Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தமிழ் படமே வேண்டாம் என அடம் பிடிக்கும் ராஜமௌலி ஹீரோ.. ஓவர் பில்டப்பா இருக்கே

தமிழ் படங்களில் நடிக்க மறுப்பு தெரிவிக்கும் ராஜமௌலி படத்தின் ஹீரோ.

rajamouli

Rajamouli: பிரம்மாண்ட இயக்குனர் ராஜமௌலி தொடர்ந்து பெரிய நடிகர்களின் படங்களை இயக்கி வருகிறார். அந்த வகையில் பிரபாசை வைத்து இவர் இயக்கிய பாகுபலி படம் எல்லா மொழி ரசிகர்களையும் பெரிய அளவில் கவர்ந்தது. இதைத்தொடர்ந்து ராம் சரணை வைத்து ஆர்ஆர்ஆர் படத்தை இயக்கியிருந்தார்.

இந்தப் படத்திற்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில் ராஜமவுலி படத்தில் வாய்ப்பு கிடைக்காதா என தமிழ் சினிமாவில் உள்ள உச்ச நட்சத்திரங்களே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ராஜமவுலி பட ஹீரோ ஒருவர் தமிழ் படங்களே வேண்டாம் என்று கூறி வருகிறாராம்.

Also Read : கம்மி பட்ஜெட்டில் அதிக வசூலை அள்ளிய 5 படங்கள்.. நா தான் பெருசு என ராஜமௌலின் பிம்பத்தை உடைத்த படம்

அதுவும் தமிழில் இவர் ஏற்கனவே ஒரு படம் நடித்து சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்திருக்கிறார். ஆனாலும் தமிழ் படங்களை மறுத்து வருகிறார். அதாவது ராஜமௌலி இயக்கத்தில் நான் ஈ படத்தில் கதாநாயகனாக நடித்தவர் நானி. இப்படத்தில் சுதீப் மற்றும் சமந்தா ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.

ஈயை கதாநாயகனாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்திற்கு மக்கள் வரவேற்பு கொடுத்திருந்தார்கள். ஆனால் அதன் பிறகு நானி தெலுங்கு படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். இந்த சூழலில் தமிழ் சினிமாவைச் சேர்ந்த இயக்குனர்கள் சிலர் நானி இடம் கால்ஷூட் கேட்டு உள்ளனர். ஆனால் அவர் தமிழ் படங்களில் நடிக்க விருப்பமில்லை என்று கூறிவிட்டாராம்.

Also Read : 45 நொடிக்கு படத்தின் பட்ஜெட்டை சம்பளமாக வாங்கிய ராஜமௌலி.. விளம்பரத்திற்காக கொட்டிக் கொடுத்த முதலாளி

மேலும் தமிழில் ஒரு நல்ல ஹிட் படம் கொடுத்தும் இப்போது அவர் இவ்வாறு சொல்வதற்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. ஆனாலும் தேசிய விருது இயக்குனர் சுதா கொங்கரா படம் என்றால் மட்டும் நடிப்பேன் என்று நானி கூறியிருக்கிறாராம். ஆனால் அவர் வேறு படங்களில் இப்போது படு பிஸியாக இருந்து கொண்டிருக்கிறார்.

எனவே நானி இப்போது தெலுங்கு இயக்குனர்களிடம் தான் கதை கேட்டு வருகிறாராம். ஆனால் அவரது தமிழ் ரசிகர்கள் மீண்டும் இங்கு ரீ என்ட்ரி நானி கொடுக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். இதற்கு அவர் மனது வைத்தால் மட்டுமே தான் மீண்டும் தமிழ் படங்களில் நடிக்க முடியும். ஆனாலும் நானி ஓவர் பில்டப் கொடுக்கிறார் என சிலர் வருகிறார்கள்.

Also Read : உலக அரங்கில் வெற்றியை பதித்த ராஜமௌலி.. சரித்திரம் படைத்த ஆர்ஆர்ஆர்

Continue Reading
To Top