பட பூஜைக்கு முன் தளபதி-68 பட ஓடிடி உரிமத்தை கைப்பற்றிய பிரம்மாண்ட நிறுவனம்.. எவ்வளவு கோடி தெரியுமா.?

Thalapathy 68: விஜய்- லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் லியோ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து வரும் ஆயுத பூஜை ரிலீசுக்காக தயாராக உள்ளது. அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் நடிப்பதற்காக விஜய் தயாராகிக் கொண்டிருக்கிறார். அதன் படபிடிப்பு கூடிய விரைவில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே இந்த படத்தில் லோகேஷ் கனகராஜ் படத்தில் உள்ளது மாதிரி, நிறைய முக்கிய நடிகர்களை நடிக்க வைக்கிறார். இதில் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, மாதவன், பிரியங்கா மோகன் உள்ளிட்ட திரை பட்டாளமே இணைந்து நடிப்பதாக தகவல் வெளியாகிறது. இயக்குனர் வெங்கட் பிரபு இது மாதிரி படத்திற்கு நிறைய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வருகிறார்.

Also Read: சர்ச்சைகளால் கழட்டி விட்ட விஜய்.. ஹிட் பட இயக்குனர், இப்போ டம்மியாய் சுற்றும் பரிதாபம்

தளபதியின் படத்திற்கு திரையரங்குகளில் நல்ல ஓபனிங் இருப்பதால் ஓடிடி ரைட்ஸ் வாங்குவதிலும் முன்னணி நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு வருகின்றனர். அதிலும் தளபதி 68 படத்தின் பூஜை கூட இன்னும் போடவில்லை அதற்குள் பிரீ பிசினஸை துவங்கி விட்டது. தளபதி 68 ஓடிடி உரிமையை நெட் பிளிக்ஸ் நிறுவனம் 100 கோடிக்கு வாங்கியுள்ளது.

இந்த படத்தின் ஆடியோவும் டி சீரிஸ் நிறுவனம் வாங்கியுள்ளதாம். விஜய் நடித்த எந்த படங்களும் பட பூஜை போடுவதற்கு முன்பு 100 கோடிக்கு வியாபாரம் ஆனது இதுதான் முதல் முறை. இதுவரை கோலிவுட்டில் இருந்த டாப் நடிகர்களின் படங்களில் இது போன்ற சம்பவம் நிகழவில்லை.

Also Read: லியோ படத்துக்கு வச்ச பெரிய ஆப்பு.. வசூலை தடுக்க நாலா பக்கமும் நடக்கும் சதி

தமிழ் சினிமாவிற்கு இதுதான் முதல்முறையாக பார்க்கப்படுகிறது. பட பூஜைக்கு முன்பு 100 கோடி வியாபாரம் ஆனது தயாரிப்பாளர் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்கள். இதனால் படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் அவ்வளவு மகிழ்ச்சியில் இருக்கிறாராம்.

இதனால் இந்த படத்தை நினைத்ததை விட மிகப் பிரம்மாண்டமாக லலித் தயாரிக்கப் போகிறார். அதுவும் படத்திற்கு பிள்ளையார் சுழி போடுவதற்கு முன்பே 100 கோடியை தட்டி தூக்கி விட்டதால் இனி அடுத்தடுத்து சாட்டிலைட் உரிமை என வரிசையாக இந்த படம் அசால்ட் ஆக 500 கோடி ப்ரீ பிசினஸ் ஆகிவிடும்.

Also Read: தளபதிக்கு ரெண்டு கண்டிஷன் போட்ட பிரசாந்தின் அப்பா.. ஆரம்பமே இவ்வளவு அலப்பறை தேவையா சார்.!

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்