திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

அப்பத்தாவின் வேற லெவல் என்ட்ரி.. குணசேகரனை கதறவிட்டு வேடிக்கை பார்க்கும் மருமகள்கள்

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில் இன்று வரப் போகிற எபிசோடு சும்மா தாறுமாறாக எகிற வைக்கப் போகிறது. அதாவது அப்பத்தா என்ற கேரக்டர் ஆரம்பத்தில் எதுவுமே பேசாமல் அமைதியாகவே இருக்கிறாரே எப்போது வாய் திறந்து பேசுவார் என்று எதிர்பார்த்து இருந்தோம். அந்த நேரத்தில் அப்பத்தா பேச ஆரம்பித்த பொழுது செம்ம மாஸாக ஒவ்வொரு கதையும் சுவாரஸ்யமாக அமைந்தது.

இதனைத் தொடர்ந்து அப்பத்தா கொஞ்ச நாட்களுக்கு முன்பு கோமா ஸ்டேஜ்க்கு சென்று படுத்த படுக்கையாக ஆகிவிட்டார். இந்நிலையில் புதிதாக முளைத்த ஜீவானந்தம் என்ற ஒரு கேரக்டர் எதற்காக அப்பத்தாவின் கைரேகை எடுத்து சொத்து அனைத்தையும் அவர் பெயரில் மாற்றிக் கொண்டார். குணசேகரனை மட்டும் இல்லாமல் அந்த வீட்டில் இருக்கும் பெண்களையும் தவிக்கவிட்டார் என்பது குழப்பத்திலேயே இருந்தது.

Also read: ஜனனி, ஜீவானந்தத்தை பார்ப்பதற்குள் சக்தி உயிரை விட்டுருவான் போல.. ஓவர் பில்டப் உடம்புக்கு ஆகாது எதிர்நீச்சல்

அப்பொழுது அப்பத்தா எழுந்து வாயைத் திறந்து பேசினால் மட்டும்தான் எல்லாத்துக்கும் தீர்வாக இருக்கும் என்று ஆவலாக எதிர்பார்த்தோம். அது தற்போது நடக்கப்போகிறது. அதாவது அப்பத்தா குணமாகி கண் விழித்து பார்த்ததோடு மட்டுமில்லாமல் வேற லெவல்ல என்ட்ரி கொடுத்து மாசாக உட்கார ஆரம்பித்து விட்டார். இதனை பார்த்த குணசேகரன் இத்தனை நாளாக பட்ட அவமானத்தை மொத்தமாக கொட்டி தீர்க்கும் விதமாக கோபத்தில் பேச ஆரம்பிக்கிறார்.

ஆனால் இதற்கெல்லாம் அசராத அப்பத்தா உனக்கு வச்ச ஆப்பு எப்படி இருக்கு என்று கேட்கும்படியாக அவருடைய பார்வை மரண அடியை கொடுத்திருக்கிறது. இதுல என்னதான் குணசேகரன் துள்ளிட்டு வந்தாலும் நீ எல்லாம் வெத்து வேட்டு தான் என்று கதற விட்டு வேடிக்கை பார்க்கிறார்கள் ரேணுகா மற்றும் நந்தினி.

Also read: அட எதிர்நீச்சல் குணசேகரன் எல்லாம் சும்மாதான்.. இந்த நடிகை இல்லனா சன் டிவி டிஆர்பி இல்லையாம்!

அடுத்ததாக குணசேகரன், அப்பத்தாவை பார்த்து மதுரையில மகாராஜா மாதிரி கெத்தா சுத்திட்டு வந்தேன் என்னைய இப்படி அம்போன்னு அலையவிட்டுட்டியே என்று அப்பத்தாவிடம் கேட்கிறார். அதற்கு ரேணுகா சும்மா பொய் சொல்லிட்டு அலையாதீங்க என்று சொன்னதற்கு தம்பி பொண்டாட்டி என்று கூட பார்க்காமல் கைநீட்டி அடிக்க போகிறார். இந்த நிலைமைதான் நந்தினிக்கும் ஏற்பட்டது.

இப்படி தொடர்ந்து குணசேகருடைய அட்டூழியம் அராஜகம் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே தான் இருக்கிறது. ஆனாலும் என்னதான் துள்ளினாலும் இனி உன்னுடைய ஆட்டம் அவ்வளவுதான் என்று சொல்லும் அளவிற்கு ஜீவானந்தம் மற்றும் அப்பத்தாவின் அதிரடியான செயல்கள் இனிதான் ஆரம்பமாகப் போகிறது.

Also read: நிஜத்திலும் நாக்கில் நாட்டியம் ஆடிய சனி பகவான்.. எதிர்நீச்சல் குணசேகரனுக்கு வந்த வக்கீல் நோட்டீஸ்

- Advertisement -

Trending News