நாங்களும் 100 கோடில படம் எடுப்போம்.. ராஜமவுலி பட வில்லனை ஹீரோவாக்கிய அழுகாச்சி இயக்குனர்

Rajamouli: ஒவ்வொரு இயக்குனர்களுக்கும் ஒரு ஸ்டைல் இருக்கும். அப்படித்தான் பிரபல இயக்குனர் ஒருவரும் ரசிகர்களின் நாடி பிடித்து படம் எடுப்பதில் கில்லாடி. அதிலும் இவருடைய படங்களை கண்டு கதறி அழாத ஆடியன்ஸே இருக்க முடியாது. அதனாலேயே இவரை அழுகாச்சி இயக்குனர் என்று கூட கூறுவது உண்டு.

அப்படி சென்டிமென்டை மையப்படுத்தி பல வெற்றி படங்களை கொடுத்து தேசிய விருதையும் தட்டிச் சென்ற பெருமைக்குரியவர் தான் சேரன். இவருடைய படங்கள் எப்போதுமே ஒரு நல்ல உணர்வை தான் நமக்கு கொடுக்கும். அதில் ஆட்டோகிராப், பொற்காலம், வெற்றி கொடி கட்டு, தவமாய் தவமிருந்து போன்ற படங்கள் இன்றும் கூட குடும்ப ஆடியன்ஸின் விருப்ப படங்களாக இருக்கிறது.

Also read: பாண்டியனை கருவறுக்க வரும் எயினர் குலம்.. மினிமம் பட்ஜெட்டில் சங்கர், ராஜமவுலிக்கு சவுக்கடி கொடுக்க வரும் யாத்திசை

இப்படி சாப்டாக படம் எடுத்து வந்த சேரன் இப்போது கொடூர வில்லன் ஒருவரை ஹீரோவாக்கி ஒரு படத்தை இயக்க இருக்கிறார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படத்தின் பட்ஜெட் மட்டுமே 100 கோடி ஆகும். சமீப காலமாக வளர்ந்து வரும் இயக்குனர்கள் முதல் பலரும் 100 கோடி பட்ஜெட்டில் படம் எடுப்பதை பெருமையாக நினைக்கிறார்கள்.

அந்த ஒரு மோகத்திற்கு தற்போது சேரனும் அடிமையாகி விட்டார் போல. அதனாலேயே நாங்களும் 100 கோடில பிரம்மாண்ட படம் எடுப்போம் என்று சவால் விடாத குறையாக இவர் களமிறங்கியுள்ளார். கடைசியாக 2019ஆம் ஆண்டு திருமணம் என்ற படத்தை இயக்கிய சேரன் அதன் பிறகு நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார்.

Also read: 45 நொடிக்கு படத்தின் பட்ஜெட்டை சம்பளமாக வாங்கிய ராஜமௌலி.. விளம்பரத்திற்காக கொட்டிக் கொடுத்த முதலாளி

தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு அவர் பிரபல கன்னட நடிகர் சுதீப்பை வைத்து ஒரு படத்தை இயக்க இருக்கிறார். ராஜமவுலி இயக்கத்தில் வெளியான நான் ஈ படத்தில் கொடூர வில்லனாக மிரட்டி இருந்த இவருடைய நடிப்பை அவ்வளவு எளிதில் நம்மால் மறந்து விட முடியாது.

அதைத்தொடர்ந்து புலி படத்தில் வில்லனாகவும் முடிஞ்சா இவன புடி என்ற படத்தில் ஹீரோவாகவும் இவர் நடித்திருக்கிறார். மேலும் தற்போது அதிக தமிழ் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வரும் சுதீப் சேரனுடைய கதையை கேட்டு உடனே நடிக்க சம்மதித்து விட்டாராம். இது மட்டுமல்லாமல் இன்னும் சில தமிழ் படங்களிலும் அவர் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

Also read: தமிழ் படமே வேண்டாம் என அடம் பிடிக்கும் ராஜமௌலி ஹீரோ.. ஓவர் பில்டப்பா இருக்கே

Next Story

- Advertisement -