Actor Surya: சூர்யா நடிகர் என்பதைத் தாண்டி ஒரு நல்ல மனிதர் என்பது அனைவரும் அறிந்த விஷயம். ஏனென்றால் சினிமாவை தாண்டி பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவியருக்கு நிறைய நலத்திட்டங்கள் செய்து வருகிறார். மேலும் இப்போது சூர்யாவை மிகப்பெரிய துயரத்தில் ஆழ்த்தியுள்ளது அவரது ரசிகரின் மரணம்.
வீட்டிற்கே சென்று ஆறுதல் கூறிய சூர்யா
அதாவது சென்னையில் உள்ள பகுதியில் வசித்து வந்த அரவிந்த் சாலை விபத்தில் சிக்கி உயிர் இழந்து விட்டார். இவர் சூர்யாவின் தீவிர ரசிகராக இருந்து வந்துள்ளார். அதோடு மட்டுமல்லாமல் அவருடைய ரசிகர் மன்றத்திலும் உறுப்பினராக இருந்திருக்கிறார். அரவிந்தின் இறப்புச் செய்தி அறிந்த சூர்யா நொந்து போய் உள்ளார்.
மேலும் இளைஞர் அரவிந்த் வீட்டிற்கு நேரடியாகவே சென்று அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறி இருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் அரவிந்தின் புகைப்படத்திற்கு முன்பு சூர்யா கண்கலங்கி நிற்கும் புகைப்படம் மிகவும் வேதனை அளிக்கும்படியாக இருக்கிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் சிறந்த மனிதர் சூர்யா என பாராட்டி வருகிறார்கள்.
விபத்தில் சிக்கி உயிர் இழந்த ரசிகர்
ஏனென்றால் தன்னை ரசிகராக நினைத்து வாழ்ந்த ஒருவரின் மரணத்திற்கு எந்த நடிகர்கள் செல்வார்களா என்பது சந்தேகம்தான். ஆனால் சூர்யாவை பொருத்தவரையில் எப்போதுமே தனது ரசிகர்களுக்கு மரியாதை கொடுத்து வருபவர்.
ஏற்கனவே அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூட்டு நிகழ்வில் சூர்யாவின் ரசிகை ஐஸ்வர்யா உயிரிழந்து விட்டார். அப்போது தனது வீட்டின் முன் அவரது புகைப்படத்தை வைத்து சூர்யா அஞ்சலி செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.