நிஜ புலியுடன் சண்டை போட்ட முதல் நடிகர்.. சூர்யாவுக்கு கங்குவா காட்டிய உயிர் பயம்

Actor Surya In Kanguva: வித்தியாசமான கேரக்டரையும், கதாபாத்திரத்துக்கு தகுந்த மாதிரி உடலின் தோற்றத்தையும் மாத்திக்கொண்டு நடிப்பதில் சூர்யாவுக்கு கைவந்த கலை. அப்படிப்பட்ட இவர் முதன்முதலாக வித்தியாசமான கெட்டப்புடன் அதிக பட்ஜெட்டில் வரலாறு மிகுந்த படமான கங்குவா படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார். இப்படத்தை சிறுத்தை சிவா மிகப் பிரமாண்டமாக உருவாக்கி வருகிறார்.

இப்படத்தை பத்து மொழிகளில் வெளியிடுவதற்கு முடிவெடுத்து இருக்கிறார்கள். அத்துடன் திஷா பதானி, ரெட்டின் கிங்ஸ்லி, கோவை சரளா, யோகி பாபு மற்றும் பலர் நடித்து வருகிறார்கள். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்திருக்கிறார். மேலும் இப்படம் அடுத்த ஆண்டு துவக்கத்தில் வெளியிட வேண்டும் என்ற முடிவுடன் பட வேலைகள் அனைத்தும் மிக மும்மரமாக நடைபெற்று வருகிறது.

Also read: பட வாய்ப்புக்காக விக்ரமை ஏமாற்றிய சூர்யா.. டீசர் வெளியானதற்கு பின்னால் நடந்த ஏமாற்று வேலை

அதற்கான வேலைகளில் தற்போது சூர்யா மிகவும் பிசியாக இருக்கிறார். அதாவது இப்படத்தின் சூட்டிங் சென்னை EVP-யில் ரப்பர் முதலையுடன் சூர்யா படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து படக்குழுவில் உள்ள அனைவரும் தாய்லாந்துக்கு சென்று நிஜ விலங்குகளுடன் பயிற்சி எடுக்கப் போயிருக்கிறார்கள்.

அங்கே உண்மையான புலியுடன் சூர்யா பழகிக் கொண்டு வருகிறார். அதன் பின் தான் தத்துரூபமான காட்சிகளை எடுக்க முடியும் என்பதால் சூர்யா தைரியத்தை வர வைத்துக் கொண்டு இயக்குனர் சொல்வதை எல்லாம் செய்து கொண்டு வருகிறார். இருந்தாலும் நிஜ புலி என்றால் ரொம்பவே பயமாகத்தான் இருக்கும்.

Also read: இதெல்லாம் சாகக்கூடிய வயசா.? நொந்து போய் வீட்டிற்கே சென்று ஆறுதல் கூறிய சூர்யாவின் புகைப்படம்

அந்த வகையில் சூர்யாவுக்கும் புலியை பார்த்து பழகினாலும் அதனுடன் சண்டை போடும் காட்சிகளில் ரொம்பவே பயத்துடனே நடித்துக் கொண்டு வருகிறார். இருந்தாலும் கங்குவா டீம் எதற்கும் அசராமல் இந்த மாதிரி தான் பயிற்சி எடுக்க வேண்டும் என்று சூர்யாவை படாத பாடு படுத்தி வருகிறார்கள். ஆனால் இந்த காலத்தில் தான் புதுப்புது டெக்னாலஜி, கிராபிக்ஸ் மற்றும் உண்மையான விலங்கு மாதிரி ரப்பர் மிருகங்களை வைத்து ஏமாற்றி வருகின்றனர்.

ஆனால் முந்தைய சினிமா காலகட்டத்தில் எந்தவித கிராபிக்ஸ்-சும் இல்லாமல் தான் முக்கால்வாசி காட்சிகளை எடுத்து இருக்கிறார்கள். இதற்கு உதாரணமாக எம்ஜிஆர் நடிப்பில் வெளிவந்த தாயை காத்த தனயன் என்ற படத்தில் உண்மையான புலி கூட எம்ஜிஆர் சண்டை போட்டு அந்த காட்சிகளை படமாக கொடுத்திருக்கிறார். இதே போலவே கங்குவா படமும் இருக்க வேண்டும் என்பதற்காக மொத்த டீமும் சூர்யாவை வைத்து முயற்சி செய்து வருகிறார்கள்.

Also read: பீனிக்ஸ் பறவையாக பறந்து வரும் சூர்யா.. கங்குவா படத்துக்கு பின் ஒரே கெட்டப்பில் ரெண்டு படங்கள்

- Advertisement -