற வைத்திருக்கிறது.

ஏனென்றால் குடும்ப செலவுகள் அனைத்தையும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று பெருமை பீத்திய கோபிக்கு, ராதிகா வசமாக வச்சு செய்து விட்டார். ஏனென்றால் ஒரு மாதத்திற்கு ரூபாய் 50,000 குடும்ப செலவிற்காக வேண்டும் என்று கோபியின் தலையில் இடியை இறக்கினார் ராதிகா.

Also Read: டிக்கெட் டூ பினாலே ஜெயிக்க போறது இவர்தான்.. சேனலின் மானத்தை காப்பாற்ற மட்டமான வேலை செய்யும் விஜய் டிவி

இதைக் கேட்டதும் ஆடிப்போன கோபி, இவ்வளவு நாள் குடும்ப செலவிற்காக பாக்யா ரூபாய் 10,000 கேட்டால் கூட அதை கொடுக்க கஷ்டமாக இருந்தது. இப்போது ஐம்பதாயிரம் ராதிகா கேட்டதும் திகைத்து நிற்கிறார். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த கோபியின் அப்பா, ‘ஆண்டவன் நிச்சயம் இருக்கிறார். உனக்கெல்லாம் பாக்யாவின் அருமையை ராதிகா ஒவ்வொரு நாளும் புரிய வைக்க தான் போகிறா’ர் என்று கோபியை வசை பாடுகிறார்.

வேறு வழி இல்லாமல் கோபி, செலவுக்கு கூட காசை வைத்துக் கொள்ளாமல் கையில் இருந்த மொத்த காசையும் ராதிகாவிற்கு தாரை பார்த்து விடுகிறார். இப்படி அசால்ட்டாக ராதிகா கோபிக்கு வேட்டு வைத்து, இனி வரும் நாட்களில் அவரை டம்மி பீஸ் ஆகவே மாற்ற போகிறார்.

Also Read: சீரியலில் தான் குடும்ப குத்துவிளக்கு.. கடற்கரையில் ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்ட முல்லை

அதுமட்டுமின்றி குடும்ப பொறுப்புகளை தலையில் சுமந்து கொண்டிருக்கும் பாக்யா, தன்னை விட்டு சென்ற மகள் நன்றாக படிக்க வேண்டும் என டியூஷன் சேர்த்து விடுகிறார். அந்த பணத்தையும் பாக்யா தான் கொடுத்திருக்கிறார். இப்படி கோபியை கொஞ்சம் கூட கண்டுக்காத பாக்யாவின் தைரியத்தை பலரும் பாராட்டுகின்றனர்.

மறுபுறம் பாக்யாவின் மாமியார் எழிலின் காதலை ஊத்தி மூடுவதற்கு சதி திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறார். இருப்பினும் இந்த சீரியல் முன்பு போன்று பரபரப்பு இல்லாததும், ராதிகாவின் வில்லத்தனம் எடுபடாததால் டிஆர்பி-யில் பின்னுக்கு தள்ளப்பட்டு இருக்கிறது.

Also Read: டிஆர்பி-யில் டாப் 6 இடங்களை ஆக்கிரமித்த ஒரே சேனல்.. புத்தம் புது சீரியல்களால் பின்னுக்குத் தள்ளப்பட்ட பிரபல சீரியல்கள்

- Advertisement -