கூடவே நம்பி இருந்த இயக்குனர்களுக்கு டாட்டா காட்டிய விஜய்.. 69-வது படத்திற்கு ஹிட் இயக்குனருடன் இறங்கிய தளபதி

Vijay 69th Movie: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் அவருடைய 68வது படமான கோட் படத்தில் நடித்து வருகிறார். முதல் முதலாக இணைந்த இவர்களுடைய காம்போ எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் மிகவும் குழப்பத்தில் இருக்கிறார்கள். ஏனென்றால் விஜய் கமர்சியலா மாஸா நடிக்க வேண்டும் என்று நினைக்கக் கூடியவர். அதே நேரத்தில் வெங்கட் பிரபு போற போக்குல ஒரு ஜாலியான படத்தை எடுக்க வேண்டும் என்று யோசிக்க கூடியவர்.

அப்படிப்பட்ட இவர்களுடைய காம்போவில் வரக்கூடிய படம் பல எதிர்பார்ப்புகளை எகிற வைக்கும் அளவிற்கு ரசிகர்களை தூண்டியிருக்கிறது. இந்நிலையில் அவருடைய அரசியலில் ஆர்வத்தை காட்டும் விதமாக கட்சியின் பெயரை அறிவித்து முழு நேர அரசியல்வாதியாக இறங்கப் போவதாக அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். இது இவருடைய ரசிகர்களுக்கு சந்தோஷத்தை கொடுத்திருந்தாலும், இனிமேல் தியேட்டரில் போய் இவருடைய படத்தை பார்க்க முடியுமா என்ற சந்தேகமும் அவர்களிடம் இருந்து வருகிறது.

இதனை தொடர்ந்து அவர் கடைசியாக 69 ஆவது படத்தை நடித்து முடிக்க வேண்டும் என்று உறுதியாக இருக்கிறார். அதற்காக இவரை வைத்து இயக்குவதற்கு பல இயக்குனர்கள் பெயர் அடிபட்டு வருகிறது. அந்த லிஸ்டில் அட்லி, கார்த்திக் சுப்புராஜ், எச் வினோத் மற்றும் வெற்றிமாறன் இவர்கள் பெயர் அனைத்தும் வந்தது. இந்நிலையில் வெற்றிமாறன் கூட்டணியில் இணையப் போகிறார் என்ற தகவலும் வெளியானது.

Also read: உனக்கு அரசியல் ஆசை வரவே கூடாதுன்னு தடுத்து நிறுத்தப்பட்ட விஜய்யின் 5 படங்கள்.. அப்ப G.O.A.T கசாப்பு கடைக்கு போவது உறுதியா?

ஆனால் தற்போது இது வெறும் வதந்தி மட்டுமே, முன்னதாக விஜய் இடம் வெற்றிமாறன் கதை சொன்னது உண்மைதான். ஆனால் இப்பொழுது இவர்கள் இணைவதாக வாய்ப்பில்லை என்று திட்டவட்டமாகிவிட்டது. இந்நிலையில் தமிழ் இயக்குனர்களுக்கு டாடா காட்டும் விதமாக விஜய் தற்போது அக்கடதேசத்தை இயக்குனரை லாக் செய்ததாக தகவல் கசிந்துள்ளது.

அதாவது தெலுங்கு முன்னணி இயக்குனராக இருக்கும் த்ரீ விக்ரம் சீனிவாசன் தான் விஜயின் 69 ஆவது படத்தை இயக்கப் போகிறாராம். இவர் லக்கி இயக்குனராகவும், ஹிட் படங்களை கொடுப்பதில் தலை சிறந்த இயக்குனராகவும் தெலுங்கு நடிகர்களை வசியம் செய்து இருக்கிறார். அந்த வகையில் இவருடைய இயக்கத்தில் ஏதாவது ஒரு படத்தை பண்ணி விட வேண்டும் என்று முன்னணி நடிகர்கள் தவம் இருக்கிறார்கள்.

தற்போது அவர்களுக்கெல்லாம் கிடைக்காத வாய்ப்பு விஜய்க்கு கிடைத்திருக்கிறது என்று பேசப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் மகேஷ் பாபு இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த குண்டூர் காரம் படத்தை இயக்கியதும் இவர்தான். இப்படம் செம ஹிட் ஆகி வசூல் அளவில் பெரிய லாபத்தை கொடுத்திருக்கிறது. அந்த வகையில் விஜய் மற்றும் இவருடைய காம்போ கண்டிப்பாக தமிழ் சினிமாவில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also read: காதல் கதைகள் தோத்து சூப்பர் ஹிட் ஆன 5 படங்கள்.. விஜய்யின் சோகம் கூட சுகமானது 

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்