இளையராஜா மேல் இருக்கும் தவறான பிம்பம்.. உண்மையை போட்டு உடைத்த இயக்குனர்

புதுப்புது இசையமைப்பாளர்கள் வந்து ரசிகர்களை கவர்ந்தாலும் இளையராஜாவிற்கென்று தமிழ் சினிமாவில் ஒரு தனி இடம் இருக்கிறது என்பதை நம்மால் மறுக்க முடியாது. 47 ஆண்டுகளாக தன் இசையின் மூலம் அனைவரையும் கட்டிப்போட்டுள்ளார். இவர் பற்றி பல தவறான பிம்பங்களும் இருந்து வருகிறது.

அதாவது இவர் ரொம்பவும் கோபக்காரர், ஆணவக்காரர், பொறாமைக்காரர், அடுத்தவர்களின் வளர்ச்சி இவருக்கு பிடிக்காது என்பது போன்ற பல குற்றச்சாட்டுகள் இவர் மேல் இருக்கிறது. ஆனால் உண்மையில் அவர் அப்படிப்பட்டவர் கிடையாது என்று இயக்குனரும், தயாரிப்பாளருமான தியாகராஜன் குமாரராஜா வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

Also read: அஜித்தின் வாழ்நாள் ஆசை நிறைவேறியது.. அதைப்போல் கனவை நிறைவேற்ற துடிதுடிக்கும் இளையராஜா

அதாவது இவர் தயாரித்திருந்த மாடர்ன் லவ் சென்னை என்ற வெப் சீரிஸ் தற்போது அமேசான் ப்ரைம் தளத்தில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. ரொமான்டிக் ஆந்தாலஜி தொடராக வெளிவந்துள்ள இதை பாரதிராஜா, பாலாஜி சக்திவேல், தியாகராஜன் குமாரராஜா, ராஜுமுருகன், கிருஷ்ணகுமார் ராம்குமார், அக்ஷய் சுந்தர் உள்ளிட்ட ஆறு இயக்குனர்கள் இயக்கியுள்ளனர்.

மேலும் இளையராஜா, யுவன் சங்கர் ராஜா, ஜிவி பிரகாஷ் உள்ளிட்டோர் இதற்கு இசையமைத்துள்ளனர். அதில் இளையராஜாவின் இசை பற்றி இயக்குனர் பெருமையாக பேசியுள்ளார். அதாவது இளையராஜா அனைவராலும் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு இருக்கிறார். அவர் ரொம்பவும் பணிவானவர். உங்கள் புத்திசாலித்தனத்தை அவரிடம் காட்டினால் தவறாகிவிடும்.

Also read: நண்பன் இறந்ததற்கு தாமதமாக வந்த இளையராஜா.. உயிர் போகும் போது வந்ததால் கோபத்தில் பேசிய வாரிசு.!

அதேபோன்று படம் நன்றாக இல்லை என்றால் அதை நேரடியாகவே அவர் சொல்லிவிடுவார். அதன் பிறகு படத்திற்கான வெற்றியை தன் இசையின் மூலம் தேடியும் கொடுத்து விடுவார். நீங்கள் எந்த மாதிரியான இசை படத்திற்கு வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அது அவரிடம் இருந்து நிச்சயம் வந்துவிடும்.

ஆனால் உங்கள் திறமையை பொறுத்து தான் நீங்கள் அவரிடம் இருந்து அதை வாங்க வேண்டும். எப்பேர்பட்ட உயரமாக இருந்தாலும் அதை சாதாரணமாக அடையக்கூடிய இளையராஜா 100 வருடங்கள் கழிந்தாலும் இசையின் மூலம் வாழ்ந்து கொண்டு தான் இருப்பார் என்று அவர் புகழாரம் சூடி உள்ளார். இதன் மூலம் இளையராஜா பற்றி இருந்த தவறான பிம்பமும் மாறி இருக்கிறது.

Also read: சிலிர்க்க வைத்த இளையராஜாவின் 6 பெஸ்ட் படங்கள்.. 47 வருடங்களாக தனித்து நிற்கும் ஜாம்பவான்

- Advertisement -spot_img

Trending News