Connect with us
Cinemapettai

Cinemapettai

trp-sun-vijay-tv-serial

India | இந்தியா

டிஆர்பி-யில் டாப் 6 இடங்களை ஆக்கிரமித்த ஒரே சேனல்.. புத்தம் புது சீரியல்களால் பின்னுக்குத் தள்ளப்பட்ட பிரபல சீரியல்கள்

இந்த வார டிஆர்பி ரேட்டிங் லிஸ்டில் டாப் 6 இடங்களை ஒரே சீரியல் ஆக்கிரமித்ததுடன் புத்தம் புதிதாக துவங்கப்பட்ட சீரியல்களால் பிரபல சீரியல்கள் பின்னுக்கு தள்ளப்பட்டு இருக்கிறது.

சின்னத்திரை ரசிகர்கள் எந்த சீரியலை விரும்பி பார்க்கிறார்கள் என்பதை அந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் தெரிந்துவிடும். அந்த வகையில் இந்த வாரத்திற்கான டிஆர்பி ரேட்டிங் ஆனது தற்பொழுது இணையத்தில் வெளியாகி பயங்கர ட்ரெண்டாகி வருகிறது .

இதில் 10-வது இடத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலும், 9-வது இடத்தில் பாக்கியலட்சுமி சீரியலும், 8-வது இடத்தில் ஆனந்த ராகம் சீரியலும், 7-வது இடத்தில் பாரதிகண்ணம்மா சீரியலும் இடம் பிடித்துள்ளது.

இனியா: இந்த சீரியலில் இனியாவின் அக்கா யாழினிக்கும் இனியாவுடன் ஒரே கம்பெனியில் பணி புரியும் இளங்கோ விற்கும் நடக்கவிருக்கும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்த இளங்கோவின் அண்ணன் யாழினியின் தங்கை இனியாவை திருமணம் செய்து கொண்டு பழி தீர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்து வருகிறார். பெண்களை இழிவாக கருதும் எண்ணத்தை மாற்றி தற்பொழுது பெண்களை மதிக்கக் கூடியவராக மாறியுள்ளார். ஆனால் அவை உண்மையா இல்லை தனது தந்திரத்தை நிறைவேற்றிக் கொள்ள பச்சோந்தி போல் மாறி உள்ளாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். துவங்கப்பட்ட சில வாரங்களே மட்டும் ஆன நிலையில் இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் 6-வது இடத்தை பிடித்துள்ளது.

Also Read: சன் டிவி டிஆர்பியை உடைக்க பலே திட்டம்.. புத்தம்புது 4 சீரியல்களை இறக்கிய விஜய் டிவி

எதிர்நீச்சல்: இந்த சீரியலில் அப்பத்தாவின் தூண்டிலில் சிக்கியுள்ள சக்தி தற்பொழுது தான் சுயமாக ஒரு முடிவினை எடுத்துள்ளார். அதில் சொத்தில் தனக்கு எந்த பங்கு வேண்டாம் என்றும் தான் வேலைக்கு சென்று உழைத்து முன்னேற வேண்டும் என்ற குறிக்கோளை கையில் எடுத்துள்ளார். இதிலிருந்து அப்பத்தாவின் ஆட்டத்திற்கு வெற்றி மேல் வெற்றி குவிந்து வருவது போல் உள்ளது. ஆனால் குணசேகரனுக்கு சக்தியின் செயல்கள் அனைத்தும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது போல் இக்கதையானது நகர்ந்து கொண்டிருக்கிறது. எதிர்நீச்சல் சீரியல் துவங்கப்பட்ட சில மாதங்களே மட்டும் ஆன நிலையில் இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் 5-வது இடத்தில் உள்ளது .

கண்ணான கண்ணே: இந்த சீரியலில் கௌதம் குடும்பத்தை சேர்ந்த அனைவரும் குலதெய்வம் கோவிலுக்கு சென்றுள்ளனர். மேனகா தனது பழியை தீர்த்துக் கொள்ள இவர்களுக்கு முன்னரே அங்கு சென்றுள்ளார். அங்கு உள்ள பண்ணையாருடன் மீராவை பழிவாங்க கைகோர்த்துள்ளார். இதன் முதல் முயற்சியாக அதே வீட்டில் சமையல்கார பெண்ணாக உள்ளவர் மூலம் மீரா குடிக்கும் பாலில் விஷத்தினை கலந்துள்ளனர். நல்லவேளை ஆக மீரா அதிலிருந்து தப்பி விடுகிறார். இனி மேனகாவின் சூழ்ச்சியில் இருந்து மீரா தப்பிப்பாரா இல்லை என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் . கண்ணான கண்ணே சீரியல் ஆனது இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் 4-வது இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: லிவிங்ஸ்டனுக்கு இவ்வளவு பெரிய பிள்ளைகளா? ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் 2 மகள்கள்

சுந்தரி: இதில் குடும்பத்தை சேர்ந்த அனைவரும் எப்படியாவது முருகன் அவர்களை சிறையிலிருந்து வெளியில் கொண்டு வர வேண்டும் என்று பல்வேறு முயற்சிகளில் இறங்கி உள்ளனர். இதன் ஒரு பகுதியாக சுந்தரியும் சித்தார்த்தும் கொலை நடந்த இடத்திற்கு திரும்பி செல்கின்றனர். அங்கு பழனியின் செல்போன் ஆனது இவர்களுக்கு கிடைக்கின்றது. ஆனால் அனு தான் செய்த கொலைக்கு முருகன் அவர்கள் சிறையில் உள்ளார்கள் என்பதை நினைத்து மிகவும் வேதனை அடைந்துள்ளார். இதற்காக தான் செய்த தப்பிற்கு தான் தான் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று யாரிடமும் சொல்லாமல் கோர்ட்டிற்கு செல்கிறார். பழனியின் செல்போனில் உள்ள ஆதாரத்தை வைத்து எப்படியாவது முருகனை சிறையில் இருந்து வெளியே கொண்டு வர வேண்டும் என்பது போல் கதைக்களம் ஆனது நகருந்து கொண்டிருக்கிறது. சுந்தரி சீரியல் ஆனது இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் 3-வது இடத்தை பிடித்துள்ளது.

வானத்தைப்போல: இந்த சீரியலில் சின்ராசு விபத்துக்கு பிறகு வீடு திரும்பியுள்ளார்.மருத்துவமனையில் பொன்னி துளசியை அவமானப்படுத்தியதை சின்ராஸிடம் புலிக்குட்டி சொல்லிவிட்டார். இதனால் ன் மேல் சின்ராசு பயங்கர கோபத்தில் உள்ளது போல காட்டியுள்ளனர். துளசி சந்தியாவிடம் தனக்கு குடும்பத்தில் வெற்றியால் ஏற்படும் பிரச்சனைகளை சொல்லி அதற்கான தீர்வினை பெற்றுள்ளார். அதன்படி துளசியும் வெற்றியிடம் பேசியுள்ளார். அதில் நாம் இருவரும் திருமணம் செய்து கொண்டால் அனைவரும் எனக்கு எதிராக திரும்பி விடுவார்கள் என் அண்ணன் உட்பட என்று எவ்வளவோ எடுத்துக் கூறியும் வெற்றி திருந்துவது போல் இல்லை என்றது போல கதையானது நகர்ந்து கொண்டிருக்கிறது . வானத்தைப்போல சீரியல் ஆனது இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் 2-வது இடத்தை பிடித்துள்ளது.

Also Read: ஜனனி, ஈஸ்வரியை தொடர்ந்து எதிர்நீச்சல் போட்ட அடுத்த மருமகள்.. வாலை சுருட்டி கிட்டு இருக்கும் குணசேகரன்

கயல்: இந்த சீரியலில் கயல் தனது தங்கைக்கு போட வேண்டிய 30 பவுன் நகைக்காக தனது சிறுநீரகத்தை தானமாக அளிக்க முடிவு செய்துள்ளார் . தற்பொழுது தேவியின் வாழ்க்கைக்கு தேவையானதை பூர்த்தி செய்துள்ள நிலையில் தான் சொன்ன வாக்கை காப்பாற்றும் விதமாக வீட்டில் யாரிடமும் சொல்லாமல் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். ஆனால் அங்கு விக்னேஷும் தேவியும் வந்துள்ளனர். அப்பொழுது கயலை பார்த்துள்ளனர் எதற்காக கயல் மருத்துவமனைக்கு வந்து இருக்கிறார்கள் என்பதை அறிந்து குடும்பத்தாரிடமும் தெரிவிக்கின்றனர். கயல் தான் சொன்ன வாக்கில் உறுதியுடன் இருந்த நிறைவேற்றுவாரா அல்லது குடும்பத்திற்காக அதனை நிறைவேற்றாமல் போவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். கயல் சீரியல் ஆனது இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடித்துள்ளது.

இவ்வாறு இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் டாப் 6 இடங்களை சன் டிவியின் சீரியல்கள் தான் ஆக்கிரமித்துள்ளது அது மட்டும் இன்றி புத்தம் புது சீரியல்களான எதிர்நீச்சல் மற்றும் இனியா சீரியல்கள், விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி, பாரதிகண்ணம்மா போன்ற சீரியல்களை பின்னுக்கு தள்ளப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
To Top