Vikram – Surya: நடிகர்கள் விக்ரம் மற்றும் சூர்யா இரண்டு பேருமே கடின உழைப்பால் உயர்ந்து தற்போது முன்னணி ஹீரோக்கள் ஆனவர்கள். இவர்கள் இரண்டு பேருக்கும் இருக்கும் ஒரே ஒற்றுமை, இருவரின் சினிமா வாழ்க்கையிலுமே மிகப்பெரிய பிரேக் கொடுத்தது இயக்குனர் பாலா தான். விக்ரமுக்கு கடந்த சில வருடங்களாக பட வாய்ப்புகள் கொஞ்சம் நல்லடித்துக் கொண்டிருந்த நேரத்தில், சூர்யா அடுத்தடுத்து வெற்றி பெற்று இப்போது கொஞ்சம் முன்னிலையில் இருக்கிறார்.
நடிகர் விக்ரமும் விட்ட இடத்தை பிடிப்பதற்கான முயற்சியில் இறங்கி இருக்கிறார். விக்ரமுக்கு பொன்னியின் செல்வன் படம் பெரிய பிரேக் கொடுத்தது. தற்போது தங்கலான் படம் ரிலீஸ் ஆனால் கண்டிப்பாக அவரின் மார்க்கெட் மீண்டும் பழைய நிலைக்கு வந்துவிடும். இந்த நேரத்தில்தான் சூர்யா செய்த ஒரு விஷயம், விக்ரமுக்கு பெரிய ஏமாற்றமாக அமைந்திருக்கிறது.
Also Read:இதெல்லாம் சாகக்கூடிய வயசா.? நொந்து போய் வீட்டிற்கே சென்று ஆறுதல் கூறிய சூர்யாவின் புகைப்படம்
நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தை தொடர்ந்து சூர்யாவுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் லிஸ்டில் இருக்கின்றன. மேலும் இவர் ரத்தசரித்திரம் படத்திற்கு பிறகு ஹிந்தியில் படம் பண்ண இருக்கிறார். இந்த படம் மகாபாரத கதையின் முக்கிய கேரக்டரான கர்ணனின் கதையாகும். இதில் கர்ணனாகத்தான் சூர்யா நடிக்கவிருக்கிறார்.
இதில் தான் விக்ரமுக்கும், சூர்யாவுக்கும் இடையே பிரச்சனையே ஆரம்பித்து இருக்கிறது. இந்தி சினிமாவில் தற்போது இதிகாச கதைகளை தொடர்ந்து படமாக்கி வருகிறார்கள். அப்படித்தான் இந்த கர்ணன் படமும் படமாக இருக்கிறது. ஆனால் தமிழில் இயக்குனர் விமல் இயக்கத்தில் ஏற்கனவே விக்ரம் கர்ணன் கேரக்டரில் நடிப்பதாக 2017ல் சொல்லப்பட்டது. அதற்கான ஒரு சில ஆக்சன் காட்சிகளும் படமாக்கப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில் தான் இந்தியில் கர்ணன் படம் எடுக்கப் போகிறார்கள், அதில் சூர்யா நடிக்கவிருக்கிறார் என செய்திகள் வெளியானதும், சூர்யா தரப்பிடம் இயக்குனர் விசாரித்து இருக்கிறார். ஆனால் அவர்கள் அப்படி எதுவும் இல்லை என்று சொல்லிவிட்டார்களாம். உண்மையில் படத்தின் எல்லா வேலைகளும் ஆரம்பிக்கப்பட்டு விட்டதாம். இந்த படத்தை ராகேஷ் ஓம் பிரகாஷ் இயக்குகிறார். மேலும் படத்தின் ஒளிப்பதிவாளர் ராம்கோபால் வர்மா.
சூர்யா எதனால் இந்த விஷயத்தை மறைக்க வேண்டும், விக்ரமை கடுப்பேற்ற அவர் இப்படி செய்கிறாரா என சந்தேகம் எழுந்திருக்கிறது. சூர்யா கர்ணனாக நடிப்பதற்கு முன்பே, விக்ரமின் உண்மையான உழைப்பு வெளியில் வந்துவிட வேண்டுமென்பதற்காக தான் சூரிய புத்திர கர்ணன் படத்தின் டீசரை விமல் வெளியிட்டு இருக்கிறார்.
Also Read:பீனிக்ஸ் பறவையாக பறந்து வரும் சூர்யா.. கங்குவா படத்துக்கு பின் ஒரே கெட்டப்பில் ரெண்டு படங்கள்