மகன்களிடம் அராஜகமாக நடந்து கொள்ளும் பாண்டியன்.. செந்திலுடன் திருட்டுத்தனமாக கல்யாணத்தை பண்ணும் மீனா

Pandian Stores Season 2: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 சீரியல் அப்பா மகன்களின் பாசத்தை செண்டிமெண்டாக காட்டினாலும் ஒரு ஹிட்லராக தான் பாண்டியன் நடந்து கொள்கிறார். இவர் மட்டும் காதலிச்சு வீட்டை எதிர்த்து கல்யாணம் பண்ணி சந்தோஷமாக வாழ்க்கை நடத்தி வருவார். இதுவே இவருடைய மகன்கள் காதலிக்கிறார்கள் என்று தெரிந்ததும் வில்லனாக எதிர்ப்பு தெரிவிக்கிறார்.

அந்த வகையில் ஏற்கனவே மூத்த மகன் சரவணன், காதலியுடன் சேரவிடாமல் தடுத்து விட்டார். இதே மாதிரி செந்திலுக்கும் ஒரு நிலைமை வந்துவிடக் கூடாது என்ற கரிசனத்தில் தம்பி கதிர் ரொம்பவே மெனக்கெடு செய்கிறார். அதற்காக செந்திலை கூட்டிட்டு மீனாவின் அப்பா வீட்டிற்கு பொண்ணு கேட்க கதிர் போகிறார். போனதும் விஷயத்தை கேட்ட மீனாவின் அப்பா கதிர் மற்றும் செந்திலிடம் நல்லவர் மாதிரி பேசி அனுப்பி விடுகிறார்.

அதன் பின் மீனாவை அடித்து காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். அதோடு விடாமல் செந்திலின் அப்பா பாண்டியனை பார்த்து எந்த அளவுக்கு போட்டு கொடுக்க முடியுமோ, அதை சரியாக செய்து முடிக்கிறார். சும்மாவே பாண்டியன் ஓவரா பேசுவாரு, இதுல வேற இந்த விஷயம் தெரிந்ததும் சும்மாவா விடுவாரு. நேரா வீட்டுக்கு போனதும் கதிரை லெப்ட் அண்ட் ரைட் வாங்கி விட்டார்.

Also read: ஈஸ்வரி வேலைக்கு வேட்டுவைத்த குணசேகரன்.. கல்லூரிக்கு போய் வேதம் ஓதிய 4 சாத்தான்கள்

யாருடைய காதல் ஜெயிக்க வேண்டும் என்று கதிர் நினைத்தாரோ, அந்த அண்ணனே அப்பாவிடம் சரண்டர் ஆகி விட்டார். அதுவும் எப்படி என்றால் பாண்டியன் செண்டிமெண்டாக பேசி மகன்களிடம் சத்தியம் வாங்குகிறார். நான் பார்க்கிற பொன்னை தான் நீங்கள் கல்யாணம் பண்ண வேண்டும் என்று அராஜகத்தின் உச்சகட்டமாக பேசுகிறார். ஆனாலும் மூத்த மகன் சரவணன் மற்றும் இரண்டாவது மகன் செந்தில் கொஞ்சம் கூட யோசிக்காமல் அப்பா சொன்னதும் சத்தியம் பண்ணி விடுகிறார்கள்.

ஆனால் கதிர் மட்டும் உங்களோட சுயநலத்திற்காகவும் கௌரவத்திற்காகவும் எங்களை பலிகடாக ஆக்குகிறீர்கள். எதற்கெடுத்தாலும் பாசத்தைக் காட்டி எங்களின் சந்தோஷத்தை கெடுக்கிறீர்கள் என்று சொல்லிவிட்டு சத்தியம் பண்ணாமல் போய்விடுகிறார். ஆக மொத்தத்தில் இந்த குடும்பத்தில் கதிர் மட்டும்தான் மனசாட்சி படியும் அறிவுடனும் இருக்கிறார்.

இதனை தொடர்ந்து வீட்டில் இவ்வளவு பூகம்பம் வெடித்து இருந்தாலும், செந்தில் யாருக்கும் தெரியாமல் மீனாவை சந்திக்கிறார். அப்பொழுது கூட தொடை நடுங்கியாக பயந்து பயந்து தான் பேசுகிறார். இப்படிப்பட்டவரை மீனா நம்புவது பிரயோஜனம் இல்லை. அதனால் கடைசியில் களத்தில் இறங்கப் போவது மீனாதான். வீட்டிற்கு தெரியாமல் செந்திலை கல்யாணம் பண்ணப் போகிறார். இப்படி மீனா செய்தால் மட்டும் தான் இவர்களுடைய காதல் கை கூடும்.

Also read: பாக்கியாவிற்கு சப்போர்ட்டாக நிற்கும் சக்காளத்தி.. கோபியின் மகன்களின் வாழ்க்கையை சரி செய்யப் போகும் ராதிகா