சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

பீனிக்ஸ் பறவையாக பறந்து வரும் சூர்யா.. கங்குவா படத்துக்கு பின் ஒரே கெட்டப்பில் ரெண்டு படங்கள்

Actors Surya: தற்போது சூர்யா, சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் மிகவும் பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார். இப்படத்தில் சூர்யா இதுவரை நடிக்காத ஒரு கதாபாத்திரத்தை வித்தியாசமான கெட்டப்புடன் நடித்துக் கொண்டு வருகிறார். அத்துடன் அதிக பட்ஜெட்டில் இப்படம் எடுக்கப்பட்டு மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.

மேலும் 3டி தொழில்நுட்பத்துடன் பான் இந்தியா படமாக பத்து மொழிகளில் வெளிவர இருக்கிறது. இதற்கிடையில் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படம் அப்படியே கிணற்றில் போட்ட கல்லாக இருக்கிறது. அதற்கு காரணம் வெற்றிமாறன் விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தில் மிகவும் பிசியாக இருப்பதால் வாடிவாசல் படத்தில் தற்போது அதிக கவனம் செலுத்த முடியாமல் இருந்து வருகிறார்.

Also read: ரஜினியைப் போல நடிகைக்கு ஒரு கோடி சம்பளம் கொடுத்த சூர்யா.. படையப்பாவை அசர வைத்த சம்பவம்

அந்த வகையில் சூர்யாவும் தற்போது கங்குவா படத்தில் முழு கவனத்தை செலுத்துவதால் இவர்கள் இருவருமே ஒரே சமத்தில் படத்தை முடித்து விடுவார்கள். அதன் பின் வெற்றிமாறன் கூட்டணியில் வாடிவாசல் படத்தில் முழுமூச்சுடன் செயல்பட இருக்கிறார். அதே மாதிரி கங்குவா படத்தை முடித்த பின்பு சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கப் போகும் படத்திலும் கவனத்தை செலுத்தப் போகிறார்.

அதாவது ஒரே சமயத்தில் இரண்டு படங்களையும் முடிப்பதற்கு திட்டமிட்டு இருக்கிறார். அதற்கு காரணம் இரண்டு படத்திற்கும் கிட்டத்தட்ட ஒரே கெட்டப் தான் போட இருக்கிறார். அந்த வகையில் கால் சீட்டிலும் எந்தவித பிரச்சனையும் இல்லாததால் வாடிவாசல் படத்திற்கு 15 நாட்களும், சுதா கொங்கரா படத்திற்கு 15 நாட்களும் ஒதுக்கி இருக்கிறார்.

Also read: மனைவி பேச்சுக்கு அடிபணிந்து போகும் சூர்யா.. ஜோதிகாவால் ஏற்பட்ட மாற்றம்

மொத்தத்தில் ஒரு மாதத்திற்குள் இரண்டு படங்களையும் முடிக்க போகிறார். அத்துடன் அடுத்தடுத்து பா ரஞ்சித் மற்றும் லோகேஷ் போன்ற பல முன்னணி இயக்குனர்களுடன் கூட்டணி வைக்கப் போகிறார். ஏற்கனவே லோகேஷ் இயக்கத்தில் இரும்பு கை மாயாவி என்ற படத்தில் கமிட்டாய் இருக்கிறார். அதனால் கூடிய விரைவில் இப்படத்திற்கான பிள்ளையார் சுழியை போட இருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து ராகேஷ் ஓம் பிரகாஷ் இயக்கத்தில் கர்ணா என்ற படத்தில் மகாபாரத கதையை மையமாக வைத்து நடிக்க போகிறார். இப்படி பல படங்களில் பிசியாக நடித்து பீனிக்ஸ் பறவையாக பறந்து கொண்டு வருகிறார். இதனால் சூர்யா இன்னும் மூன்று வருடங்களுக்கு கொஞ்சம் கூட ஓய்வெடுக்காமல் நடிப்பில் மட்டும் முழு கவனத்தை செலுத்தப் போகிறார்.

Also read: ரஜினி, கமலுக்கு மட்டும் பச்சைக்கொடி.. சிம்பு, சூர்யா படம்னா தயாரிப்பாளர்களுக்கு வைக்கும் ஆப்பு

- Advertisement -

Trending News