பாக்கியாவின் கேரக்டரை கொச்சைப்படுத்தி பேசிய முன்னாள் கணவர்.. அப்படியே மண்ணு மாதிரி நிற்கும் மங்குனி

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியல் குடும்ப இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்து வந்தது. ஆனால் தற்போது அப்படியே தலைகீழாக மாறிவிட்டது. இதெல்லாம் ஒரு சீரியலா, இதுல எங்கேயாவது கொஞ்சம் கதை இருக்கிறதா என்று நான்கு கேள்வி நாக்க புடுங்குற மாதிரி இந்த நாடகத்தை பார்ப்பவர்கள் கேள்வி கேட்டு வருகிறார்கள்.

யார் என்ன சொன்னாலும் அதெல்லாம் அசால்ட்டா தொடச்சிட்டு அரச்ச மாவையே அரச்சு கொண்டு வருகிறார் பாக்கியலட்சுமி சீரியலின் இயக்குனர். அந்த வகையில் எந்த வீட்டிலுமே நடக்காத ஒரு மட்டமான விஷயம் தான் பாக்கியலட்சுமி வீட்டில் நடக்கிறது. அதாவது படிக்காத முட்டாள், சமையல்காரி, வீட்டு வேலைக்கு மட்டும் தான் லாய்க்கு, சரியான தற்குறி என்று பாக்யாவை அவமானப்படுத்தி வேறொரு கல்யாணத்தை பண்ணி விட்டார் கோபி.

அதன்பின் சும்மா பாக்கியா வீட்டிற்கு வந்து நாட்டாமை பண்ணுவது எந்த விதத்தில் சரியாக இருக்கும். இதற்கு பாக்யாவின் மாமியாரும் உடந்தையாக இருக்கிறார். வரவர மாமியார் கழுதை போல தேஞ்சாறாம். அது போல தான் பாக்கியாவின் மாமியார். ஆரம்பத்தில் சப்போர்ட்டாக இருந்தாலும் பிள்ளை பாசம் என்று வந்ததும் கண்மூடித்தனமாக அராஜகம் செய்து வருகிறார்.

Also read: நாளுக்கு நாள் அதிகரிக்கும் குணசேகரனின் அராஜகம்.. பொண்டாட்டியின் கனவில் மண்ணை அள்ளிப் போட்ட ராட்சசன்

அதாவது பாக்யாவிற்கு எல்லா விதமும் ஆக தோள் கொடுத்து தோழனாக இருந்து வருகிறார் பழனிச்சாமி. இவர்கள் பேசும் விதத்தை தவறாக புரிந்து கொண்டு வேவு பார்க்கிறார் கோபி. தற்போது பாக்யாவும் பழனிச்சாமியும் வீட்டில் வைத்து பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அப்போது உள்ளே நுழைந்த கோபி யாருமில்லாத போது இப்படி ரெண்டு பேரும் லூட்டி அடிப்பது கன்றாவியா இல்லையா என்று கொச்சையாக பேசுகிறார்.

அத்துடன் பழனிச்சாமியின் கேரக்டரை தரக்குறைவாக பேசி வாய்க்கு வந்தபடி உளறுகிறார். இவர் பேசிய பேச்சுக்கு கன்னத்தில் நான்கு அறையை போடாம அப்படியே மண்ணு மாதிரி பாக்கியா பார்த்துக் கொண்டிருக்கிறார். கடைசியில் இது என்னுடைய வீடு என் வீட்டில் எப்படி இருக்க வேண்டும் என்று எனக்கு தெரியும். இங்க வந்து நாட்டாமை பண்ண தேவையில்லை வீட்டை விட்டு வெளியில போங்க என்று கூறுகிறார்.

இவர் என்ன தான் கோபமாக பேசின மாதிரி காட்டினாலும் ஏதோ காமெடி பீஸ் ஆகத்தான் தெரிகிறது. ஆக மொத்தத்தில் கோபி கூட இருக்க வேண்டுமே என்று ஆசைப்படும் மாமியாரையும் கூடவே சேர்த்து வெளியே அனுப்பினால் இருண்டு போன பாக்யாவின் வாழ்க்கையில் வெளிச்சம் வந்துவிடும்.

Also read: மகன்களிடம் அராஜகமாக நடந்து கொள்ளும் பாண்டியன்.. செந்திலுடன் திருட்டுத்தனமாக கல்யாணத்தை பண்ணும் மீனா