பாண்டியனை கருவறுக்க வரும் எயினர் குலம்.. மினிமம் பட்ஜெட்டில் சங்கர், ராஜமவுலிக்கு சவுக்கடி கொடுக்க வரும் யாத்திசை

பிரம்மாண்டம் என்றாலே சங்கர் தான் என்று சொல்லும் அளவுக்கு அவர் பல கோடி பட்ஜெட்டை காலி செய்து ஒரு படத்தை எடுப்பார். அவருக்கு நிகராக இயக்குனர் ராஜமவுலியும் காசை தண்ணியாக செலவழித்து ஒரு படத்தை இயக்குவார். இதுவரை இவர்களின் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் அனைத்தும் மிகப்பெரும் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டவையாக தான் இருக்கிறது.

ஆனால் பிரம்மாண்டம் என்பது பட்ஜெட்டில் கிடையாது என்பதை நிரூபிக்கும் வகையில் யாத்திசை படம் தயாராகியுள்ளது. தரணி ராஜேந்திரன் இயக்கத்தில் கே ஜே கணேஷ் தயாரித்திருக்கும் இப்படம் வரலாற்று பின்னணியை கொண்ட அதிரடி சாகச படமாக உருவாகி இருக்கிறது. அதாவது பாண்டியர்களை கருவறுக்க வரும் எயினர் குலம் தன் முயற்சியில் வெற்றி பெற்றார்களா என்பது தான் இப்படத்தின் கதை.

Also read: பொன்னியின் செல்வனுக்காக தீயாய் வேலை செய்யும் சோழர்கள்.. குல்பியை கொடுத்து கூல் செய்த லைக்கா

எட்டு கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளிவந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. ஏனென்றால் இவ்வளவு மினிமம் பட்ஜெட்டில் இப்படி ஒரு படத்தை எடுக்க முடியுமா என்று பலரும் அசந்து போகும் அளவுக்கு ஒவ்வொரு காட்சியும் இருந்தது.

அதைத்தொடர்ந்து இப்படம் தற்போது சோசியல் மீடியாவில் பலரின் பாராட்டுகளை பெற்று எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. அது மட்டுமல்லாமல் தற்போது வெளியாகி இருக்கும் ஒரு வீடியோவும் படத்தின் மீதான ஆர்வத்தை தூண்டி இருக்கிறது. அதில் காட்டப்பட்டிருக்கும் ஒவ்வொரு காட்சியும் உலக தரத்துடன் இருக்கிறது.

Also read: முழு படத்திற்கும் எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்கர்.. ஆனால் இசைக்கு மட்டுமே கிடைத்த பரிதாபம்

விசுவல் காட்சிகள் முதல் சவுண்ட் எபெக்ட் வரை அனைத்துமே பிரம்மாண்ட படங்களுக்கு நிகராக இருக்கிறது. அதிலும் இரு தரப்பினருக்கிடையே நடக்கும் அந்த சண்டை காட்சி வேற லெவலில் மெய்சிலிர்க்க வைத்திருக்கிறது. இதே காட்சியை சங்கர் மற்றும் ராஜமௌலி எடுத்திருந்தால் நிச்சயம் தயாரிப்பாளரின் தலையில் துண்டை போட்டிருப்பார்கள்.

ஆனால் இப்படம் மொத்தமே 8 கோடி பட்ஜெட் தான் என்பது வியப்பாக இருக்கிறது. இதுவே படத்தின் மீதான எதிர்பார்ப்புக்கும் காரணமாக இருக்கிறது. அந்த வகையில் மினிமம் பட்சத்தில் சங்கர், ராஜமவுலிக்கு சவுக்கடி கொடுக்கும் வகையில் நாளை வெளியாக இருக்கும் இப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெரும் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது.

Next Story

- Advertisement -