சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

நாளுக்கு நாள் அதிகரிக்கும் குணசேகரனின் அராஜகம்.. பொண்டாட்டியின் கனவில் மண்ணை அள்ளிப் போட்ட ராட்சசன்

Ethirneechal: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில் பெண்கள் முன்னேற்றத்தையும், படித்த பெண்கள் வீட்டில் அடங்கிப் போக கூடாது என்பதை வலியுறுத்தும் விதமாக மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் இதில் ஒரு விஷயம் கூட நடக்காத படி குணசேகரனின் அராஜகம் தான் தலைவிரித்து ஆடுகிறது. என்னதான் பெண்கள் முன்னேற்றம், சுயமாக சம்பாதிக்க வேண்டும் என்று வாய்கிழிய பேசி வந்தாலும் செயலில் எந்த வெற்றியும் பெற முடியாமல் தவித்து வருகிறார்கள்.

அதற்கு காரணம் குணசேகரன் என்கிற ஒரு ராட்சசன். இவரிடம் இருந்து எப்படியாவது தப்பித்து சொந்த காலில் நின்னு ஜெயிக்க வேண்டும் என்று ஈஸ்வரி துணிச்சலுடன் எதிர்நீச்சல் போட ஆரம்பித்தார். ஆனால் எடுத்து வைத்த முதல் படியிலேயே காலை வாரிவிட்டார் குணசேகரன். கல்லூரியில் ஈஸ்வரி மாணவர்களிடம் பேசிக் கொண்டிருக்கும் பொழுது அடாவடித்தனமாக உள்ளே நுழைந்தார் குணசேகரன்.

அதாவது சொல்வார்களே சாத்தான் வேதம் ஓதினால் காது கொடுத்து கேட்க முடியாது என்று. அந்த மாதிரி தான் இருந்தது குணசேகரனின் பேச்சு. எந்த அளவுக்கு பொண்டாட்டியை கீழ்த்தரமாக பேச முடியுமோ அதை பேசி அவருடைய பெயரை ரொம்பவே மாணவர்கள் முன் டேமேஜ் ஆக்கிவிட்டார். இதுதான் உண்மையான குணசேகரனின் தராதரம் என்று நிரூபித்து விட்டார்.

Also read: அப்பத்தா இறந்ததால் எதிர்நீச்சல் போட போகும் மருமகள்கள்.. சீக்ரட்டாக காய் நகர்த்தும் ஜீவானந்தம்

இதனால் கல்லூரியில் இருந்து ஈஸ்வரி தொடர்ந்து வேலை பார்க்க முடியாது என்று முடிவு பண்ணி விட்டார்கள். அத்துடன் ஈஸ்வரியும் என்னால் மேற்கொண்டு வேலையை பார்ப்பது எனக்கும் நெருடலாக இருக்கும் என்று வெளியே வந்து விடுகிறார். இந்த ஈஸ்வரி மாதிரி நிஜ வாழ்க்கையில் எத்தனையோ பெண்களின் நிலைமை இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டுகிறது.

இருந்தாலும் இந்த தருணத்திலேயே குணசேகருக்கு ஏற்ற பதிலடி ஈஸ்வரி கொடுத்திருந்தால் உண்மையிலேயே ரசிக்கும் படியாகவும் இருந்திருக்கும். மற்ற பெண்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாகவும் அமைந்திருக்கும். அதையெல்லாம் விட்டுவிட்டு இன்னும் பொறுமையாக இருக்கலாம் என்று மௌனம் காப்பது பார்ப்பதற்கு எரிச்சலை உண்டாக்குகிறது. இதனை தொடர்ந்து குணசேகரன் மீது இருந்த கொஞ்சநஞ்ச மரியாதை, புருசன் என்கிற நினைப்பு மொத்தமாகவும் ஈஸ்வரிக்கு இல்லாமல் போகப் போகிறது.

அதனால் என்ன ஆனாலும் பரவாயில்லை என்று குணசேகரனுக்கு எதிராக புத்தியை தீட்டி வெற்றி காணப் போகிறார். அதே மாதிரி அப்பத்தா விஷயத்தில் ஜீவானந்தத்திற்கு விடுதலை வாங்கி கொடுத்து தக்க தண்டனை குணசேகரனுக்கு கிடைக்க வேண்டும் என்பது பார்ப்பவர்களின் ஆதங்கமாக இருக்கிறது. குணசேகரனின் மொத்த ஆணவத்தையும் ஒடுக்கும் விதமாக ஒரு தரமான சம்பவம் வந்தால் அதுதான் மிகப்பெரிய சந்தோசத்தை கொடுக்கும்.

Also read: மகனின் வாழ்க்கையை வஞ்சகத்தால் வீணாக்கிய பாண்டியன்.. கேள்விக்குறியாக நிற்கும் மீனாவின் காதல்?

- Advertisement -

Trending News